Thursday, January 30, 2020

காத்தான்குடி கோட்ட ஸாவியா வித்தியால வலய மட்ட வெளிவாரி மதிப்பீடு 30.01.2020

30.01.2020 அன்று மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் வலய மட்ட  வெளிவாரி மதிப்பீடு காத்தான்குடி கோட்ட மட்/மம/ஸாவியா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. 

இதனை வலயக்கல்விப் பணிப்பாளர்திரு.எஸ்.எம்.எம்.எஸ்.டொக்டர் உமர் மௌலான (SLEAS)  அவர்கள் நெறிப்படுத்தியிருந்தமையோடு  கல்வி அபிவிருத்திக்குப் பொறுப்பான பிரதிக்கல்விப் பணிப்பாளர் திரு. MH.றமீஸ் (SLEAS) அவர்கள், மற்றும் கல்வி முகாமைத்துவத்திற்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர்  திரு.VTM.அஜ்மீர் (SLEAS) ஆகியோர் வழிநடாத்தியிருந்தார்கள்.

இதில் பாடசாலையின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் மேற்பார்வை செய்யப்பட்டமையோடு, பாடசாலையின் நிர்வாக விடயங்களும் உத்தியோகத்தர்களினால் ஆராயப்பட்டு வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டன.

கல்வி அபிவிருத்திக்குப் பொறுப்பான திரு. MH.றமீஸ் (SLEAS) அவர்கள் கடந்த காலங்களில் தங்களினால் வழிகாட்டப்பட்ட விடயங்கள் பாடசாலையில் அமுல்படுத்தப்பட்டிருப்பதனை பாராட்டியமையோடு, மேலும் இப்பாடசாலையில் வளர்ச்சியில் அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டியதன் அவசியப்பாட்டினை தெளிவுபடுத்தியிருந்தார்

கல்வி முகாமைத்துவத்திற்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர்  திரு.VTM.அஜ்மீர் (SLEAS) அவர்கள் வலயத்தின் முன்னுதாரணமாக செயற்படத்தக்கதொரு பாடசாலையாக இப்பாடசாலை செயற்படுகின்றது என்றும், அதற்கு உறுதுணையாக தாங்கள் எப்பொழுதும் வழிகாட்டுவதற்கு தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இம்மேற்பார்வையில்  பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள், உதவிக்கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக்கல்விப்பணிப்பாளர், ஆசிரிய ஆலோசகர்கள் , பாட இணைப்பாளர்கள், தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் ஆகியோர் இணைந்துகொண்டனர்.

வலயக் கல்விப் பணிப்பாளர் அவர்களின் வழிகாட்டலின் கீழ் தற்பொழுது மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் தனது முன்னேற்ற கரமாண நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றமை இங்கு அவதானிக்கத்தக்க விடயமாகும்.

இம்மதிப்பீட்டுச் செயற்பாட்டின் போது பாடசாலை 72 புள்ளிகளைப் பெற்றுக்கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

Thursday, January 23, 2020

2020ம் ஆண்டிற்கான முதாலாவது வலயமட்ட வெளிவாரி மதிப்பீடு - 23.01.2020

23.01.2020 அன்று மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் வலய மட்ட 2020ம் ஆண்டிற்கான முதாலாவது  வெளிவாரி மதிப்பீடு ஏறாவூர் கோட்ட மட்/மம/முனீரா பாலிகா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. 

இதனை வலயக்கல்விப் பணிப்பாளர்திரு.எஸ்.எம்.எம்.எஸ்.டொக்டர் உமர் மௌலான (SLEAS)  அவர்கள் நெறிப்படுத்தியிருந்தமையோடு  கல்வி அபிவிருத்திக்குப் பொறுப்பான பிரதிக்கல்விப் பணிப்பாளர் திரு. MH.றமீஸ் (SLEAS) அவர்கள், மற்றும் கல்வி முகாமைத்துவத்திற்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர்  திரு.VTM.அஜ்மீர் (SLEAS) ஆகியோர் வழிநடாத்தியிருந்தார்கள்.

பாடசாலைகளில் தற்போதைய நடைமுறைகள் தொடர்பான அறிவுரைகளும், ஆளுமை மிக்க மாணவர்களை கட்டியெழுப்புவதற்கு ஆசிரியர்களின் வகிபாகம் என்னவென்ற விடயங்கள் தொடர்பான விளக்கமும் தேர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்ட மாணவர்களை எவ்வாறு நாம் உருவாக்க முடியும் என்ற விடயங்கள் தொடர்பான வழிகாட்டுதல்களும் வலக்கல்விப் பணிப்பாளர் அவர்களினால் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது.

வலயத்தின் மேம்பாட்டிற்கும் , கல்வி அவிருத்திக்கும் அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டியதன் அவசியம் பற்றி வலயக்கல்விப் பணிப்பாளர் அவர்கள் வலியுறுத்தியிருந்தார்கள்.

இம்மேற்பார்வையில்  பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள், உதவிக்கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக்கல்விப்பணிப்பாளர், ஆசிரிய ஆலோசகர்கள் , பாட இணைப்பாளர்கள், தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் ஆகியோர் இணைந்துகொண்டனர்.

இம்மதிப்பீட்டுச் செயற்பாட்டின் போது பாடசாலை 79 புள்ளிகளைப் பெற்றுக்கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

  தேசிய கல்வி நிறுவகத்தின் பாரம்பரிய மற்றும் வெளிநாட்டு மொழிகள் பிரிவின் ஊடாக அரபு மொழிப் பாடத்திற்கான மொடியூல் தயாரிக்கும் செயற்திட்டத்திட...