Monday, February 12, 2018


கற்றல் விருத்தியில் பிள்ளைநேயப் பாடசாலைகளின் பங்களிப்பு

 

சமகால கல்விச் செல்நெறியானது தேர்ச்சிமையம் , மாணவர்மையம்    என்ற சொற்பிரயோகத்துடனும். தரமான கல்வி ,விழுமியக் கல்வி, வாழ்வதற்கான கல்வி என்ற கோட்பாடுகளுடனும் வளர்ச்சி பெற்றுச் செல்கிறது. மாணவகளின் உரிமைகள் தொடர்பாக அதிக கவனம் செலுத்தும் அரசு நிறுவனங்கள் பாடசாலைகள் என்பன மாணவர்கள் எவ்விதம் கையாளப்படல்வேண்டும் என்ற கரிசனை ஒன்றை எம்மனைவருக்கும் உணர்த்துகின்றன. சமுதாயம் ஒன்றின் எழுச்சி குறித்து விழிப்புடன் செயற்படும் அனைவரும் இம்மாணவர்கள் குறித்தும் அவர்களின் கற்றல் செயற்பாடு குறித்தும் கவனம் செலுத்துவது இயல்பானதாகும். இவ்விதம் மாணவர்மீதான கரிசனையும் எதிர்பார்ப்பும் எதிகால உலகொன்றின் இருப்பு தொடர்பானதும் நிலைத்திருத்தல் தொடர்பானதுமான சிந்தனையின் பிரதான வெளிப்பாடாகும்.
சிறுவர் நேயம்  தொடர்பான விழிப்புணர்வு எமது நாட்டிலும் (இலங்கையில்) தாக்கத்தினை உண்டுபண்ணியுள்ளது. சிறுவர்மீதான வன்கொடுமைகள்அநீதிகள் துஷ்பிரயோகங்கள் குறித்து தகவல் தொடர்பாடல் ஊடகங்கள் உண்மைகளை வெளிக்கொணர்ந்தவண்ணமுள்ளன. இவை சிறுவர் காப்பாற்றப்படவேண்டியதன் முக்கியத்துவத்தை எமக்கு உணர்த்துகின்றது. இந்நிலையின் ஒரு பாதுகாப்பான ஏற்பாடாகவே அரசு சிறுவர் நேய அணுகுமுறைகளை பாடசாலைகளில் மேற்கொள்வதற்கான விசேட வழிமுறைகளையும் பொறிமுறைகளையும் ஏற்பாடக்கியுள்ளது.

சிறுவர் உரிமைகள் குறித்து சொல்லப்படும் சாசனங்கள்.

(சிறுவர் உரிமை பற்றிய சமவாயம் - UN convention on the right of the child - 1989)

சிறுவர் உரிiகைள் சாசனத்தில்  42 உறுப்புரைகளில் சிறுவர் உரிமைகள் குறித்து விபரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில இங்கு தரப்படுகின்றன.
சிறுவர்கள் எனப்படுவோர் 18 வயதிற்குட்பட்டோர் ஆவர்.(உறுப்புரை 1)
பாகுபாடு காட்டாமை. (உறுப்புரை 2)
பிள்ளைகளின் சிற்ந்த நலன் (உறுப்புரை 3)
உயிர்வாழ்வதற்கான உரிமை. (உறுப்புரை 6)
பெற்றோர்களுடன் சேர்ந்து வாழ்வதற்கான உரிமை(உறுப்புரை 9)
கருத்து தெரிவிப்பதற்கான உரிமை (உறுப்புரை 13) 
சிந்தனைää மனச்சாட்சிää மதம் என்பதற்கான உரிமை (உறுப்புரை 14) 
ஒருங்கு சேர்வதற்கான உரிமை (உறுப்புரை 15) 
அந்தரங்கத்திற்கான உரிமை (உறுப்புரை 16) 
உடல் மற்றும் உள பாதுகாப்பு மற்றும் புறக்கணிப்பு என்பவற்றிலிருந்து     
         பாதுகாத்தல் (உறுப்புரை 19) 
இயலாமையுடைய பிள்ளைகள் ää விசேட பராமரிப்பு. கல்வி மற்றும்
         பயிற்சி பெறும் உரிமையுடையவர்கள் (உறுப்புரை 23) 
சுகாதராரம் மற்றும் வைத்திய உதவியைபெறும் உரிமை (உறுப்புரை 24)
கல்விக்கான உரிமை (உறுப்புரை 28) 
ஓய்வு பொழுதுபோக்கு என்பவற்றுக்கான உரிமை (உறுப்புரை 31)
ஆரோக்கியம்ää கல்வி மற்றும் வளர்ச்சி என்பவைகளைப் பாதிக்கும் 
         வேலைகளில் அமர்த்துவதிலிருந்து பாதுகாப்பு(உறுப்புரை 32) 
தீங்கான வேலைகளில் அமர்த்துவதிலிருந்தான பாதுகாப்பு (உறுப்புரை 33) 
பாலியல் சுரண்டலில்; இருந்து பாதுகாப்பு (உறுப்புரை 34) 
;திரைவதையில் இருந்தான பாதுகாப்பு (உறுப்புரை 37) 
போரில் ஈடுபடுவதிலில் இருந்தான பாதுகாப்பு (உறுப்புரை 38) 

மேற்குறித்த உரிமைகளைக் கொண்டு பாடசாலைகளுக்கு வரும் மாணவர்களுக்கு  வழங்கவேண்டிய கல்வியானது நல்ல நடத்தை மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு சிறுவர் நேய அணுகுமுறைகளை  காடைப்பிடித்தல் வேண்டும். சரீர ரீதியானää உளரீதியான தண்டனைகளை ஆசிரியரோ அதிபரோ  பாடாசலைகளில் வழங்க முடியாது. மேலும் கட்டாயக் கல்வி வயதெல்லை 14 ஆகஇருக்கும் நிலையில் பிள்ளைகளை வேலைக்கமர்துதல்ää பிச்சை எடுக்கவைத்தல் ஆபாசா காட்சிகளைப் பார்க்கச்செய்தல்ää ஆபாசப் பட்ங்களை எடுப்பதுää கொடுமைப்படுத்துவது போன்ற விடயங்களை அறியும் பட்சத்தில் அதற்கெதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வது கல்விச் சமூகத்தின் கட்டாக பணியாகும்.

சிறுவர் நேயப் பாடசாலைகள் 

இல்கையில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் சிறுவர் நேயப் பாடாசலைகளாகும்.சிறுவர் நேயப் பாடசாலை என்ற பதம் குறித்து நிற்பதாவது சர்வதேச சிறுவர் உரிமைகள் பிரகடனத்தின்படி “சகல பிள்ளைகளது சகல உரிமைகளையும் செயல் ரீதியல் நிறைவேற்றும் பாடசாலையாகும்”என்பதாகும் இதன் அடிப்பiயில் யுனிசேவினால் வழங்கப்பட்ட கீழ்குறிப்பிடப்படும் ஆறு நியமங்களை அடிப்படையாகக்கொண்டு பாடசாலைகளில் கல்வி முறை செயற்படுத்தப்படல் வெண்டும் என்று சொல்லப்படுகின்றது.

1. உரிமைகளை அடிப்படையாகக்கொண்ட உட்படுத்தல்.
2. ஆண்ääபெண் சமூகவியல்புகளில் கவனம் செலுத்துதல்.
3. பிள்ளைகளின் கற்றல் பேறுகளை விருத்திசெய்தல்.
4. பிள்ளைகளின் ஆரோக்கியத்தையம் கவனிப்பையும் பாதுகாப்பையும் 
        உறுதிப்படுத்தல்.
5. மாணவர்ää குடும்பம் மற்றும் சமூகத்தின் உயிரோட்டமான பங்களிப்பு
6. சிறுவர் நேயக்கொள்கைகள்ääமுறைமைகள்ää பரிச்சயங்கள்
         ஒழுங்குவிதிகள் ஊடாக உதவிபெறல்.
மேற்குறித்த விடங்களில் அரசு அதிக அக்கறைகொண்டுள்ளதுடன் அவற்றிற்கான வழிவகைகளையும் பாடசாலைகளுக் வழங்கிவருகின்றது.
1. உரிமைகளை அடிப்படையாகக்கொண்ட உட்படுத்தல்.
உட்படுத்தல் கல்வி (ஐnஉடரளiஎந நுனரஉயவழைn)
மாணவர்களை வரவளைக்கும் குழு
கட்டாயக் கல்விக்குழு
பாடசாலை அபிவிருத்திக்குழு
பாடசாலைப் பழையமாணவர் சங்கம்.
பாடசாலை முகாமைத்துவக்குழு
பாடசாலை ஒழுக்காற்றுக்குழு
சிறுவர் விளையாட்டு முற்றம்.
சிறுவர் பூங்கா
பாடசாலை வகுப்பறைக் கவின்நிலைபேணல்.முதலான கருமங்கள் 
        பாடாசலை நிர்வாக்த்தினால் மேற்கொள்ளப்படுகின்றன.


2. ஆண்ääபெண் சமூகவியல்புகளில் கவனம் செலுத்துதல்.
பாடாசலைக்கு அனுமதித்தலில் சமவாய்ப் வழங்கப்படுகின்றது.
இணைபாடவிதானச் செயற்பாடுகளில் பால்நிலை வேறுபாடு 
         காட்டப்படாமை
ஆண்கள் பெற்கள் என்ற  வேறுபாட்டுக்கமைவான சீருடை
          வழங்கப்படுகின்றது.
தனியான மலääசல கூட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
விளையாட்டு நிகழ்வுகள்ää மற்றும் போட்டிகளில் பால்நிலை சமத்துவம் 
          பேண்படுகின்றது.
பாடசாலைப் பொதீக வளங்களைக் கையாள்வதில் சமத்துவம் 
         பேணப்படுகின்றது.

3. பிள்ளைகளின் கற்றல் பேறுகளை விருத்திசெய்தல்.
கற்றலுக்கு உதவுவதற்காக பயிற்றப்பட்ட ஆசிரியர்களுஇலவச 
         பாடநூல்களும். சீருடைகளும்.  வகுப்பறை வசதிகளும்.
       விளையாட்டிடங்களும் வழங்கப்பட்டுள்ளன .
வபுப்பறைச் சூழுல் உட்படுத்தலுக்கேற்றவாறு அமைந்துள்ளன.
ஜனநாயக ரீதியான கற்பித்தல் முறைகள் இடம்பெறுகின்றன.
பிரசேச சூழல்ää பண்பாடு போன்றவை பற்றிய அறிவைப் பெற்றுக் 
        கொடுப்பதற்கு பாடசாலைக்கலைத்திட்டம் பொருத்தமாக 
          இசைவாக்கப்பட்டுள்ளது.
வழங்கப்பட்ட வாய்ப்புக்களினூடாக சுய அர்வத்துடன் ஆசிரியர்கள் தமது 
         திறன்களைத் தொடர்ச்சியாக விருத்தி செய்துகொள்வார்கள்.
கற்பித்தலின்போது மாணவர்மைய கற்பித்தல்முறை இடம்பெறும்.
அத்தியாவசியக் கற்றல் தேர்ச்சிகள் முறையாக கணிப்பீடு 
         செய்யப்படுகின்றன. 
சகல மாவர்களும் தேர்ச்சியடையத்தக்க பயனுள்ள முயற்சிகள் 
          மேற்கொள்ளப்படுகின்றன.

4. பிள்ளைகளின் ஆரோக்கியத்தையம் கவனிப்பையும் பாதுகாப்பையும் 
        உறுதிப்படுத்தல்.
சுகாதாரம்ää கவனிப்புää பாதுகாப்புத் தொர்பாக பாடசாலை மட்டத்திலான 
        கொள்ளைகள் உள்ளன.
உணவுää நீர் கழிவக்றறல் வசதிகளோடு பாடசாலைச்சூழல் பாதுகாப்பாகக் 
        பேணிவரப்படுகின்றது.
மாணவர்களுக்கு தேர்ச்சிமையச் சுகாதாரக் கல்வி நடைமுறைப் 
        படுத்தப்படுகின்றன.
துன்புறுத்தல்ää துஷ்பிரயோகங்களில் இருந்து பாதுகாப்பதற்கான 
        ஏற்பாடுகள் உள்ளன.
அனர்த்த முகாமைத்துவ திட்டமிடல் உள்ளன. அது நடைமுறைப் 
          படுத்தப்படுகின்றது.

5. மாணவர்ää குடும்பம் மற்றும் சமூகத்தின் உயிரோட்டமான பங்களிப்பு
பிள்ளைகளின் பெற்றோர்கள்ää சமூகத்தினர்ää நலன்விரும்பிகளின் 
        பயனுள்ள பங்களிப்பு பெறப்படுகின்றது
பாடசாலை அபிவிருத்தி திட்டம்  மேற்கொள்ளப்படுகின்றது. 
கிரமா அலுவலகர். சமூகத்தலைவர்கள்ää பிரதேச அலுவலகத்தினர். 
        காவல்துறையினர் பிள்ளைகளைப் பாசாலைக்கு வருவதற்கான 
        ஒத்துளைப்பிளை வழங்குகின்றனர்.
பாடசாலைன் அனைத்து நிகழ்வுகளிலும் பெற்றோர் நலன்விரும்பிகள் 
       பங்களாளிகளாக உள்ளனர்.
போக்குவரத்து துறை மாணவர்களுக்கு கட்டணக்குறைப்பு செய்துள்ளது.
இலவச சுகாதார மருத்துவ உதவிகள் வழங்கப்படுகின்றன.


6. சிறுவர் நேயக்கொள்கைகள்ääமுறைமைகள்ää பரிச்சயங்கள் 
         ஒழுங்குவிதிகள் ஊடாக உதவிபெறல்.
அரச கொள்கைகளும்ää சட்ட திட்டங்களும்ää அவற்றை 
         நடைமுறைப்படுத்துதலும் சிறுவர் நேயப்    பாடசாலை அபிவிருத்திக்கு 
        உதவும்.
குறித்த சகல அரச நிறுவனங்களுக்கிடையில் சகல நிலைகளிலும் 
          பயனுள்ள இணைப்புக் காணப்படும்.
நிதி வளங்கள் பல்வேறு நிலைகளிலும் பொருத்தமாகப் 
          பயன்படுத்தப்படும்.
சகல நிலைகளிலும் தரமான தொழில்நுட்ப உதவித் தொகுதிகள் 
         காணப்படும்.
கலைத்திட்டத்திலும் பாடநூல்களிலும்ää ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டிகளிலும் சிறுவர் நேயக் கோட்பாடு அடங்கியிருக்கும். 
இச்சிறுவர் நேய அணுகுமுறையைப் பேணுகின்ற தன்மையானது மாணவர் கல்வி அபிவிருத்தியில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. உளவியல் ரீதியானதும்ää உரிமையை அடிப்படையாகக்கொண்டதும்ää உட்படுத்தலை மையமாகக் கொண்டதுமான ஒரு கற்பித்தல் நடவடிக்கை மாணவர்களுக்கு கற்றலில் ஆர்வத்தை உண்டுபண்ணுவதுடன் அறிவியல் வளர்சிக்கும் ஆளுமை விருத்திக்கும் ஊக்கியாக உள்ளது. 

இலங்கைக் கல்வி முறைமை இறுதிலில் பரீட்சை மையமானதாகையால் க.பொ.த.(சா.த)ääக.பொ.த.(உ.த) புள்ளிப்பெறுபேறுகளில் அதிக மதிப்பெண்களை எடுக்கவைக்கிறது. நவீன இலத்திரனியல் கருவிகளின் பயன்பாடு கற்றல் கற்பித்தல் அணுகுமுறைகளில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றவகையில் கல்வித்தர மேம்பாடு என்பது சாத்தியமானதாகின்றது. இலங்கை மக்களின் கல்வி அறிவு  வீதம்ää வாழ்க்கைத்தர மேம்பாடுää சுகாதாரமேம்பாடு முதலானவைகள் இத்தகைய பிள்ளை மையக் கற்றல் நடவடிக்கையால் சாத்தியமாகின்றது. எனவே சிறுவர் நேயப் பாடசாலைகள் பல நன்மைகளை கல்வித்துறைக்கு ஏற்படுத்துகின்றன.
சிறுவர் நேயப் பாடசாலைகளால் கிடைக்கும் நன்மைகள்.
மாணவர்கள் தமது தனிப்பட்ட திறன்களையும் ஆளுமைகளையும் உயர்ந்தபட்சமாக வெளிப்படுத்தக்தக்க சூழலை இப்பாடசாலைகள் வழங்குகின்றன.
ஆண்களைப் பெண்களும்  பெண்களை ஆண்களும் சமத்துவத்தினூடு மதிக்கவேண்டிய உரிமையை கற்பதற்கான வசதியை ஏற்படுத்திக்கொடுக்கின்றது.
பாடசாலைகளில் இருக்கின்ற  சட்டத்தையும்ää ஒழுங்கையும் மதிக்கின்ற தன்மையை வழங்குகிறது.
பாடசாலைபோன்று வெளிஉலகில் இருக்கின்ற சட்டதிட்டங்களை மதிக்கின்ற கட்டுப்படுகின்ற கற்கையை வழங்குகிறது.
இடைவிலகும் மாணவரகளின் விகிதாசாரத்தைக் குறைக்கின்றது.
தவறான பழக்கவழக்கங்களில் ஈடுபடவதனால் ஏற்படும் பாதிப்புக்களை தெளிவுபடுத்துகின்றது.
ஆசிரியர்களுடனான நட்புறவை வளர்க்கின்றது.
பல்வேறு விதமான இடைவினைத்தொடர்புகளை ஏற்படுத்துகின்றது.
பாடசாலையானது ஒரு களிப்பிற்குரிய இடமாக மாற்றுகின்றது.
ஒன்றுபட்ட சமூகமொன்றைக் கட்டியெழுப்புகின்றது.
கலாசார விழுமியங்களைக் கற்று;ககொடுக்கின்றது.
இவ்விதம் எண்ணற்ற நன்மைகளை சிறுவர்நேயப் பாடசாலைகள் வழங்குவதால் மாணவர்களின் கல்வி அபிவிருத்தி மேம்பட உதவுகின்றது. 

No comments:

Post a Comment

  தேசிய கல்வி நிறுவகத்தின் பாரம்பரிய மற்றும் வெளிநாட்டு மொழிகள் பிரிவின் ஊடாக அரபு மொழிப் பாடத்திற்கான மொடியூல் தயாரிக்கும் செயற்திட்டத்திட...