Saturday, March 17, 2018



காத்தான்குடி அல்அமீன் வித்தியாலய வலயமட்ட வெளிவாரி மதீப்பீடு - 2018




15.03.2018அன்று மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி பாடசாலைகளுக்கிடையிலான கோட்டமட்ட மதிப்பீட்டு நடவடிக்கை மட் / மம / அல் - அமீன் வித்தியாலயத்திற்கு நடைபெற்றது.  இதனை பிரதிக்கல்விப் பணிப்பாளர் திருமதி. எம்.ஏ.றிஸ்மியா பானூ (கல்வி அபிவித்தி)  அவர்கள்  வழிநடாத்தியதோடு, ஏனைய பிரதிக்கல்விப் பணிப்பாளர் திருமதி. எம்.ஜே.எப்ஃ.றிப்கா  (கல்வி திட்டமிடல்), உதவிக்கல்விப்பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள்,  ஆகியோர் இம்மேற்பார்வை நடவடிக்கையில் இணைந்துகொண்டனர்.

  இதில்  பிரதிக்கல்விப் பணிப்பாளர் திருமதி. எம்.ஏ.றிஸ்மியா பானூ  அவர்களால்  பாடசாலையின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கையினை சிறப்பான முறையில் மேற்கொள்வதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை தமது பாடசாலையில் வழங்க வேண்டும் என்ற கருத்துக்கள் ஆசிரியர்களுக்கு முன்வைக்கப்பட்டன.

மேலும் இப்பாடசாலையானது கடந்தகாலம் 60 புள்ளிகளைப் பெற்றிருந்ததோடு, இம்முறை மேற்பார்வையின் போது 61 புள்ளிகளைப் பெற்றுக்கொண்டது.

 இம்மேற்பார்வையின் போது காத்தான்குடி கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு.எம்.ஏ.சீ.எம்.பதுர்தீன், உதவிக்கல்விப் பணிப்பாளர் டீ.எம்.எஸ்.அஹமட் (கணிதம்) ஆகியோரால் ஆசிரியர்களின் எதிர்கால நடவடிக்கைகளை எவ்வாறான முறையில் செய்ய வேண்டுமென்ற வழிகாட்டல் வழங்கப்பட்டது.



No comments:

Post a Comment

  தேசிய கல்வி நிறுவகத்தின் பாரம்பரிய மற்றும் வெளிநாட்டு மொழிகள் பிரிவின் ஊடாக அரபு மொழிப் பாடத்திற்கான மொடியூல் தயாரிக்கும் செயற்திட்டத்திட...