Monday, April 15, 2019

உளவளத்துணை, தொழில் வழிகாட்டல் மற்றும் இலகுமுறையில் சிங்களம் கற்பதற்கான செயலமர்வு - 2019













கடந்த 11- 12 ஏப்ரல் 2019 அன்று இரு நாட்கள் நீர் கொழும்பு பலவத்துரையில் அமைந்துள்ள அல்பலாஹ் கல்லூரயில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களை விழிப்பூட்டும் விதமாக செயலமர்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இச்செயலமர்வானது பாடசாலையின் நலன் விரும்பிகளில் ஒருவரும், பழைய மாணவருமான எஸ்.எம்.பைரூஸ் (Fairoos Learners) அவர்களின் முயற்சினாலும், இவ்வித்தியாலயத்தின் அதிபர் எம்.எம்.எம்.கஸ்ஸாலி அவர்களின் வழிகாட்டலிலும்,  உப அதிபரான எம்.ஜே.எம்.அஜ்மல்  அவர்களின் தலைமையிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன் வளவாளராக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தினதும், காத்தான்குடி ஆசிரிய மத்திய நிலையத்தினதும்  உளவளத்துணை மற்றும் தொழில் வழிகாட்டல் அதிகாரியான திரு.ஏ.எல்.எம்.றிஸ்வி அவர்கள் கலந்து கொண்டார்கள்.

இதன் பங்குபற்றுனர்களாக இப்பாடசாலையின் தரம் 09, தரம் 10, தரம் 11, தரம் 13 மாணவ மாணவியரும், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரும் கலந்துகொண்டனர்.

தரம் 09 மாணவர்களுக்கு தொகுதிப்பாடங்களை தெரிவு செய்வதன் ஊடாக இலகுமுறையில் பல்கலைக்கழகம் மற்றும் கல்விக்கல்லூரிகளுக்கான அனுமதிகளை எவ்வாறு நாம் எதிர்காலத்தில் பெறமுடியும் என்ற வழிகாட்டல் வழங்கப்பட்டது.

மேலும் தரம் 10, தரம் 13 மாணவர்களுக்கு NVQ பாடநெறி என்றால் என்ன? இதனை கற்பதன் மூலம் எதிர்கால தொழில் உலகில் நாம் எவ்வாறான வேலைவாய்ப்புக்களைப் பெற முடியும் என்ற வழிகாட்டல்கள் வழங்கப்பட்டது.

ஆசிரியர்களுக்கு உளவளத்துணை என்றால் என்ன ? மற்றும் கல்வி அமைச்சின் ஊடாக பாடசாலைகளில் எவ்வாறான முறையில் உளவளத்துணை மற்றும் தொழில் வழிகாட்டல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. தமது பாடசாலையில் இச்செயற்பாட்டினை சிறப்பான முறையில் எவ்வாறு முன்னெடுப்பது என்றும் இலகுமுறையில் மாணவர்களுக்கு சிங்கள அறிவினை எவ்வாறு வழங்க முடியும் என்ற வழிகாட்டலும் வழங்கப்பட்டது.

பெற்றோர்களுக்கு தங்களது பிள்ளைகளை எவ்வாறு கையாளுவது எனவும் அவர்களின் கல்விக்கான வழிகாட்டுதல்களை தங்களால் எவ்வாறு வழங்கமுடியும் என்ற வழிகாட்டுதல்களும்  வளவாளர் அவர்களினால் வழங்கப்பட்டது.

இறுதியாக ஆசிரியர்களினாலும் பெற்றோர்களினாலும் இச்செயலமர்வு சிறப்பான அமைந்திருந்ததாக கருத்துக்கள் கூறப்பட்டமையோடு எதிர்வரும் காலத்தில் இன்னும் இருநாட்கள் இதனை தங்களுக்கு ஒழுங்கு செய்து தர வேண்டுமென்ற கோரிக்கை விடுக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
இளம் கண்டு பிடிப்பாளர்களுக்கான கருத்தரங்கு- 2019






     கடந்த 04.04.2019 அன்று மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி கோட்ட பாடசாலையான பூநொச்சிமுனை இக்பால் வித்தியாலயத்தில் கல்வி அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய இளம் கண்டு பிடிப்பாளர்களை ஊக்குவிப்பதற்கான கருத்தரங்கு நடைபெற்றது.

         இதில் காத்தான்குடி ஆசிரிய மத்திய நிலையத்தின் உளவளத்துணை மற்றும் தொழில் வழிகாட்டல் அதிகாரியான ஏ.எல்.எம்.றிஸ்வி அவர்கள் மாணவர்களுக்கு கண்டு பிடிப்பின் அவசியம், கல்வி அமைச்சு எவ்வாறான விடயங்களை இதன் மூலம் மாணவர்களிடம் எதிர்பார்க்கின்றது என்ற விடயங்களை தெரிவுபடுத்தி உரையாற்றுவதனை நாம் மேலே காணலாம்.

  தேசிய கல்வி நிறுவகத்தின் பாரம்பரிய மற்றும் வெளிநாட்டு மொழிகள் பிரிவின் ஊடாக அரபு மொழிப் பாடத்திற்கான மொடியூல் தயாரிக்கும் செயற்திட்டத்திட...