Monday, November 4, 2019

மட் / மம / காங்கயனோடை அல்அக்ஸா வித்தியாயலயத்தின் தேசிய வாசிப்பு வாரம் - 2019









பாடசாலை மாணவர்களின் கற்றல் மற்றும் தேடல் ஆர்வத்தினை தூண்டும் விதமாக கல்வி அமைச்சினால் தேசிய ரீதியில் பாடசாலை மட்டத்தில் தேசிய வாசிப்பு வார நிகழ்வுகள் கொண்டாடப்பட்டன. 

இதன் தொடரில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.எஸ்.எம்.எம்.எஸ்.டொக்டர் உமர் மௌலானா (SLEAS)  அவர்களது வழிகாட்டலில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயப் பாடசாலைகளிலும் இவ்வேலைத்திட்டம் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டது. 

காத்தான்குடி கல்விக் கோட்ட காங்கயனோடை அல்-அக்ஸா வித்தியாலயத்தில் அதன் அதிபர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பங்கேற்புடன் இவ்வாசிப்பு வார நிகழ்வு கடந்த 31.10.2019 அன்று நடைபெற்றது. 

இதில் காத்தான்குடி ஆசிரிய மத்தி நிலையத்தின் தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.றிஸ்வி அவர்களினால் கல்வி அமைச்சின் ஊடாக மாணவர்களின் கற்றல், தேடல் ஆர்வத்தினை அதிகரிக்கும் விதமாக நடைமுறைப்படுத்தப்படுகின்ற இந்த தேசிய வேலைத்திட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் மாணவர்களின் எதிர்கால கல்வி அறிவினை விருத்தி செய்வதற்கு வாசிப்பு எவ்வளவு தூரம் அவசியம். என்ற கருத்தாடல்கள் எடுத்துரைக்கப்பட்டன. கற்றல் மேம்பாட்டில் மாணவர்களின் வாசிப்பு எவ்வளவு தூரம் முக்கியத்துவம் வாய்ந்தது என்ற விடயங்களும் எடுத்துரைக்கப்பட்டது. 

இவ்வித்தியால அதிபர் ஏ.ஸி.ஆதம் அலி அவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள் இந்த நிகழ்வினை நடாத்துவதற்கு உதவி புரிந்த வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.எஸ்.எம்.எம்.எஸ்.டொக்டர் உமர் மௌலானா (SLEAS) அவர்களுக்கும், இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தரான  ஏ.எல்.எம்.றிஸ்வி அவர்களுக்கும், நன்றிகளையும் வாழ்த்துக்களினையும் தெரிவித்தார்கள்

வலயக் கல்விப் பணிப்பாளர்  அவர்கள் மாணவர்களின் முன்னேற்ற நடவடிக்கைகளுக்கு தங்களது உத்தியோகத்தர்களுக்கு வழிகாட்டி பாடசாலையில் கற்றல் மற்றும் ஆளுமை விருத்திச் செயற்பாடுகளுக்கு ஊக்கமும், ஒத்தாசையும், ஒத்துழைப்புக்களும் வழங்குவதனை பாராட்டினார்கள். 

இறுதியாக இதில் வளவாளராக கலந்துகொண்ட தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் அவர்கள் இதற்கான முழு வழிகாட்டுதல்களையும் தமது தற்போதைய வலயக் கல்விப்பணிப்பாளர் அவர்களே வழங்குவதாகவும், இதுவரை காணப்பட்ட வலயக் கல்விப் பாணிப்பாளர்களில் எவரிடமும் காணப்படாத தனித்துமும், ஆளுமையும் , தூர நோக்கும் கொண்ட வலயக் கல்விப்பணிப்பாளராக தற்போதைய வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.எஸ்.எம்.எம்.எஸ்.டொக்டர் உமர் மௌலானா (SLEAS)  அவர்களே தமக்கான நெறிப்படுத்துதல்களினையும், வழிகாட்டலையும்,  உற்சாகத்தினையும்  வழங்குவதாக குறிப்பிட்டார்கள். 

No comments:

Post a Comment

  தேசிய கல்வி நிறுவகத்தின் பாரம்பரிய மற்றும் வெளிநாட்டு மொழிகள் பிரிவின் ஊடாக அரபு மொழிப் பாடத்திற்கான மொடியூல் தயாரிக்கும் செயற்திட்டத்திட...