Thursday, February 22, 2018



பொ / தி / கட்டுவன்வில முஸ்லிம் கணிஸ்ட வித்தியாலய மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு - 2018





நவீன உலகின் தேவைகளுக்கேற்ப எமது தொழிற்துறைகள் எவ்வாறு தெரிவு செய்து கொள்ளலாம்?. இன்றைய தொழிற்துறைகள் என்ன? இத்தொழிற்துறைகளை இலங்கையில் எந்தெந்த நிறுவனங்கள் வழங்குகின்றன என்ற வழிகாட்டல் கருத்தரங்கொன்று பொலன்னறுவை திம்புலாகல கட்டுவன்வில முஸ்லிம்கணிஸ்ட வித்தியாலய க.பொ.சா.தர பாடசாலை மாணவர்களுக்கு காத்தான்குடி ஆசிரிய மத்திய நிலைய தொழில் வழிகாட்டல் அதிகாரி ஏ.எல்.எம்.றிஸ்வி அவர்களால் 22.02.2018 அன்று வழங்கப்பட்டது. இச்செயலமர்வினை இப்பாடசாலையின் தற்போதை அதிபரான திரு.S.M.ராஸிக் பரீட் மற்றும்  விஞ்ஞானப்பாடம் கற்பிக்கும் ஆசிரியரான திரு.A.C..சஜாத் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்வில் இப்பாடசாலையின் முன்னால் அதிபரான திரு.எம்.முகம்மட் தம்பி அவர்களும் கலந்துகொண்டார்கள்.

இதன் போது இதில் வளவாளராக கலந்துகொண்ட திரு.ஏ.எல்.எம்.றிஸ்வி அவர்கள் மாணவர்களுக்கு  தெளிவுரை வழங்குவதனையும், இப்பாடசாலையின் தற்போதைய அதிபர், முன்னால் அதிபர் ஆசிரியர் ஆகியோரையும், மற்றும் இதில்   பங்கேற்ற மாணவர்களையும் நாம்  மேலே காணலாம்.

No comments:

Post a Comment

  தேசிய கல்வி நிறுவகத்தின் பாரம்பரிய மற்றும் வெளிநாட்டு மொழிகள் பிரிவின் ஊடாக அரபு மொழிப் பாடத்திற்கான மொடியூல் தயாரிக்கும் செயற்திட்டத்திட...