Sunday, October 23, 2022

 

தேசிய கல்வி நிறுவகத்தின் பாரம்பரிய மற்றும் வெளிநாட்டு மொழிகள் பிரிவின் ஊடாக அரபு மொழிப் பாடத்திற்கான மொடியூல் தயாரிக்கும் செயற்திட்டத்திட்டம் - 2022

 






தேசிய கல்வி நிறுவகத்தினால் முஸ்லிம் பாடசாலைகளுக்கு அரபு மொழியினை ஒரு பாடமாக கற்பிப்பதற்கான செயத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக முதலாவது மொடியூல் வேலைத்திட்டம் கடந்த 2022.ஒக்டோபர் மாதம் 01ஆம் திகதி காத்தான்குடி ஆசிரியர் வாண்மை அபிவிருத்தி நிலையத்தில் இடம்பெற்றது 

தேசியக் கல்வி நிறுவகத்தின் பாரம்பரிய மற்றும் வெளிநாட்டு மொழிகள் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர்  Ven. Dr. Theripaha Medhankara Thero அவர்களும் இதன் வளவாளர்களும் வருகை தந்திருந்தனர். அவர்களை ஆசிரிய மத்திய நிலையத்தின் விரிவுரையாளர் ALM.றிஸ்வி அவர்கள் வரவேற்பதனைக் காணலாம்

 

Monday, June 14, 2021

இணைய வழி (Online)  மூலமான பாடசாலை மட்ட கல்வி நடவடிக்கைகளும் வலய மட்ட மேர்பார்வையும்  - 14.06.2021




              மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம்  ஏறாவூர்  , கோட்டப்பாடசாலைகளின் இரண்டாம் தவணைக்கான பாடசாலை மட்ட கல்வி நடவடிக்கைகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதற்கான வழிகாட்டல், ஆலோசனைகள் மற்றும் தேவையான நெறிப்படுத்தல்களை வலயக்கல்விப் பணிப்பாளர்  Dr.SMMS.Umar Moulana அவர்களினால் அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் இணைய வழியூடாக வழங்கப்படுகின்றது.

                                     இதில் காத்தான்குடி கோட்டப்பாடசாலைகள் பல தமது கல்வி நடவடிக்கைள் பாதிக்கப்படாத வகையில் மாணவர்களை இணைய வழி கூடாக கற்றல் , கற்பித்தல் நடவடிக்கைகளை நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை செய்துகொண்டிருக்கின்றன.

                               காத்தான்குடி கோட்டப் பாடசாலையான மட் / மம / ஹிழுரிய்யா வித்தியாலய மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை சிறப்பான முறையில் முன்னெடுப்பதற்கு இதன் அதிபர் SI.யஸீர் அறபாத் அவர்களினால் இணைய வழி கற்பித்தல் நடவடிக்கைகள் நடைபெறுவதோடு, இதில் பாடசாலை ஆசிரியர்களும் ஆர்வத்தோடு கலந்து கொண்டு கல்வி அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிமுறைகளைப் பேணி இணைய வழி பாடசாலை கற்பித்தல் செயற்பாடுகளை சிறப்பான முறையில் செய்கின்றனர்.

                   வலய  மற்றும்  கோட்ட மட்ட மேற்பார்வைகள் இணைவழி ஊடாகவும், நேரடியாகவும் நடைபெறுகின்றன. இங்கு இப்பாடசாலையில் அதிபர் தமது கடமையில் ஈடுபட்டிருப்பதனையும், ஆசிரியர்கள் இணைய வழியூடாக கற்பித்தல் நடவடிக்கையினை மேற்கொள்வதனையும், மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் உளவளத்துணை மற்றும் தொழில் வழிகாட்டல் உத்தியோககத்தர் ALM.றிஸ்வி அவர்கள் மேற்பார்வை நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதனையும் இங்கு நாம் மேலே காணலாம்.





Monday, March 22, 2021

 

காத்தான்குடி அஷ்ஷுஹதா வித்தியாலய பாராட்டு விழா 










கடந்த 19.03.2021 வெள்ளிக்கிழமையன்று காத்தான்குடி கோட்ட  அஷ்ஷுஹதா வித்தியாலயத்தில் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பாராட்டு நிகழ்வும், இப்பாடசாலையில் எட்டு வருடங்களாக கற்பித்து தற்போது ஓய்வு பெற்றுள்ள மௌலவி யு.எல்.எம்.ஹாரித் அவர்களை கௌரவிக்கும் நிகழ்வும், மற்றும் இம்முறை பட்டதாரி பயிலுனர்களாக இப்பாடசாலைக்கு நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களை வரவேற்கும் நிழ்வும் வித்தியாலய அதிபர் எம்.ஸி.எம்.முனீர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இதில் பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து சிறப்பித்தமையோடு , இந்நிகழ்வில் அதிதிகளாக காத்தான்குடி கோட்டக்கல்விப் பணிப்பாளர் கலாவுதீன், மற்றும் ஆரம்பக் கல்வி ஆசிரிய ஆலோசகர் அலாவுதீன் மற்றும் உளவளத்துணை தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.றிஸ்வி ஆகியோகர் கலந்து கொண்டனர்.

மாணவர்களுக்கான கௌரவிப்பு நகழ்வும், மற்றும் ஆசிர்யர் பாராட்டு நிகழ்வுகளும் கலந்து கொண்டோரையும் நாம் மேலே காணலாம்.

Thursday, January 28, 2021

 

காத்தான்குடி ஆசிரிய மத்திய நிலையம் சார்பாக வாழ்த்து தெரிவித்தல்




ஏறாவுர் பள்ளவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன தெரிவுக்குழுக் கூட்டம் நேற்று கடந்த 28.01.2021 அன்று நடைபெற்றது. இதில் உறுப்பினர்கள் தெரிவு இடம்பெற்றுள்ளது. இதன் போது ஒவ்வொரு துறைகளுக்குமான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதில் கல்விக் குழுவின் தலைவராக மட்டக்களப்பு மத்தி கல்வி வலத்தினைச் சேர்ந்த TMS..அகமட் SLEAS அவர்களும் , இதன் செயலாளாக காத்தான்குடி ஆசிரிய மத்திய நிலையத்தின் சிரேஸ்ட விரிவுரையாளரான A.றியாஸ் SLTES அவர்களும் தெரிவு செய்யப்பட்டள்ளனர். எனவே இவர்களை எமது நிலையம் சார்பாக வாழ்த்துகின்றோம்.


Monday, January 11, 2021

 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் முன்பள்ளி உதவிக் கல்விப்பணிப்பாளர் SAC. கலீலூர் ரஹ்மான் அவர்களால் வழங்கிவைப்பு 



மட்டக்களப்பு மத்தி கல்வி வலய முன்பள்ளி உதவிக் கல்விப்பணிப்பாளர் அல்ஹாஜ் SAC. கலீலுர் ரஹ்மான் அவர்களின் முயற்சியினால் பௌமி பவுண்டேசனின் பங்களிப்புடனும் கலீல் ஹாஜியாரின் உதவியுடனும் மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. 

கல்குடா, ஏறாவூர் பிரதேசங்களில் உள்ள வறிய மாணவர்களின் கல்வி மேம்பாட்டை கருத்திற்கொண்டு இவ்வுதவிகள் வழங்கி வைக்கப்பட்டன. தொடர்ச்சியாக சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும் உதவிக் கல்விப் பணிப்பாளர் அவர்களின் செயற்பாடுகள் பாராட்டுக்குரியதாகும். 

அதேவேளை, இந்த நெருக்கடியான மற்றும் பொருளாதார வறுமை நிலைமை காணப்படுகின்ற இவ்வேளையில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களிலுள்ள மாணவர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கு இவ்வுதவிகள் நேரடியாக வழங்கி வைக்கப்பட்டமை  சிறந்த  முன்னுதாரணமாகும்.

Wednesday, February 26, 2020

ஆசிரியர்களுக்கான தடைதாண்டல் பயிற்சி வேலைத்திட்டம் - 22.02.2020-24.02.2020











மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி ஆசிரிய மத்திய நிலையமானது கடந்த 22.02.2020- 24.02.2020 வரையான 03 நாட்கள் கொண்ட பயிற்சி வகுப்பினை ஆசிரியர்களுக்காக நடாத்தியது. இதில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தினது தரம் 3 i னைச் சேர்ந்த ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

ஆசிரியர் வாண்மை விருத்திச் செயற்பாடு, ஆசிரியர் ஒழுக்கக்கோவை போன்ற விடயங்கள் பற்றிய விரிவுரைகள் இங்கு இடம் பெற்றன.மாணவர் சமூகத்தோடு இணைந்த கற்றபித்தல் நடவடிக்கையினை வெற்றிகரமாக முன்னெடுப்பது என்ற விடயங்கள் பற்றிய விரிவுரைகளும் இதில் இதன் போது நடைபெற்றது.

இதில் காத்தான்குடி ஆசிரிய மத்திய நிலையத்தின் முகாமையாளர் திரு. A.றியாஸ் (SLTES) அவர்களும், மட்டக்களப்பு ஆசிரிய பயிற்சி கலாசாலையின் முன்னால் அதிபர் திரு.AS.யோகராஜா(SLTES-I) அவர்களும் வளவாளர்களாக கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கான பயிற்சிகளை வழங்குவதனையும் இப்பயிற்சி நெறியில் ஆசிரியர்கள் மகிழ்ச்சியோடு பங்கேற்றிருப்பதனையும் இங்கு மேலே நாம் காணலாம்.


Thursday, January 30, 2020

காத்தான்குடி கோட்ட ஸாவியா வித்தியால வலய மட்ட வெளிவாரி மதிப்பீடு 30.01.2020





30.01.2020 அன்று மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் வலய மட்ட  வெளிவாரி மதிப்பீடு காத்தான்குடி கோட்ட மட்/மம/ஸாவியா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. 

இதனை வலயக்கல்விப் பணிப்பாளர்திரு.எஸ்.எம்.எம்.எஸ்.டொக்டர் உமர் மௌலான (SLEAS)  அவர்கள் நெறிப்படுத்தியிருந்தமையோடு  கல்வி அபிவிருத்திக்குப் பொறுப்பான பிரதிக்கல்விப் பணிப்பாளர் திரு. MH.றமீஸ் (SLEAS) அவர்கள், மற்றும் கல்வி முகாமைத்துவத்திற்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர்  திரு.VTM.அஜ்மீர் (SLEAS) ஆகியோர் வழிநடாத்தியிருந்தார்கள்.

இதில் பாடசாலையின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் மேற்பார்வை செய்யப்பட்டமையோடு, பாடசாலையின் நிர்வாக விடயங்களும் உத்தியோகத்தர்களினால் ஆராயப்பட்டு வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டன.

கல்வி அபிவிருத்திக்குப் பொறுப்பான திரு. MH.றமீஸ் (SLEAS) அவர்கள் கடந்த காலங்களில் தங்களினால் வழிகாட்டப்பட்ட விடயங்கள் பாடசாலையில் அமுல்படுத்தப்பட்டிருப்பதனை பாராட்டியமையோடு, மேலும் இப்பாடசாலையில் வளர்ச்சியில் அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டியதன் அவசியப்பாட்டினை தெளிவுபடுத்தியிருந்தார்

கல்வி முகாமைத்துவத்திற்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர்  திரு.VTM.அஜ்மீர் (SLEAS) அவர்கள் வலயத்தின் முன்னுதாரணமாக செயற்படத்தக்கதொரு பாடசாலையாக இப்பாடசாலை செயற்படுகின்றது என்றும், அதற்கு உறுதுணையாக தாங்கள் எப்பொழுதும் வழிகாட்டுவதற்கு தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இம்மேற்பார்வையில்  பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள், உதவிக்கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக்கல்விப்பணிப்பாளர், ஆசிரிய ஆலோசகர்கள் , பாட இணைப்பாளர்கள், தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் ஆகியோர் இணைந்துகொண்டனர்.

வலயக் கல்விப் பணிப்பாளர் அவர்களின் வழிகாட்டலின் கீழ் தற்பொழுது மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் தனது முன்னேற்ற கரமாண நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றமை இங்கு அவதானிக்கத்தக்க விடயமாகும்.

இம்மதிப்பீட்டுச் செயற்பாட்டின் போது பாடசாலை 72 புள்ளிகளைப் பெற்றுக்கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

  தேசிய கல்வி நிறுவகத்தின் பாரம்பரிய மற்றும் வெளிநாட்டு மொழிகள் பிரிவின் ஊடாக அரபு மொழிப் பாடத்திற்கான மொடியூல் தயாரிக்கும் செயற்திட்டத்திட...