Monday, June 4, 2018

பிஸ்மி அல்குர்ஆன் பாடசாலையின் தரம் 8 மாணவர்களின் ஆசிரியர்களுக்கான இப்தார் நிகழ்வு - 2018







 காத்தான்குடி பிஸ்மி பாடசாலை மாணவர்களினால் 04.06.2018 அன்று இப்தார் நிகழ்வு ஆசிரியர்களுக்காக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. காத்தான்குடி பிரதேசத்தில் மாணவர்களின் கல்வி, மற்றும் ஆன்மீக மேம்பாட்டினை அடிப்படையாகக்கொண்டு கடந்த பல வருடங்களாக பிஸ்மி பாடசாலையானது இயங்கிவருகின்றது. இதில் ஆண் , பெண் மாணவ மாணவியர் பயிற்றுவிக்கப்படுகின்றனர்.

இப்பிரதேசத்தில் மாணவர் பயிற்றுவித்தல் நடவடிக்கையில் பல முன்மாதிரியான செயற்பாடுகளை முன்னெடுத்து வருவது இப்பாடசாலையின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.

இதன் ஒரு அங்கமாக மாணவர்களின் ஆளுமை விருத்தியை  மேம்படுத்தும் விதமாக தரம் 8 மாணவர்கள் கலை நிகழ்ச்சிகளையும், மேடைப் பேச்சுக்களையும் ஒழுங்கு செய்திருந்தனர். இதன் போது இங்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான இப்தார் நிகழ்வும் இம்மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆசிரியர்கள் சார்பாக உரையாற்றிய இப்பாடசாலையின் பணிப்பாளர் நுஸ்ரி நளீமீ அவர்கள் "மாணவர்கள் தமது புறக்கீர்த்திய செயற்பாடுகளில் எவ்வளவு தூரம் ஆர்வம் காட்டுகின்றனறோ அதனையும் விட பண்மடங்கு தமது கற்றல் நடவடிக்கையில் காண்பிக்க வேண்டுமென்றும், ஒரு ஆசிரியர் தமது மாணவனின் கற்றல் மேம்பாட்டின் காரணமாகவும், ஒழுக்கப்பண்பாட்டின் ஊடாகவும் இவர் எனது மாணவர் என்ற பெறுமையினை ஒவ்வொரு மாணவரும் தேடிக்கொடுக்க வேண்டுமென்றும் வேண்டிக்கொண்டார். இதுவே மாணவர்கள் ஆசிரியர்களுக்கு தேடிக்கொடுக்கும் பெறுமையாகும் எனக்குறிப்பிட்டார்கள்.."

இச்சிறுவயதில் இம்மாணவர்களின் இம்முன்மாதிரியான செயற்பாடு அனைத்து ஆசிரியர்களினாலும் பாராட்டப்பட்டது. மேலே நாம் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளையும் , இம்மாணவரிகளினால் ஆசிரியர்களுக்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இப்தார் நிகழ்வினையும்  காணலாம்.

No comments:

Post a Comment

  தேசிய கல்வி நிறுவகத்தின் பாரம்பரிய மற்றும் வெளிநாட்டு மொழிகள் பிரிவின் ஊடாக அரபு மொழிப் பாடத்திற்கான மொடியூல் தயாரிக்கும் செயற்திட்டத்திட...