Wednesday, June 6, 2018

OPEN EDUCATION CENTERன் பெற்றோருக்கான இப்தார் திறக்கும் நிகழ்வுகள்










06.06.2018 அன்று கலாநிதி அலவி ஷரீப்தீன் நளீமீ அவர்களின் தலைமையின் கீழ் இயங்கும் காத்தான்குடி   Open Education Centerன் மாணவர்களின் பெற்றோருக்கான இப்தார் நிகழ்வு இடம்பெற்றது.

காத்தான்குடி பிரதேசத்தில் மாணவர்களின் கற்றல், கற்பித்தல் மற்றும் ஒழுக்கப்பண்பாடுகளை மேம்படுத்தும் விதமாக இந்நிலையமும் இதன் இரு கிளை நிலையங்களும் சிறப்பாக இயங்கி வருகின்றமையோடு அனைவரது கவனத்தினையும் ஈர்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பிட்ட காலத்திற்குள் இந்நிலையங்கள் இப்பிரதேச மக்களின் பாராட்டினைப் பெற்றிருப்பதோடு, மாணவர்களின் கற்றல் மற்றும் ஆண்மீகப் பயிற்சி நெறியில் முன்னேற்றகரமான வேலைத்திட்டங்களை மேற்கொள்கின்றன.

இன்றைய பெற்றோர் ஒன்று கூடலின் போது இந்நிலையப்பொறுப்பாளர் சாகிர் முஸ்தபா அவர்கள் இந்நிலையங்களில் கல்வி கற்கின்ற மாணவர்களின் கற்றல் பெறுபேறுகளை முன்னேற்றம் அடையச் செய்வது போன்று அவர்களது ஒழுக்கப்பண்பாடுகளை மேம்படுத்தும் நோக்கத்தினை அடிப்படையாகக் கொண்டே இந்நிலையங்கள் இயங்குவதாகக் குறிப்பிட்டார். பெற்றோர்கள்  தமது பிள்ளைகளை இவ்விலக்கினை நோக்கிகொண்டு செல்வதற்கு தங்களுக்கு உறுதுணையாகச் செயற்பட வேண்டுமெனவும் வேண்டிக்கொண்டார்.

இந்நிலையத்தின் ஸ்தாபகர் கலாநிதி அலவி ஷரீப்தீன் அவர்கள் மாணவர்களின் இப்தார் மற்றும் ஆன்மீக பயிற்சிகளுக்காக ரூபா பத்து இலட்சம் வரை இம்முறை செலவு செய்திப்பதாக குறிப்பிட்டார். எனவே மாணவர்கள் இவ்வரிய சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தி பயன்பெற வேண்டுமெனவும் வேண்டிக்கொண்டார்.

மற்றுமொரு நிலையப்பொறுப்பாளரும் மனித உரிமை பாதுகாப்பு அதிகாரியுமான திரு.அஸீஸ் அவர்கள் தொடர்ந்து உரையாற்றுகையில் இன்றைய எமது இஸ்லாமிய சமூகத்தின் அவல நிலையினை புள்ளி விபரங்களோடு குறிப்பிட்டமையோடு, இவ்வாறான நிலைகளிலிருந்து இந்நிலையங்களில் கற்கின்ற எமது பிள்ளைகள் பாதுகாக்கப்பட்டு இருப்பது நாம் அனைவரும் செய்த பாக்கிமாகும் எனக்குறிப்பிட்டார்.

எமது பிரதேசத்திலும் மாணவர்களின் ஒழுக்கப்பண்பாடுகள் வீழ்ச்சியடைந்து வருவதானது எதிர்கால சமூகத்தின் அச்சநிலையினை தோற்றுவித்திருக்கின்றது என்ற உண்மைகள் அவரால் தெளிவுபடுத்தப்பட்டது. எனவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து மாணவர்களின் கற்றல் மற்றும் ஒழுக்க மேம்பாட்டிற்கு உழைக்க வேண்டுமெனவும் வேண்டிக்கொண்டார்.

இறுதியாக இந்நிலையத்தின் உயர்ச்சிக்காவும், இதன் ஸ்தாபகர், மற்றும் இதற்காக உழைக்கின்ற அனைவருக்காகவும் இந்நன்னாளில் இறைவனிடம் பிராத்திக்குமாறும் கேட்டுக்கொண்டார். நிகழ்வுகள் யாவும் இப்தார் திறப்புடன் நிறைவுற்றது.

நாம் மேலே இந்நிலையங்களின் பொறுப்பாளர்களினால் பெற்றோர் மாணவர்களுக்கு உரையாற்றப்படுவதனையும், இதில் கலந்துகொண்ட பெற்றோர்கள் மாணவர்களையும் காணலாம்.

No comments:

Post a Comment

  தேசிய கல்வி நிறுவகத்தின் பாரம்பரிய மற்றும் வெளிநாட்டு மொழிகள் பிரிவின் ஊடாக அரபு மொழிப் பாடத்திற்கான மொடியூல் தயாரிக்கும் செயற்திட்டத்திட...