Thursday, June 21, 2018

காத்தான்குடி முஸ்லிம் முதியோர் இல்லத்தின் மர்ஹூம் எம்.ஐ.எம்.நூர்தீன் சட்டத்தரணி அவர்களுக்கான இரங்கல் கூட்டம் - 21.06.2018

காத்தான்குடியைச் சேர்ந்த சிரேஷட சட்டத்தரணியான எம்.ஐ.எம்.நூர்தீன் அவர்கள் கடந்த திங்கள் காலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்து ( 18-06-2018)  இறையடி சேர்ந்தார்.  (இன்னாலில்லாஹி வஇன்னாஇலைகி ராஜிஊன்) 

ஜாமியுழ்ழாபிரீன் பெரிய ஜூம்ஆப்பள்ளிவாயலில் இவரது ஜனாஸா தொழுகை இரவு 10.00 மணியளவில் தொழுவிக்கப்பட்டு இதே பள்ளிவாயல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இவரது ஜனாஸாவில் பெருந்திரளான ஊர் பிரமுகர்கள், கல்விமான்கள், அரசியல் தலைவர்கள், ஆகியோர் கலந்து கொண்டனர். சமூக சேவையாளரான இவர்,  காத்தான்குடியில் முஸ்லிம் முதியோர் இல்லமொன்றினை சிறப்பான முறையில் நடாத்தி வந்தார்.

இவரது மறைவினையொட்டி இம்முதியோர் இல்ல நிருவாக உறுப்பினர்கள் எம்.ஐ.எம்.நூர்தீன் சட்டத்தரணி அவர்களுக்காக இரங்கல் கூட்டமொன்றினை 21.06.2018 அன்று இதன் முதியோர் இல்ல மஸ்ஜிதில் ஏற்பாடு செய்திருந்தனர்.

இதில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன தலைவர். ஏ.எல்.ஆதலெப்பை (பலாஹி)  அவர்களும், ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அப்துல் கையும் ஷர்க்கி  அவர்களும், ஆயுர்வேத வைத்திய அதிகாரியான டொக்டர் ஜலால்டீன் அவர்களும், எம்.ஐ.எம்.நூர்தீன் சட்டத்தரணி  அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

இவ்விரங்கள் உரையின் போது இந்நிலையத்தின் உபதலைவரான  கே.எம்.ஏ.அஸீஸ் அவர்கள் எம்.ஐ.எம்.நூர்தீன் சட்டத்தரணி  பற்றி


தன்னிடம் கற்ற மாணவர்கள் இன்று பல உயர் பதவிகள் வகிக்கின்றனர் என்றும், தான் ஒரு அதிபராக ஓய்வு பெற்றிருந்த போதிலும், நூர்தீன் சட்டத்தரணி அவர்களிடமிருந்து பல விடயங்களை கற்றுக்கொண்டதாகவும் தான் எப்பொழுதும் சட்டத்தரணி அவர்களின் நினைவாற்றல் மற்றும் அறிவாற்றலினைக் கண்டு வியப்படைவதாகவும் குறிப்பிட்டார். 

ஒரு நாள் சட்டத்தரணி அவர்கள் இலங்கையின் சுதந்திர தினத்தினை கேட்டபோது நான் 04.02.1948 எனக் கூறினேன். இந்த தினம் எப்படி இலங்கை அரசினால் அங்கிகரிக்கப்பட்டது என்ற வரலாறு தங்களுக்குத் தெரியுமான என என்னிடம் வினவினார் நான் இல்லை. என்றேன். அப்போது அவர் ஆங்கிலேயர் இலங்கைக்கு சுதந்திரம் வழங்கிய வேளையில் இலங்கைக்கான அரசியல் யாப்பொன்றினை வரைய வேண்டிய தேவை இருந்தது. இதற்கான வரைவினை சேர் ஐவன் ஜெனிஸ் அன்று மேற்கொண்டுள்ளார். எனவே இவரது பிறந்த தினத்தினையே இலங்கையின் சுதந்திர தினமாக வைப்பதற்கு அன்று அனைவரினாலும் கூறப்பட்ட வேளையில் அதற்கு அவர் இந்த அரசியல் யாப்பினை தான் வரைவதற்கு தனக்கு தனது மனைவியியே துணைநின்றவள் என்றும், எனவே அவளது பிறந்த தினத்தினை வைக்குமாறு கூறி அத்தினமே இன்று இலங்கையின் சுதந்திர தினமாக அனைவரினாலும் கொண்டாடப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். 

இத்தகவலை தான் மட்டக்களப்பு கிறீன் காட்ன் ஹோட்டல் சட்டத்தரிணிகள் ஒன்றிணைந்து நடாத்திய ஒரு நிகழ்வில் கூறி விசாரித்த வேளையில் அவர்கள் கூட இவ்வானதொரு வரலாற்றினை அறிந்திராத நிலையினைக் கண்டு ஆச்சரியமடைந்தாக குறிப்பிட்டார்.

ஒம்தாச்சி மடம் என்ற பெயர் வந்தமைக்கான வரலாறு முதியோர் இல்ல நிதி சேகரிப்புக்காக ஒம்தாச்சி மடத்தினை தான்டிச் சென்று கொண்டிருந்தோம்.  அப்போது ஒம்தாச்சி மடம் என்ற பெயர் எப்படி வந்தது என்று தெரியுமா? என என்னிடம் கேட்டார் நான் அதற்கு தெரியாது என்ற போது, ஒரு கிறிஸ்தவ பாதரின் பெயர்தான் அவர் அந்த இடத்தினை ஆலயத்திற்கு வழங்கியமை காரணமாகவே அப்பெயர் அவ்விடத்திற்கு சூட்டப்பட்டடுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பொறளை கணத்தை மைதானம் வரலாறு ' நாங்கள் ஒரு நாள் முதியோர் இல்ல நிதி சேகரிப்புக்காக  கொழும்புக்குச் சென்றிருந்தோம். அவ்வேளையில் சேர் அவர்கள் பொறளை கனத்தை மைதானம் யாருக்குரியது என்று தெரியுமான எனக்கேட்டார் அதற்கு நான் தெரியாதென்ற போது, அது சேர் ராஸிக் பரீட் அவர்களின் குதிரை கட்டுவதற்கான திடல் என்றும் பின்னர் அது கனத்தைக்கு கொடுக்கபட்ட வரலாற்றினையும் தன்னிடம் கூறியாக குறிப்பிட்டார்

இவைபோன்ற பல அரிதான வரலாற்று துணுக்குகளை தன்னிடம் கூறியுள்ளதாகவும் அவைகளை தான் ஒரு தினக்குறிப்பேட்டில் எழுதி வைத்துள்ளேன் என்றும் பிறகொரு சந்தரப்பத்தில் இவற்றினை தெரிவிப்பதாகவும் கூறினார்.

நிதி சேகரிப்புக்குச் செல்கின்ற வேளையில் வீணான செலவுகளை அவர் ஒரு போதும் விரும்பமாட்டார் எனக்குறிப்பிட்டாமையோடு, தனது கொழும்பு வீட்டில் தங்கியிருந்து அதற்கான வசூலுக்கு செல்வார் எனக்குறிப்பிட்டார்.எனவே அவரோடு தோளோடு தோள் நின்று தாம் அனைவரும் உழைத்தமை தமக்கு பெருமையளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்விரங்கள் உரையின் போது இந்நிலையத்தின் உபதலைவரான  மௌலவி எம்.எச்.எம்.இக்பால் (பலாஹி) அவர்கள் எம்.ஐ.எம்.நூர்தீன் சட்டத்தரணி  பற்றி


சட்டத்தரிணி அவர்களை தான் வீணான எந்தவொரு விடத்திலும் அவர் தனது நேரத்தினை செலவு செய்வதனையோ , பிறரைப்பற்றி அரட்டை அடிக்கின்ற எந்தெவொரு செயற்பாடுகளையோ தான் ஒரு போதும் அவரிடம் கண்டெதில்லையெனக்குறிப்பிட்டார்.

சட்டத்தரிணி அவர்கள் ஒருவரோடு நண்பராக இருக்கின்றார் எனில், அவர் ஒரு கல்விமானாக அல்லது கற்றலில் ஆசையுள்ளவராக அல்லது சமூக உணர்வுள்ள ஒருவராக இருப்பார். எனக்குறிப்பிட்டார்.

மேலும் இவர் தனது உரையில் சட்டத்தரணி அவர்களின் மகனான அஹ்மத் நுஸ்கி அவர்கள் நிதி சேகரிப்பில் தனது தந்தையினை விஞ்சும் அளவுக்கு தங்களோடு  தோள் நின்று ஒத்துழைப்பு வழங்குவதாகவும் எதிர்காலத்தில் இந்த தூய பணியில் அவரையும் இணைத்துக்கொண்டு பயணிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டார். 

இதனைத்தொடர்ந்து கலீல் ஆசிரியர் அவர்களினாலும் சட்டத்தரணி அவர்களின் வரலாறு பற்றி கூறப்பட்டது. 


மேலும் குடும்ப அங்கத்தவர்களில் ஒருவரான நஜீர் ஆசிரியர் அவர்களினால்

சட்டத்தரணி அவர்களின் இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்று என்றும், அவரை இறைவன் பொருந்திக்கொண்டுள்ளதன் காரணமாகவே நாம் இன்று அவரது புகழைப் பேசிக்கொண்டிருக்கின்றோம் எனவும், எதிர்கால சந்ததியினருக்கான பல படிப்பினைகளை அவர்கள் எம்மில் விட்டுச்சொன்றுள்ளார் எனவே அவைகளை நாம் எடுத்து நடந்துகொள்வதே அவருக்கு நாம் செய்யும் கைமாறு எனவும் குறிப்பிட்டார்.

செயலாளர் அவர்களின் நன்றியுரை இறுதியாக இந்நிலையத்தின் செயலாளர் காலித் ஆசிரியர் அவர்களினால் நன்றியுரை வழங்கபபட்டது.
தொகுப்பு:- குடும்ப அங்கத்தவர்களில் ஒருவரான ஏ.எல்.எம்.றிஸ்வி (CGO)காத்தான்குடி 







No comments:

Post a Comment

  தேசிய கல்வி நிறுவகத்தின் பாரம்பரிய மற்றும் வெளிநாட்டு மொழிகள் பிரிவின் ஊடாக அரபு மொழிப் பாடத்திற்கான மொடியூல் தயாரிக்கும் செயற்திட்டத்திட...