Friday, August 16, 2019

2ம் தவணைப்பரீட்சையில் 1- 2- 3ம் இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கான மாணவர் முன்னேற்ற அறிக்கை வழங்கும் நிகழ்வு -2019

காத்தான்குடிக்கோட்ட மட்/மம/பூநொச்சிமுனை இக்பால் வித்தியாலத்தில் கடந்த 09.08.2019ல் இரண்டாம் தவணைப் பரீட்சையில் 1ம், 2ம், 3ம், இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு ஏனைய மாணவர்களின் முன்னிலையில் கௌரவிப்பும் , கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று தமது பாடசாலைக்கு சான்றிதழ்களைப் பெற்றுக்கொடுத்த மாணவர்களை கௌவிக்கும் நிகழ்வும் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் பாடசாலையின் வலயமட்ட இணைப்பாளர் திரு.ஏ.எல்.எம்.றிஸ்வி CGO அவர்களும், ஆரம்பக்கல்வி ஆசிரிய ஆலோசகர் திரு.எம்.எல்.அலாவுதீன் அவர்களும், இவ்வித்தியாலயத்தின் அதிபர் திரு.வி.டி.எம்.ஹனீபா அவர்களும் மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வைப்பதனையும், இதில் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளும் மாணவர்களையும், பங்கேற்ற மாணவர்களினையும் இங்கு நாம் காணலாம். 

Sunday, August 11, 2019

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்- 2019

இப்புனித ஹஜ் பெருநாளை கொண்டாடும் அனைத்துலக முஸ்லிம் சகோதரர்களையும், மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் சார்பாக அதன் வலயக் கல்விப் பணிப்பாளர்  எஸ்.எம்.எம்.எஸ்.டொக்டர் உமர் மௌலான (SLEAS)   அவர்களும் அதன் பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள், பிரதேசக்கல்விப் பணிப்பாளர்கள், உதவிக்கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள் அனைவரும் தமது வலயத்தினது அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைரையும் இவ்வினிய நாளில் சுகதேகிகளாகவும், மகிழ்ச்சிகரமாகவும் இப்புனித ஹஜ் பெருநாளை கொண்டாட வாழ்த்து தெரிவிக்கின்றனர்.

மேலும் இப்புனித நாளில் எமது நாட்டு முஸ்லிம்களினதும், உலக வாழ் முஸ்லிம்களினதும் சுபீட்சத்திற்காக பிராத்திக்குமாறும் வேண்டிக் கொள்கின்றனர்.

தகவல்-  TMSஅஹமட் (SLEAS)கோட்டக்கல்விப்பணிப்பாளர் - ஏறாவூர்

Thursday, August 8, 2019

தரம் 03 மாணவர்களுக்கான சிங்கள மொழிப் பயிற்சி கருத்தரங்கு - 2019

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் தரம் 03 மாணவர்களுக்கான சிங்கள மொழி அறிவு விருத்தி வேலைத்திட்டம் கடந்த 08.08.2019 தொடக்கம் 09.08.2019 வரை இரு நாட்கள் ஏறாவூர் கோட்ட பதியுத்தீன் மஹ்மூத் வித்தியாலயத்தில் இடம் பெற்றது.

இதன் மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதல்களை மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.எஸ்.எம்.எம்.எஸ்.டொக்டர் உமர் மௌலான (SLEAS)  அவர்கள் வழங்கினார்கள்.

மேலும்  இணைப்பாளராக ஏ.இப்றாஹீம் (ADE) அவர்கள் செயற்பட்டார்கள். மேலும் இதன் வளவாளர்களாக ஏ.எல்.எம்.றிஸ்வி (CGO)  அவர்களும், எம்.பி.எம்.சித்தீக் (CGO) அகியோரும் காணப்பட்டனர். மேலே மாணவர்களுக்குரிய பயிற்சிகளையும், வழிகாட்டுதல்களினையும் றிஸ்வி அவர்கள் வழங்குவதோடு, மாணவர்கள் உற்சாகமாக செயற்படுவதனையும் நாம் காணலாம்.
தரம் 04 மாணவர்களுக்கான சிங்கள மொழிப் பயிற்சி கருத்தரங்கு - 2019

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் தரம் 04 மாணவர்களுக்கான சிங்கள மொழி அறிவு விருத்தி வேலைத்திட்டம் கடந்த 29.07.2019 தொடக்கம் 30.07.2019 வரை இரு நாட்கள் ஓட்டமாவடிக் கோட்ட அமீர் அலி வித்தியாலயத்தில் இடம் பெற்றது.

இதன் மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதல்களை மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.எஸ்.எம்.எம்.எஸ்.டொக்டர் உமர் மௌலான (SLEAS)  அவர்கள் வழங்கினார்கள்.

மேலும்  இணைப்பாளராக ஏ.இப்றாஹீம் (ADE) அவர்கள் செயற்பட்டார்கள். மேலும் இதன் வளவாளர்களாக ஏ.எல்.எம்.றிஸ்வி (CGO)  அவர்களும், எம்.பி.எம்.சித்தீக் (CGO) அகியோரும் காணப்பட்டனர். மேலே மாணவர்களுக்குரிய பயிற்சிகளையும், வழிகாட்டுதல்களினையும் றிஸ்வி அவர்கள் வழங்குவதோடு, மாணவர்கள் உற்சாகமாக செயற்படுவதனையும் நாம் காணலாம்.
சிறுவர் பாதுகாப்பு விழிப்பூட்டல் செயலமர்வு - 2019

மட்டக்களப்பு மத்தி வலயத்தின் ஓட்டமாவடிக்கோட்ட ஜெயந்தியாய அஹமட் ஹிராஸ் வித்தியாலயத்தில் கடந்தத 27-.07.2019 தொடக்கம் 28.07.2019 வரை சிறுவர் பாதுகாப்பு தொடர்பான இரு நாள் செயலமர்வு நடைபெற்றது. இதில் வளவாளர்களாக வழிகாட்டல் ஆலோசனை ஆலோசகர் எம்.ஆர்.ஜவாத், தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர்களான எம்.பி.எம்.சித்தீக் மற்றும் ஏ.எல்.எம்.றிஸ்வி ஆகியோர் கலந்துகொண்டனர். இதன் போது மேற்படி பாடசாலையின் அதிபர் மற்றும் பயிற்சிகளை வழங்குகின்ற உத்தியோகத்தர்களின் செயற்பாடுகளை நாம் இங்கே காணலாம்.

தரம் 03 மாணவர்களுக்கான சிங்கள மொழிப் பயிற்சி கருத்தரங்கு - 2019

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் தரம் 03 மாணவர்களுக்கான சிங்கள மொழி அறிவு விருத்தி வேலைத்திட்டம் கடந்த 29.07.2019 தொடக்கம் 30.07.2019 வரை இரு நாட்கள் காத்தான்குடிக் கோட்ட பாலமுனை அலிகார் வித்தியாலயத்தில் இடம் பெற்றது.

இதன் மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதல்களை மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.எஸ்.எம்.எம்.எஸ்.டொக்டர் உமர் மௌலான (SLEAS)  அவர்கள் வழங்கினார்கள்.

மேலும்  இணைப்பாளராக ஏ.இப்றாஹீம் (ADE) அவர்கள் செயற்பட்டார்கள். மேலும் இதன் வளவாளர்களாக ஏ.எல்.எம்.றிஸ்வி (CGO)  அவர்களும், எம்.பி.எம்.சித்தீக் (CGO) அகியோரும் காணப்பட்டனர். மேலே மாணவர்களுக்குரிய பயிற்சிகளையும், வழிகாட்டுதல்களினையும் றிஸ்வி அவர்கள் வழங்குவதோடு, மாணவர்கள் உற்சாகமாக செயற்படுவதனையும் நாம் காணலாம்.

Sunday, August 4, 2019

 க.பொ.உயர் தரம் மற்றும் 5ம் தர பரீட்சை எழுதும் மாணவர்களை வாழ்த்துல் -2019

இம்முறை 2019ம் ஆண்டு க.பொ உயர் தரம் மற்றும் 5ம் தர பரீட்சைக்குத் தோற்றும் அனைத்து மாணவ, மாணவிகளும் தமது பரீட்சையில் சிறந்த முறையில் சித்தியடைய வேண்டுமென மட்டக்களப்பு மத்தி வலயத்தின் வலயக் கல்விப்பணிப்பாளர், ,கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள், பிரதிக்கல்விப்பணிப்பாளர்கள், உதவிக்கல்விப்பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் அனைவரும் இம்மாணவர்களை வாழ்த்துகின்றனர்.

தகவல்-  TMSஅஹமட் (SLEAS)கோட்டக்கல்விப்பணிப்பாளர் - ஏறாவூர்

  தேசிய கல்வி நிறுவகத்தின் பாரம்பரிய மற்றும் வெளிநாட்டு மொழிகள் பிரிவின் ஊடாக அரபு மொழிப் பாடத்திற்கான மொடியூல் தயாரிக்கும் செயற்திட்டத்திட...