Friday, September 6, 2019

மட்/மம/காத்தான்குடி ஹிழுறிய்யா வித்தியாலய நற்சிந்தனை நிகழ்வு - 06.09.2019








மட்/மம/காத்தான்குடி ஹிழுறிய்யா வித்தியாலயத்தில் பிரதி வெள்ளிக்கிழமை  தோறும்  மாணவர்களின் கற்றல் ஆர்வத்தினை துலங்கச் செய்யும் நோக்கோடு உலமாக்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் அல்லது துறைசார் உத்தியோகத்தர்களைக் கொண்டு  நற்சிந்தனைகளை வழங்கிவருகின்றனர்.

இதன் தொடரில் கடந்த 06.09.2019 வெள்ளிக்கிழமையன்று மாணவர்களுக்கான நற்சிந்தனையினை காத்தான்குடி ஆசிரிய மத்திய நிலைய மட்டக்களப்பு மத்தி கல்வி வலய தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.றிஸ்வி அவர்களினால் மாணவர்களுக்கான நற்சிந்தனை வழங்கப்பட்டது. 

இதில் கற்றல் இடர்பாடுகளை இல்லாமல் செய்து, சிறந்த கற்றல் நடவடிக்கையில் எவ்வாறு ஈடுபடலாம். எதிர்கால உலகில் கற்றலினால் அடையக்கூடிய பயன்கள் மற்றும் பெற்றோரின் கனவுகளை நனவாக்க நாம் என்ன செய்யலாம் என்ற விடயங்கள் மாணவர்களுக்கு கூறப்பட்டது. 

தற்போதைய அதிபர் S.I.யஸீர் அறபாத் அவர்களின் வருகையின் பின்னர் இப்பாடசாலை  வெற்றிநடை போடுவதோடு சர்வதேச ஒலிம்பியாட் போட்டி, தேசிய மட்ட, மாகாண மட்டப் போட்டிகள் மற்றும் வலய மட்டப்போட்டிகளில் பல சாதனைகளைப் புரிந்து வலயத்திற்கும், பிரதேசத்திற்கும் பெருமை ஈட்டிக்கொடுக்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

நற்சிந்தனை வழங்கியதன் பின்னர் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்ட மாணவர்கள் கௌரவிக்கப்பட்டு, மாணவர்களின் முன்னிலையில் அச்சான்றிதழ்கள் வழங்கப்படுவதனை இங்கு நாம் காணலாம். இவ்வித்தியாலய அதிபர் S.I.யஸீர் அறபாத் அவர்கள் மத்தியில் காணப்படுகின்றார்கள்

Wednesday, September 4, 2019

காத்தான்குடிக் கோட்ட மட் /மம /பத்திரியா வித்தியாலயத்தின் தரம் 05 மாணவர்களுக்கான இரண்டாம் தேசிய மொழி சிங்கள பயிற்சிக்கருத்தரங்கு. 02.09.2019
















மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் தரம் 05 மாணவர்களுக்கான சிங்கள மொழி அறிவு விருத்தி வேலைத்திட்டம் கடந்த 02.09.2019 தொடக்கம் 03.09.2019 வரை இரு நாட்கள் காத்தான்குடிக் கோட்ட மட் /மம /பத்திரியா வித்தியாலயத்தில் இடம் பெற்றது.

இதன் மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதல்களை மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.எஸ்.எம்.எம்.எஸ்.டொக்டர் உமர் மௌலான (SLEAS)  அவர்கள் வழங்கினார்கள். இணைப்பாளராக ஏ.இப்றாஹீம் (ADE) அவர்கள் செயற்பட்டார்கள். 

மேலும் இதன் வளவாளர்களாக ஏ.எல்.எம்.றிஸ்வி (CGO)  அவர்களும், எம்.பி.எம்.சித்தீக் (CGO) அகியோரும் காணப்பட்டனர். மேலே மாணவர்களுக்குரிய பயிற்சிகளையும், வழிகாட்டுதல்களினையும் றிஸ்வி அவர்கள் வழங்குவதோடு, மாணவர்கள் உற்சாகமாக செயற்படுவதனையும்  இவ்வித்தியாலயத்தின் அதிபர் எம்.எஸ்.எஸ்.அஹமட் அவர்கள் இங்கு உரையாற்றுவதனையும் நாம் காணலாம்.

காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பாதிகாரி இன்று இந்நாட்டில் இன ஒற்றுமைச் செயற்பாட்டிற்கு மொழியறிவு எவ்வளவு தூரம் அவசியம் என்றும், தன்னை இந்த செயலமர்விற்கு அழைத்த மட்டக்களப்பு மத்தி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.எஸ்.எம்.எம்.எஸ்.டொக்டர் உமர் மௌலான (SLEAS)    அவர்களையும் ஏனைய உத்தியோகத்தர்களையும் பாராட்டினார். 

மேலும் இவ்வாறான வேலைத்திட்டங்களுக்கு தமது ஒத்துழைப்பினை வழங்கத்தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.பெற்றோர்களிடம் இத்துடன் இந்த சிங்கள மொழிப்பயிற்சி கருத்தரங்கினை இடைவிடாது அரசாங்கம் நிதியளிக்காத போதிலும் தனியார் வகுப்புக்களுக்கு அனுப்பியேனும் தொடர்ச்சியாக சிங்கள மொழியினை கற்பிக்குமாறும் வேண்டிக்கொண்டார்.

பெற்றோர்களும் இந்த செயற்பாட்டினை பாராட்டியமையோடு வலயக்கல்விப் பணிப்பாளருக்கு தமது நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டனர். தொடர்ந்தும் இந்த வழிகாட்டலை வழங்குமாறும் வலயக் கல்வி அலுவலக அதிகாரிகளிடம் பெற்றோர்களும் வேண்டிக்கொண்டனர். நாம் மேலே இச்செயலர்வின் சில காட்சிகளைக்காணலாம்.


மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் கற்குடா இன்டநெசனல் முள்பள்ளி மாணவர்களின் பொருட்கண்காட்சி 01.09.2019












      கடந்த 01.09.2019 அன்று மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் கற்குடா இன்டநெசனல் முன்பள்ளி மாணவர்களின் பொருட்கண்காட்சி நிகழ்வு கடந்த 01.09.2019 அன்று நடைபெற்றது. இதில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் சார்பாக முன்பள்ளி உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு. கலீல் அவர்கள் கலந்துகொண்டார்கள். இங்கு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிறப்பான முறையில் மாணவர்களின் முன்பள்ளி செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றனர். 

 மட்டக்களப்பு மத்தி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.எஸ்.எம்.எம்.எஸ்.டொக்டர் உமர் மௌலான (SLEAS)  அவர்களின் வழிகாட்டலின் கீழ் முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர் அவர்களின் நெறிப்படுத்தல்களோடு, மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் முன்பள்ளி செயற்பாடுகள் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்படுகின்றன. மாணவர்களின் திறமைகளையும், அவர்களது பொருட்கண்காட்சியினையும் இதில் கலந்துகொண்ட அதிதிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை நாம் மேலே காணலாம்.






Sunday, September 1, 2019

காத்தான்குடி கோட்ட மட்/மம/அல்அமீன் வித்தியாலய மாணவிகளை க.பொ.சாதாரன தரப் பரீட்சையில் உயர் மட்ட அடைவினை பெறச் செய்வதற்கான செயலமர்வு 29.09.2019




                    இவ்வருடம் க.பொ.சாதாரன தரப்பரீட்சையில் உயர் மட்ட அடைவுளை பெறச் செய்வதற்கான வழிகாட்டல் செயலமர்வு காத்தான்குடி கோட்ட மட்/மம/அல்அமீன் வித்தியாலயத்தில் கடந்த 29.09.2019 அன்று நடைபெற்றது. இதனை அப்பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இவ்வழிகாட்டல் செயலமர்வின் விரிவுரையினை மட்டக்களப்பு மத்தி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.எஸ்.எம்.எம்.எஸ்.டொக்டர் உமர் மௌலான (SLEAS)  அவர்கள் வழங்கினார்கள். 

                             தமது வலயத்தின் பெறுபேற்றினை அதிகரிக்கச் செய்வதற்கான பல வழிகாட்டல் முன்னெடுப்புக்கள் வலயக் கல்விப் பணிப்பாளர் அவர்களினால் மேற்கொள்ளப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். 

          நாம் மேலே வலயக் கல்விப் பணிப்பாளர் அவர்களினால் மாணவர்களுக்கான விரிவுரைகள் வழங்கப்படுவதனையும், இதில் பங்கேற்ற அதிபர், ஆசிரியர்கள் மாணவிகளையும் காணலாம்.


காத்தான்குடி கோட்ட மட்/மம/அந்நாஸர் வித்தியாலய க.பொ.சா/தர மாணவர்களை ஜனாதிபதியின் ஸ்மார்ட் சிறிலங்கா நிகழ்ச்சியில் இணைத்து விடுவதற்கான செயலமர்வு 27.09.2019









காத்தான்குடி கோட்ட மட்/மம/அந்நாஸர் வித்தியாலய க.பொ.சா /தர மாணவர்களை ஜனாதிபதியின் ஸ்மார்ட் சிறிலங்கா நிகழ்ச்சியில் இணைத்து விடுவதற்கான செயலமர்வு கடந்த 27.09.2019 அன்று நடைபெற்றது.

இதில் காத்தான்குடி பிரசேத செயலகத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் மட்டக்களப்பு ஸ்மார்ட் சிறிலங்காவின் உத்தியோகத்தர்களும், மட்டக்களப்பு மத்தி வலயத்தின் தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் திரு.ஏ.எல்.எம்.றிஸ்வி ஆகியோரும் கலந்துகொண்டனர். க.பொ.சாதாரன பரீட்சை எழுதும் மாணவர்கள் எதிர்கால தொழில் உலகில் எவ்வாறான தொழில்களைப் பெற முடியும் அதற்கான வழிகாட்டுதல்கள் என்ன உள்ளன என்ற விடயங்கள் இங்கு தெளிவுபடுத்தப்பட்டன. 

நாம் மேலே இதில் கலந்துகொண்ட மாணவர்களையும் , அவர்களது பெற்றோர்களையும், ஏனைய உத்தியோகத்தர்களையும் காணலாம். தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தரான திரு.ஏ.எல்.எம்.றிஸ்வி அவர்கள் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கான விளக்கத்தினை வழங்குகின்றார்கள்
காத்தான்குடி கோட்டப் பாடசாலையான மட்/மம / ஸூஹதா வித்தியாலய மாணவர்களின் சந்தைக்கண்காட்சி 27.04.2019









கடந்த 27.09.2019 அன்று காத்தான்குடி கோட்ட மட்/மம/ஸூஹதா வித்தியாலய மாணவர்கள் பாடசாலை பாட செயற்பாடடுகளில் ஒன்றான சந்தைக் கண்காட்சி நிகழ்வினை நடாத்தியிருந்தனர். இதில் பல பிரமுகர்கள் அதிதிகளாக கலந்துகொண்டனர். மட்டக்களப்பு மத்தி வலயத்தின் தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தரான திரு.ஏ.எல்.எல்.றிஸ்வி அவர்களும் இதில் அதிதியாக கலந்துகொண்டார்கள். இவ்வித்தியாலத்தின் அதிபர் திரு.எம்.ஸி.முனீர் அவர்களும், இதன் ஆசிரியர்கள் , பெற்றோர்களும் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இச்சின்னஞ் சிறுசுகளின் இந்த சந்தைக் கண்காட்சி அனைவரதும் பராட்டுக்களையும் பெற்றுக்கொண்டது.இந்நிகழ்வில் பிரமுகர்கள்,ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் அனைவரும் மகிழ்ச்சிகரமாக ஈடுபட்டுக்கொண்டிப்பதனை மேலே நாம் காணலாம்.

  தேசிய கல்வி நிறுவகத்தின் பாரம்பரிய மற்றும் வெளிநாட்டு மொழிகள் பிரிவின் ஊடாக அரபு மொழிப் பாடத்திற்கான மொடியூல் தயாரிக்கும் செயற்திட்டத்திட...