Wednesday, April 25, 2018


காத்தான்குடி ஆசிரிய மத்திய நிலையத்தில் 2-ii ஆசிரியர்களுக்கான உளவளத்துணை வழிகாட்டல் செயலமர்வு - 2018






கடந்த 19.04.2018ம் திகதி தொடக்கம் 21.04.2018ம் திகதி வரை மூன்று நாள் உளவளத்துணை செயலமர்வினை காத்தான்குடி ஆசிரிய மத்திய நிலையமானது சிறப்பாக நடாத்தியது.இதில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் தரம் 2-ii யைச் சேர்ந்த ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். மொடியூல் 14 உளவளத்துணை ஆலோசனை வழிகாட்டல் செயலமர்வே இவர்களுக்காக இடம்பெற்றது. காத்தான்குடி,ஓட்டமாவடி,ஏறாவூர் ஆகிய மூன்று கோட்டங்களையும் சேர்ந்த ஆசிரியர்கள் பங்கேற்றனர்

ஆசிரிய மத்திய நிலைய முகாமையாளர் S.ஷரீப்தீன், தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர்களான A.H.ஹிதாயதுல்லாஹ், A.L.M..றிஸ்வி, M.B..சித்தீக் ஆகியோரால் விரிவுரைகள் நடாத்தப்படுவதனை நாம் மேலே காணலாம்.

Tuesday, April 24, 2018

காத்தான்குடி கோட்ட மட்ட சமூக விஞ்ஞானப் போட்டிகள் - 2018






கடந்த 23.04.2108 அன்று காத்தான்குடி கோட்ட மட்ட சமூக விஞ்ஞானப் போட்டியானது, மட்/மம/ காத்தான்குடி மீரா பாலிகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இதில் பாடசாலை மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட தரம் 6 தொடக்கம் 13 வரையான மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். 

இதன் இணைப்பாளராக மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி அலுவலகத்தின் விஞ்ஞானப் பாட ஆலோசகர் A.M.றபீக் (ISA) அவர்கள் கடமைபுரிந்ததோடு, மேற்பார்வை உத்தியோகத்தகர்களாக உளவளத்துணை ஆசிரிய ஆலோசகர் M.R..ஜவாத் (ISA) அவர்களும், தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் A.L.M.றிஸ்வி (CGO) அவர்களும் ஏனைய உத்தியோகத்தர்களும் கடமையாற்றினார்.

இதில் பங்கேற்ற மாணவ, மாணவியரையும் கடமைபுரிந்த உத்தியோகத்தர்களையும் நாம் மேலே காணலாம்.

Sunday, April 15, 2018

உளவளவளத்துணை வழிகாட்டல் செயற்பாடு








கடந்த 14.04.2018 அன்று காத்தான்குடி தாறுல் அர்கம் இஸ்லாமிய அறிவூட்டல் மையத்தினால் ஏறாவூர் பிரதேசத்தினைச் சேர்ந்த பெற்றோர்கள், மற்றும் மாணவர்களுக்கான இஸ்லாமிய ஆன்மீக வழிகாட்டல்கள் மற்றும் உளவளதுணை பயிற்சி வழிகாட்டல் என்பன வழங்கப்பட்டன.

இவர்களுக்கான உளவளத்துணை வழிகாட்டல் செயற்பாட்டினை மட்டக்களப்பு மத்தி வலயக்கல்வி அலுவலகத்தின் தொழில் வழிகாட்டல் மற்றும் உளவளத்துணை உத்தியோகத்தரான திரு.A.L.M.றிஸ்வி அவர்கள் வழங்குவனையும் இதில் மாணவர்கள் மகிழ்ச்சியோடு கலந்துகொண்டிருப்பதனையும் நாம் இங்கு காணலாம்.

Thursday, April 12, 2018

கற்றல், கற்பித்தல் செயற்பாடு வகுப்பறையில் வெற்றியளிக்க ஆசிரியர் வகிபங்கு


கற்றல், கற்பித்தல் செயற் பாடுகளைப் பொறுத்தவரையில் பிரதானமான மற்றும் நேரடியான பங்காளிகளாக ஆசிரியரும் மாணவர்களும் காணப்படுகின்றனர். இந்த இருசாராருக்கும் வெவ்வேறான பொறுப்புக்களும் வகிபங்குளும் காணப்படுகின்றன. அதிலும் குறிப்பாக ஒரு வகுப்பறையை வழி நடத்துவதில் அதிகளவான பொறுப்பு ஆசிரியருக்கே இருக்கிறது.

ஆசிரியர் கற்றலுக்கு வழிகாட்டுபவர், உதவுபவர், வசதி செய்து கொடுப்பவர், வள இணைப்புச் செய்பவர் என்பவற்றுக்கு இணங்க வகுப்பறைக் கற்றல், கற்பித்தலில் அவரின் பங்களிப்பு முக்கியமானதும் அவசியமானதுமாகும். ஒரு வகுப்பறைக் கற்றல், கற்பித்தல் வெற்றிகரமானதாக அமைவதற்கு ஆசிரியர் மேற்கொள்ள வேண்டிய முக்கிய நடவடிக்கைகளாக பின்வரு வனவற்றை அடையாளப்படுத்தலாம்.

திட்டமிடல்
உரிய பாடத்திற்குரிய பாடத்திட்டத்தை ஆசிரியர் நேரகாலத்துடன் தயார் செய்து வைத்திருப்பதுடன் அதற்கேற்ற வகையில் பாடக் குறிப்பையும் எழுதிக் கொள்ள வேண்டும். கற்பித்தல் உபகரணம், கற்பித்தல் முறை போன்ற விடயங்களையும் ஆசிரியர் திட்டமிட்டுக் கொள்வது அவசியமாகும். § சிறந்த வகுப்பறைச் சூழலை உருவாக்குதல்
மாணவர்கள் விரும்பக்கூடிய வகையில் வகுப்பறைச் சூழலை கவர்ச்சிகரமானதாக மாற்ற வேண்டும். இதனால் மாணவர்களிடம் கற்றல் நடவடிக்கைகளில் ஆர்வத்தை ஏற்படுத்த முடியும். வகுப்பறையிலுள்ள, வகுப் பறைச் சூழிலிலுள்ள கற்றல், கற் பித்தலுக்கு இடைஞ்சலாக உள்ள கவனக் கலைப்பான்களையும் இல் லாமல் செய்ய வேண்டும்.

வகுப்பறை முகாமைத்துவம் பேணல்
மாணவர்களைக் கட்டுக்கோப்புக்குள் வைத்திருப்பதுடன் சரியாகக் கண்காணிக்கவும் வேண்டும். அத்துடன் மாணவர்களை தனது கற்பித்தலின் பக்கம் நிலைத்து வைத்திருக்க அடிக்கடி வினாக்களை மாணவர்களிடம் கேட்டு வகுப்பறை முகாமைத்துவத்தைப் பேண வேண்டும். § எல்லா வித மான மாணவர்களையும் கருத்திற் கொண்டு கற்பித்தல்
வகுப்பிலுள்ள மீத்திறன் கூடிய மாணவர்கள், மெல்லக் கற்போர், சாதாரண மாணவர்கள் போன்ற அனைவரையும் கருத்திற் கொண்டு எல்லோருக்கும் விளங்கக்கூடிய விதத்திலும் உச்சரிப்புக்களையும் வார்த்தைப் பிரயோகங்களையும் சரியாக உபயோகித்து சத்தமாகவும் எல்லோருக்கும் விளங்கும் வகையிலும் கற்பிக்க வேண்டும். பட அட்டைகள் எழுத்தட்டைகள் என்பனவற்றை காட்சிப்படுத்தும் போது எல்லா மாணவர்களுக்கும் தெரியக்கூடிய விதத்தில் காட்சிப்படுத்த வேண்டும்.

பொருத்தமான கற்பித்தல் சாதனங்களை சரியாகப் பயன்படுத்தல்
பொதுவாகக் கற்பிக்கும் போது சில விடயங்களை மாணவர்களுக்கு விளக்க பொருத்தமான கற்பித்தல் சாதனங்களை உரிய முறையில் ஆசிரியர் பயன்படுத்த வேண்டும். உதாரணமாக முக்கிய விடயங்களை கரும்பலகையில் எழுதிக் காட்டல் அல்லது பட அட்டைகள், வரைபுகள் என்பனவற்றைக் கொண்டு விளக்கலாம். அல்லது பல்லூடகக் கருவி (Multi Media) போன்ற நவீன சாத னங்களைக் கொண்டு கற்பிக்கும் போது மாணவர்களின் ஆர்வம் அதிகரி ப்பதுடன் கற்பித்தல் இலகுவாகவும் அமையும். உதாரணமாக ஞாயிற்றுத் தொகுதி பற்றி கற்பிக்கும் போது அதனை வரைந்து அல்லது நவீன சாதனங்களின் மூலம் படமாக காட்டி விளக்கலாம்.

ஆலோசனையும் வழிகாட்டலும் வழங்கல் Guide and Counseling
தறவான நடத்தைகளைக் கொண்டிருக்கும் மாணவர்களை இனங்கண்டு அவர்கள் தவறை உணர்ந்து கொள்ளும் வகையில் ஆலோசனையும் வழிகாட்டலும் வழங்க வேண்டும். இந்நடவடிக்கையின் போது ஏனைய மாணவர்களுக்கு முன்னால் அவர்களை கெட்டவர்களாக காட்டும் நடவடிக்கைகளைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஆலோசனையும் வழிகாட்டலும் வகுப்பறை கற்றல், கற்பித்தலை மேலும் வெற்றி கரமானதாக மாற்றும்.

பயிற்சிகளை வழங்குதலும்திருத்துதலும்
கற்பிக்கப்பட்ட பாடப்பரப்பில் இருந்து பொருத்தமான பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்கி அவர்களால் அளிக்கப்பட்ட விடைகளை திருத்தி எந்தளவு குறிப்பிட்ட பாடத்தை மாணவர்கள் விளங்கியுள்ளனர் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இது பின்னூட்டல் வழங்குவதற்கு உதவும்.

பின்னூட்டல் வழங்கல்
பாட இறுதியில் மாணவர்களின் அடைவுகளை மதிப்பிட்டு அவர்கள் விளங்கியுள்ள விதத்திற்கேற்ப பின்னூட்டலை வழங்கி உரிய பாடப்பரப்பில் மாணவர்களின் அடைவு மட்டத்தை அதிகரிக்கச் செய்ய உதவுவதும் ஆசிரியரின் கடப்பாடாகும்.
வகுப்பறை விதிமுறைகளை ஏற்படுத்தல்
வகுப்பறையில் நல்ல நடவடிக்கைகளை கடைப்பிடிக்கவும் கெட்ட விடயங்களை தவிர்த்துக் கொள்ளவும் கூடிய வகையில் மாணவர்களின் ஒத்துழைப்புடன் அவர்களுடைய ஆலோசனைப்படி சில வகுப்பறை விதிமுறைகளை ஏற்படுத்தலாம். மாணவர்கள் தாங்கள் உருவாக்கிய விதிமுறைகள் என்ற வகையில் அவற்றை கடைப்பிடிக்க முன்வருவர். இது வகுப்பறை முகாமைத்துவத்தை பேணவும் உதவும்.

கேட்புலத் தொடர்பை ஏற்படுத்தல்
பிரச்சினைக்குரிய மாணவர்களை அதிகம் கண்காணிக்கக் கூடியவராக ஆசிரியர் இருக்க வேண்டும். மாணவனின் கெட்ட பழக்க வழக்கங்கள் தனக்கு பிடிக்கவில்லை என்பதை பார்வையினூடாக மாணவனுக்கு உணர்த்த வேண்டும். இதன் மூலம் கற்றலின் பக்கம் அம்மாணவனை திசை திருப்ப முடியும்.

பரிசு, பாராட்டு வழங்குதல்
நல்ல விடயங்களைச் செய்கின்ற மாணவர்களைப் பாராட்டுவதுடன் சில விடயங்கள் தொடர்பாக போட்டிகளை ஏற்படுத்தி பரிசில்களையும் வழங்கலாம். இதனால் மாணவர்கள் நல்ல விடயங்களில் ஆர்வத்துடன் ஈடுபடவும் வாய்ப்பு ஏற்படும். இது போன்ற நடவடிக்கைகளை ஆசிரியர் தனது வகிபாங்கில் ஏற்படுத்திக் கொள்வதனால் மாணவர்களின் நன்னடத்தைகளை விருத்தி செய்வதுடன் பொருத்தமற்ற நடத்தைகளை நன்னடத்தையாகவும் மாற்ற முடியும். அத்தோடு கற்றல், கற்பித்தலையும் ஊக்குவிக்க முடியும்.

மாணவர்களின் சந்தேக நிவர்த்திக்கு நேரம் ஒதுக்குதல்
கற்பிக்கும் போது மாணவர்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய ஆசிரியர் நேரம் ஒதுக்க வேண்டும். கற்ற பாடம் தொடர்பாக பல சந்தேகங்கள் மாணவர்களுக்கு இருக்கலாம். அவ்வாறான சந்தேகங்களை ஆசிரியரிடம் மாணவர்கள் கேட்டு அதற்கு ஆசிரியர் பதிலளிக்க நேரம் ஒதுக்குவது ஆசிரியரின் கடப்பாடாகும்.

மாணவர்களுக்கு பொறுப்பு வழங்கல்
மாணவர்களுக்கு பொறுப்புக்களை வழங்குவதன் மூலம் அவர்களை குறிப்பிட்ட விடயங்களில் ஆர்வம் உடையவர்களாகவும் நன்னடத்தை உடையவர்களாகவும் மாற்ற முடியும். மேலும் வகுப்பறை நடவடிக்கைகளில் மாணவர்கள் பொறுப்புடனும் சுறுசுறுப்பாகவும் செயற்படவும் இது உதவும்.

சுய கற்றலுக்கு ஊக்கமளித்தல்
ஆசிரியரின் கற்பித்தலில் மாத்திரம் மாணவர்கள் தங்கி நிற்காமல் சுயமான கற்றலுக்கும் வழிகாட்டல்களை ஆசிரியர் வழங்க வேண்டும். கற்றலோடு தொடர்புடைய பத்திரிகைகளை சஞ்சிகைகள், புத்தகங்கள் ஆகியவற்றை அறிமுகம் செய்வதோடு அவற்றை வாசிப்பதற்கும் ஆர்வமூட்டி வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும். வகுப்பறையில் வாசிப்பு மூலை ஒன்றை உருவாக்கி அங்கு புத்தகங்களையும் வைக்கலாம். இது மாணவர்களின் சுய கற்றலை அதிகரிக்கச் செய்யும்.

தொடர் மதிப்பீடும் கணிப்பீடும்
மாணவர்களை தொடராக கற்றல், கற்பித்தலில் ஈடுபடுத்த தொடர் மதிப்பீடுகளையும் கணிப்பீடுகளையும் செய்வது உதவும். மாணவர்களின் முழு அளவிலான அடைவினை இதன் மூலம் அறிந்து அதற்கேற்ற வகையில் மேலும் சில திட்டங்களை வகுத்துக் கொள்ளவும் இது உதவும்.

Wednesday, April 11, 2018

காத்தான்குடி மஞ்சந்தொடுவாய் றிஸ்வி நகர் இக்பால் வித்தியாலய மாணவர் பாராட்டு நிகழ்வு- 2018











பாடசாலை மாணவர்களின் முதலாம் தவணைப் பரீட்சை பெறுபேறுகளை வழங்கும் நிகழ்வும் மாகாண , வலய, மட்ட  போட்டிகளில் வெற்றிகளை ஈட்டிய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் 11.04.2018 அன்று காத்தான்குடி மஞ்சந்தொடுவாய் இக்பால் வித்தியாலயத்தில் நடைபெற்றது. பாடசாலை மாணவர்கள் அதிபர், ஆசிரியர்களால் கௌரவிக்கப்பட்டதோடு, பாராட்டவும் பட்டனர்.

இதில் இப்பாடசாலையின் PSI இணைப்பாளர் திரு.A.L.M.றிஸ்வி (CGO) அவர்கள் மாணவர்களுக்கு அறிவுரை மற்றும் சான்றிதழ்களை வழங்குகின்றார்கள். 

இவ்வித்தியாலயத்தின் அதிபர் திரு.V.M.ஹனீபா  அவர்களும் ஏனைய ஆசிரியர்களும் மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்குவதனையும் நாம் இங்கு மேலே காணலாம். 

Saturday, April 7, 2018

OPEN EDUCATION CENT RES ன்  முப்பெரும் விழாக்கள்




கடந்த 06 ஏப்ரல் 2018 (வெள்ளிக்கிழமை) மாலை 04.30 மணிக்கு காத்தான்குடி அல்மனார் கல்லூரி மண்டபத்தில் கலாநிதி அலவி ஷரீப்தீன் நளீமீ அவர்களின் தலைமையில் அலவி ஷரீப்தீன் வெற்றிக்கேடய கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டும் வைபவம் மற்றும் 2017 க.பொ.சா.த பரீட்சையில் அதிவிஷேட சித்தி பெற்ற மாணவர்களை கௌரவித்தல் நிகழ்வும் நடைபெற்றது.

இதில் கௌரவ அதிதியாக எம்.நயீமுதீன் நளீமீ மேலதிக செயலாளர், மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சு அவர்கள் கலந்துகொண்டார்கள் மேலும் கலாநிதி அலவி ஷரீப்தீன் அவர்களால் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்ட முஸ்லிமாக இருக்க வேண்டுமானால்........ எனும் நூல் அறிமுகத்தினை கலாநிதி பீ.எம்.எம்இர்பான் நளீமீ (தலைவர் -அறபு மொழி கற்கை நிலையம் ஜாமிஆ நளீமிய்யா) அவர்களால் தொகுத்து வழங்கப்பட்டது.

இதில் கொழும்பு வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி முகம்மட் சியாம் அவர்களும் கலந்துகொண்டார்கள்.

கலாநிதி அலவி ஷரீப்தீன் நளீமி அவர்கள் தனது உரையில் கல்விப் பயணத்தில் சாதனையென்பது வெறும் 9A சித்திகளைப் பெறுவது மாத்திரமல்ல. பல தடைகளையும் தகர்த்தெறிந்து எதிர்கால  இலட்சிய வெற்றிப்பயணத்தில் இமயத்தின் உச்சத்தை ஈமானிய உணர்வுகளோடு தொடுவதே வாழ்வின் வெற்றிக்கும், இலட்சியத்தின் உச்சத்திற்கும் வழிகாட்டுமென்ற அறிவுரைகளும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட அதிதிகள் உரையாற்றுவதனையும், போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்படுவதனையும், க.பொ.சா.தரப்பரீட்சை 2017ல் சாதனைபுரிந்த மாணவர்கள் கௌரவிக்கப்படுவதனையும் மேலே  நாம் காணலாம்.




Wednesday, April 4, 2018


කුරුල්ලන්ට මඟ කිය­මින් පිය­ඹන ක්‍රිස්ටියන්



ඉතා හොඳ කාලගුණයක් පවතින දිනයක සැන්දෑ අහස දෙස බලා සිටිනා බොහෝවිට නායක කුරුල්ලකු පසුපස හී තුඩක හැඩයට පියඹා යන කුරුලු රංචු දැකගත හැකියි. මේ වගේ කුරුලු රංචුවක් සමඟින් පියඹා යන්නට ඔබට අවස්ථාවක් ලැබුණොත් නැවත වරක් නොසිතාම ඔබ එම අවස්ථාව ලබා ගන්නවා නොඅනුමානයි. එහෙම පියඹායන්නට හැකියාව ලැබුණහොත් අප කවුරුත් දුර පළාත් වලට සංචරණය වන කුරුල්ලන් රංචුවක් මෙන් බොහෝ විට ගමන් කරාවි. අද අතැඹුල විශේෂාංගයෙන් ඔබට කියන්නට යන්නේ කුරුල්ලන් රංචුවක් සමඟ පියඹා යන්නට අප මවන සිහිනය ඇත්තෙන්ම සිහිනයක් නොවන බව කියන්නටය. ප්‍රංශයෙන් ඇසෙනා මෙම පුවතට අනුව කුරුලු රංචුව තම මව පසුපස යනවා යැයි සිතා පියඹා යන්නේ ඉතා කුඩා සැහැල්ලු ගුවන් යානයක ගමන් ගන්නා එහි නියමුවා පසුපසිනි. ‘කුරුලු මිනිසා’ යන අන්වර්ථ නාමය ලැබී තිබෙන මෙම නියමුවා නිසා දැන් ඔබට පවා කුරුලු රංචුවක් සමඟ පියාසර කිරීමේ අත්දැකීමක් ලබා ගැනීමට හැකියාව තිබෙනවා.


58 හැවිරිදි ක්‍රිස්ටියන් මොලෙක් (Christian Moullec) ප්‍රංශයේ කැන්ටල් ප්‍රදේශයේ ජීවත්වන පුද්ගලයෙකි. දිනෙන් දින ගහණය අඩුවී යන දුර්ලභ පක්ෂීන්ව රැකබලාගෙන ඔවුන්ව ආරක්ෂා සහිත ලෙස සංචරණ මාර්ග වලට යොමු කිරීම මොහු ආරම්භ කර තිබෙන්නේ 1995 වසරේදීයි. එතැන් පටන් ඔහුගේ මුළු ජීවිතයම ඔහු කැප කර තිබෙන්නේ වඳවී යාමට ආසන්න වී සිටින මෙම කුරුලු විශේෂ ඇතිකිරීමට හා ඔවුන්ව පුහුණු කිරීමටයි. ඔහු පවසන ආක­ාරයට මෙලෙස ඔහු සමඟ පියාසර කිරීමට මෙම කුරුල්ලන්ට පුහුණු කිරීම ඉතාමත් කාලය වැයවන හා වෙහෙසකර ක්‍රියාවකි. මේ නිසාම ඔහුගේ මෙම අත්දැකීම අන් අය සමඟින් බෙදා ගැනීමට තමන් ඉතාමත් ආසාවෙන් පසු වූ බව ඔහු වැඩිදුරටත් පවසා තිබෙනවා.

ඔහු ලෝකයේ ම ප්‍රසිද්ධ වීමට ආරම්භ වූයේද ඔහුගේ මෙම කුරුල්ලන්ට මඟ පෙන්වීමේ ක්‍රියාව නිසා නොව ඔහු සමඟ ගමන් කරනා සංචාරකයන් ලබා ගන්නා දර්ශනීය ඡායාරූප හා වීඩියෝ අන්තර්ජාලයේ ප්‍රසිද්ධ වීම නිසායි. මේ නිසා කුරුලු මිනිසා සමඟින් පියාසර කිරීමට ලොව වටෙන්ම සංචාරකයන් ඔහු වෙත පැමිණෙයි. පැය 15ක පමණ ගුවන් ගමනක් ගෙවා ක්‍රිස්ටියන් සමඟින් පැය බාගයක් කුරුල්ලන් සමඟ පියාසර කිරීමට තරම් මිනිසුන් මෙයට උනන්දු වන්නේ ජීවිත කාලයටම මෙවැනි අත්දැකීමක් ලබාගැනීමට නොහැකි නිසායි. ක්‍රිස්ටියන් තම සංචාරකයින්ට කුරුල්ලන් පියඹා යන විට ඔවුන්ව අතගෑමටද අවස්ථාව ලබාදෙයි.

විශේෂඥයකු පවසා තිබෙන්නේ කුරුල්ලන් බිත්තරයෙන් එළියට ආ පසු දකින පළමුවන චලනය වන දෙය ඔවුන්ගේ මව යැයි සිතා එය අනුව ක්‍රියා කරන බවයි. ක්‍රිස්ටියන්ද මෙම කුරුල්ලන්ව මවක් මෙන් රැකබලා ගන්නා අතර ඔහු අවසානයේ සඳහන් කර තිබුණේ “මගේ කුරුල්ලන් සමඟ පියාසර කරන සෑම දිනකම මගේ දෑසට කඳුළු එනවා” යනුවෙනි.

Sunday, April 1, 2018

மட்/மம/காத்தான்குடி நூறானியா வித்தியாலயத்தின் பாடசாலை அபிவிருத்திக்குழு கூட்டம்- 2018






கடந்த 30.03.2018 (வெள்ளிக்கிழமை) அன்று காத்தான்குடி நூறானியா வித்தியாலயத்தின் பாடசாலை அபிவிருத்திக்குழுக் கூட்டம் இவ்வித்தியாலத்தின் அதிபர் எம்.ஏ.சி.எம்.நியாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இதில் இப்பாடசாலையின் இணைப்பாளரான எம்.ஐ.மர்சூக் (ISA -English) அவர்கள் பாடசாலை அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பெற்றார்,மற்றும் பிரதேசத்தின் பிரமுகர்கள் ஆகியோருக்கு உரையாற்றுவதனையும், அதிபர் அவர்களினால் இப்பாடசாலையின் எதிர்கால அபிவிருத்தி வேலைத்திட்டத்தினை எவ்வாறு சிறப்பான முறையில் எடுத்துச் செல்ல வேண்டுமென்ற தெளிவுரையும் வழங்கப்படுவதனையும் நாம் காணலாம்.

இக்கூட்டத்தில் அதிகளவானோர் கலந்துகொண்டுள்ளமையினையும் நாம் இங்கு காணலாம்.

  தேசிய கல்வி நிறுவகத்தின் பாரம்பரிய மற்றும் வெளிநாட்டு மொழிகள் பிரிவின் ஊடாக அரபு மொழிப் பாடத்திற்கான மொடியூல் தயாரிக்கும் செயற்திட்டத்திட...