Sunday, December 1, 2019




க.பொ.சா.தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப்பணிப்பாளரின் வாழ்த்துச் செய்தி 02.12.2019


மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலிருந்து இம்முறை 02.11.2019 க.பொ.சா.தரப்பரீட்சைக்குத் தோற்றும் அனைத்து மாணவ மாணவியர்களும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று தமது கல்வி வலயத்திற்கும் , பெற்றோர்களுக்கும், கற்பித்த ஆசிரியர்களுக்கும் பெறுமை சேர்க்க வேண்டுமென வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.எஸ்.எம்.எம்.எஸ்.டொக்டர் உமர் மௌலான (SLEAS) அவர்கள் தமது  பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள்,  கோட்டக்கல்விப் பணிப்பாளர்கள் ,  உதவிக்கல்விப் பணிப்பாளர்கள் ,  ஆசிரிய ஆலோசகர்கள் ,  பாட இணைப்பாளர்கள் , அதிபர்கள் சார்பாக  வாழ்த்துக்களை அன்பின் இனிய மாணவர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றார்கள்.

இது தொடர் மழை காலம் என்பதனால் பரீட்சை எழுதும் மாணவர்களின் வீடுகள் வெள்ள அனர்த்தத்தினால்   பாதிக்கப்பட்டிருக்கலாம். இதனால் தங்களது பரீட்சை எழுதும் நடவடிக்கையில் சிறிதும் மனம் தளர்ந்து விடாது. சிறந்த முறையில் இறைவனின் உதவியோடு பரீட்சைக்குத் தோற்று மாறும் அன்புடன் மாணவர்களை கேட்டுக்கொள்கின்றார்கள்.

Thursday, November 14, 2019


பாடசாலை கற்பித்தல் முறையில் வகுப்பறைக் கற்பித்தல் ஓர் நோக்கு
சாதாரணமாக வகுப்பறைக் கற்பித்தலில் ஈடுபடும் போது ஒரு பாட அலகை கற்பிப்பதற்கு மிகச் சிறந்த கற்பித்தல் முறை எதுவென யாரும் சிபார்சு செய்யமுடியாது. ஆசிரியரே படைப்பாற்றலுள்ளவராகக் கருதப்படுகிறார். கற்பித்தல் ஓரு விஞ்ஞானம் போன்ற ஒரு கலையாகும். மிகச் சிறந்த கற்பித்தல் முறையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளல் ஆசிரியரின் கடமையாகும்.



பாடத்தைக் கற்பித்தலின் நோக்கம், மாணவரின் இயல்பு, பாடஅலகின் தன்மை, பௌதிக சூழலின் தன்மை, பெற்றுக்கொள்ளக்கூடிய கட்புல, செவிப்புல சாதனங்கள், ஆசிரியரின் சுபாவம் அகிய அனைத்து சாதனங்களும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். அந்த வகையில் வகுப்பறைக் கற்பித்தலை திட்டமிடுவதில் பல கற்பித்தல் முறைகள் காணப்படுகின்றன. எனவே பொருத்தமான சூழலில் பொருத்தமான பாடஅலகிற்கு ஏற்ப பொருத்தமான கற்பித்தலை மேற்க்கொண்டால் வகுப்பறைக் கற்பித்தல் சிறந்து விளங்கும். அந்தவகையில் கற்பித்தல் முறைகளை பின்வருமாறு வகைப்படுத்த முடியும்.
1.விரிவுரை முறை கற்பித்தல்
2.குழுமுறைக் கற்பித்தல்
3.வினாவிடை முறைக்கற்பித்தல்
4.கூட்டுமுறைக்கற்பித்தல் - பல்தரக்கற்பித்தல்
5.ஒப்படைமுறைக் கற்பித்தல்
6.கண்டறிமுறைக் கற்பித்தல்
7.படிமுறைக்கற்பித்தல்
8.சிந்தனைக்கிளறல் கற்பித்தல் முறை
9.விளையாட்டு முறைக்கற்பித்தல்
10.பாத்திரமேற்று நடித்தல்
11.நுண்முறைக்கற்பித்தல்
12.போலச்செய்தல் கற்பித்தல் முறை
13.வெளிக்களச் செயற்பாட்டு கற்பித்தல் முறை
14.முன்வைத்தல் முறை
15.வணிக முறை கற்பித்தல்
16.பிரச்சினை திர்த்தல் முறை
17.செய்திட்ட கற்பித்த்ல் முறை
என பல வகை கற்பித்தல் முறைகள் காணப்படுகின்றன. எனவே பொருத்தமான இடத்தில் வகுப்பறை கற்பித்தலில் சரியான முறையை தெரிவு செய்யும் போது கற்றல், கற்பித்தல் சிறப்பாக அமையும்.
1.விரிவுரை முறை கற்பித்தல்- இது பழமையான கற்பித்தல் முறையாகும். ஆசிரியரை முதன்மையாக் கொண்டது. ஆசிரியர் பேச்சு மூலமாக வழங்கும் அம்சங்களை மாணவர் காது கொடுப்பர். சில வேளை குறிப்பெடுத்துக்கொள்வர். எனினும் மாணவரின் பிரதிபலிப்பு ஆசிரியரை சென்றடைவதில்லை. பின்னூட்டல் கிடையாது. கருத்து ஒரே திசைக்கு மட்மே செலுத்தப்படுகிறது. இங்கு மாணவர் தொழிற்பாடு கிடையாது. மாணவர்கள் சுறுசுறுசுப்பு காணப்படமாட்டாது. ஆர்வமற்ற செமிமடுப்போராக காணப்படுவர்.
2.குழுமுறைக் கற்பித்தல் -இங்கு சமவயதுக் குழுக்கள் காணப்படுவர். மாணவர் மையமே அடிப்படையாக் கொண்டது. மாணவர் உற்சாகமாக செயற்படவர். கண்டாய்ந்தவற்றைக் குழுக்களாக முன்வைப்பர். இங்கு குழுவின் தலைவர் தானாகவே உருவாகுவார். ஆசிரியர் மாணவர்கள் முன்வைக்கும் கருத்துக்கள் குறித்தக் கொண்டு சகல குழுக்கழும் முன்வைத்தலின் பின்னர் ஆசிரியரினால் கருத்துக்களும் வெளிக்கொணரப்டும். பின்னர் கணிப்பீடு, மதிப்பீடு இடம் பெறும். எனவே இங்கு வகுப்பறைக் கற்பித்தல் மிகவும் குதூகலமாகவும் சந்தோசமாகவும் காணப்படும். இங்கு 5E –( METHOD) முறை பயன்படுத்தப்படும். முற்றிலும் மாணவர் மையக்கற்பித்தல் மையமாக அமையும்.
3.வினாவிடை முறைகற்பித்தல்- இம் முறை மிகவும் பழமையான கற்பித்தல் முறையாகும். நவின காலத்தல் வினா எழுப்பல் முறை பல்வேறு நோக்கங்களுக்காக பயன்படுகிறது.
4.கூட்டுமுறைக் கற்பித்தல் - பல்தரக்கற்பித்தல் – பல ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து தீர்க்கமான ஒரு நோக்கத்துடன் திட்டமிட்டு மாணவர் குழுவுக்கு கற்பிக்கும் ஒரு முறையாகும்.
5. பிரச்சினை தீர்த்தல் முறை – பிரச்சினை தீர்த்தல் கற்பித்தல் முறை ஒரு விஞ்ஞான முறையாகும். யோன்டுயி எடுத்துக்காட்டிய பிரச்சினை தீர்க்கும் முறை ஐந்து சந்தர்பங்களைக் கொண்டது. இங்கு மாணவர் பிரச்சினையை எழுப்புதலும், அப்பிரச்சினையை பகுப்பாய்வு செய்தலும் அது தொடர்பான ஏதும் அனுமானங்களை எழுப்புதலும், அந்த அனுமானங்களை பரிசீலனை செய்து பார்த்தலும், ஆதாரஙகளின் அடிப்படையில் தீர்மானத்துக்கு வருதலும் ஆகும்.
6.விளையாட்டுமுறை-.பாத்திரம்மேற்றுநடித்தல் – மாணவர்கள் செயற்பாட்டு அனுபவம் திருப்தி பெறுகின்ற கற்பித்தல் முறையாகும். பாத்திரமேற்று நடித்தலின் போது ஓர் உயிர்துடிப்புள்ள பாத்திரத்தை அல்லது சந்தர்பத்தை மாணவர்களால் நடித்துக் காட்டலாகும். எனவே மாணவர் மிகவும் விருப்பத்தோடு செயற்படுவதற்கு இந்த நுட்ப முறை நான்கு உதவுகிறது. விளையாட்டு - பாத்திரமேற்றல்-நாடகம், நாட்டியம்; வகுப்பறைக் கற்பித்தலில் மாணவர்கள் மகிழ்ச்சி. சுறுசுறுப்பு பாடத்தில் விருப்பு ,என்பனவற்றிற்கு மிகவும் உதவுகிறது.
7.சிந்தனைக்கிளறல் கற்பித்தல் முறை – சிந்தனைகளைத் தூண்டல் என்பது பங்குபற்றுகின்றவர்கள் சுதந்திரமாக கருத்து வெளியிடக்கூடிய மகிழ்ச்சி மிக்க கற்பித்தல் முறையாகும். இம்முறையின் பண்புகளாக
1.வகுப்பில் சகலரும் பிரச்சினையைச் சமர்பித்தல்
2.மாணவர்கள் சகலரும் கருத்து வெளியிடுவதற்கு இடமளித்தல்.
3.விடையை பின்னர் மதிப்பீடு செய்தலாகும். சிந்தனைதூண்டல் சுதந்திர வெளிப்பாட்டிற்கு ஆக்கபூர்வமான சிந்தனைக்கும் உதவும்.

8.நுண்முறைக்கற்பித்தல் - நுண்ணிய கற்பித்தலில் குறுகிய கால எல்லைக்குள் சிறு குழுவை பயன்படுத்தி ஆசிரியர் ஆற்றலை முன்னேற்ற நடவடிக்கை எடுத்தலாகும். பொதுவாக வகுப்பறையில் காணக்கூடிய கஸ்டமான நிலமையை நீக்கி கட்டுப்படுத்தப்பட்ட சந்தர்பத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆசிரியர் ஆற்றலை விருத்தி செய்வதே இதன் நோக்கமாகம்.

Monday, November 4, 2019

மட் / மம / காங்கயனோடை அல்அக்ஸா வித்தியாயலயத்தின் தேசிய வாசிப்பு வாரம் - 2019









பாடசாலை மாணவர்களின் கற்றல் மற்றும் தேடல் ஆர்வத்தினை தூண்டும் விதமாக கல்வி அமைச்சினால் தேசிய ரீதியில் பாடசாலை மட்டத்தில் தேசிய வாசிப்பு வார நிகழ்வுகள் கொண்டாடப்பட்டன. 

இதன் தொடரில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.எஸ்.எம்.எம்.எஸ்.டொக்டர் உமர் மௌலானா (SLEAS)  அவர்களது வழிகாட்டலில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயப் பாடசாலைகளிலும் இவ்வேலைத்திட்டம் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டது. 

காத்தான்குடி கல்விக் கோட்ட காங்கயனோடை அல்-அக்ஸா வித்தியாலயத்தில் அதன் அதிபர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பங்கேற்புடன் இவ்வாசிப்பு வார நிகழ்வு கடந்த 31.10.2019 அன்று நடைபெற்றது. 

இதில் காத்தான்குடி ஆசிரிய மத்தி நிலையத்தின் தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.றிஸ்வி அவர்களினால் கல்வி அமைச்சின் ஊடாக மாணவர்களின் கற்றல், தேடல் ஆர்வத்தினை அதிகரிக்கும் விதமாக நடைமுறைப்படுத்தப்படுகின்ற இந்த தேசிய வேலைத்திட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் மாணவர்களின் எதிர்கால கல்வி அறிவினை விருத்தி செய்வதற்கு வாசிப்பு எவ்வளவு தூரம் அவசியம். என்ற கருத்தாடல்கள் எடுத்துரைக்கப்பட்டன. கற்றல் மேம்பாட்டில் மாணவர்களின் வாசிப்பு எவ்வளவு தூரம் முக்கியத்துவம் வாய்ந்தது என்ற விடயங்களும் எடுத்துரைக்கப்பட்டது. 

இவ்வித்தியால அதிபர் ஏ.ஸி.ஆதம் அலி அவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள் இந்த நிகழ்வினை நடாத்துவதற்கு உதவி புரிந்த வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.எஸ்.எம்.எம்.எஸ்.டொக்டர் உமர் மௌலானா (SLEAS) அவர்களுக்கும், இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தரான  ஏ.எல்.எம்.றிஸ்வி அவர்களுக்கும், நன்றிகளையும் வாழ்த்துக்களினையும் தெரிவித்தார்கள்

வலயக் கல்விப் பணிப்பாளர்  அவர்கள் மாணவர்களின் முன்னேற்ற நடவடிக்கைகளுக்கு தங்களது உத்தியோகத்தர்களுக்கு வழிகாட்டி பாடசாலையில் கற்றல் மற்றும் ஆளுமை விருத்திச் செயற்பாடுகளுக்கு ஊக்கமும், ஒத்தாசையும், ஒத்துழைப்புக்களும் வழங்குவதனை பாராட்டினார்கள். 

இறுதியாக இதில் வளவாளராக கலந்துகொண்ட தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் அவர்கள் இதற்கான முழு வழிகாட்டுதல்களையும் தமது தற்போதைய வலயக் கல்விப்பணிப்பாளர் அவர்களே வழங்குவதாகவும், இதுவரை காணப்பட்ட வலயக் கல்விப் பாணிப்பாளர்களில் எவரிடமும் காணப்படாத தனித்துமும், ஆளுமையும் , தூர நோக்கும் கொண்ட வலயக் கல்விப்பணிப்பாளராக தற்போதைய வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.எஸ்.எம்.எம்.எஸ்.டொக்டர் உமர் மௌலானா (SLEAS)  அவர்களே தமக்கான நெறிப்படுத்துதல்களினையும், வழிகாட்டலையும்,  உற்சாகத்தினையும்  வழங்குவதாக குறிப்பிட்டார்கள். 

Friday, October 25, 2019

වෘත්තීය මාර්ගෝපදේශ සේවා පුහුණුකරු පුහුණු වැඩමුළුව - 2019









ජාතික ගුරු අධ්‍යාපන හා විකල්ප අධ්‍යාපන ආයතනයේ නියෝජ්‍ය අධ්‍යක්ෂ ජනරාල්ගේ මඟ පෙන්වීම යටතේ අධ්‍යාපන සංවර්ධන පර්යේෂණ හා පුහුණු  මධ්‍යස්ථානයේ දින දෙකක නේවාසික වැඩමුළුවක්, නැගෙනහිර පළාත් අධ්‍යාපන දෙපාර්තමේන්තුව වෘත්තීය මාර්ගෝපදේශක නිලධාරීන්ට පැවැත්වේ

සෑම කලාපයකින්ම ගුරු හා වෘත්තීය මාර්ගෝපදේශ නිලධාරීන්ට ආරාධනා කරන ලදී. පාසලේ වෘත්තීය මාර්ගෝපදේශනයේ අවශ්‍යතාවය පැහැදිලි කළ අතර 6 වන ශ්‍රේණියේ සිට 13 ශ්‍රේණිය දක්වා විෂය මාලාව ජාතික අධ්‍යාපන ආයතනය හරහා ගෙන ඒමට ජාතික අධ්‍යාපන ආයතනය තීරණය කළේය.


හිටපු අධ්‍යාපන අමාත්‍යාංශයේ අධ්‍යාපන අධ්‍යක්ෂ සහ වෘත්තීය මාර්ගෝපදේශක අධ්‍යක්ෂ ප්‍රේමසිරි මහත්මයා, ජාතික අධ්‍යාපන ආයතනයේ වෘත්තීය මාර්ගෝපදේශ ඒකකය භාර ගීතානි මහත්මිය, සනීර් සහ සී.කේ.වින්සන් එස්.ප්‍රන්ද්‍රන් ඇතුළු නිලධාරීන් සම්පත් පුද්ගලයා වශයෙන් මේ  වැඩමුළුවේ සහභාගි වූහ.
தொழில் வழிகாட்டற் சேவைப் பயிற்றுனர் பயிற்சிச் செயலமர்வு - 2019










தேசிய கல்வி நிறுவகத்தின் ஆசிரியர் கல்வி மற்றும் மாற்றுக் கல்விப் பீடத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் அவர்களின் வழிகாட்டலின் கீழ் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் உளவளத்துணை வழிகாட்டல் ஆலோசனை ஆசிரியர்கள், தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர்களுக்கான இரு நாள் வதிவிடச் செயலமர்வு கடந்த 23.10.2019 - 24.10.2019 வரை (02 நாட்கள்) கண்டியில் அமைந்துள்ள கல்வி அபிவிருத்தி மற்றும் பயிற்சி நிலையத்தின் குருதெனியவில் நடைபெற்றது.

இதில் ஒவ்வொரு வலயங்களிலிருந்து குறித்த ஆசிரியர்கள் மற்றும் தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இச்செயலமர்வின் பாடசாலையில் தொழில் வழிகாட்டல் பிரிவின் அவசியம் பற்றியும் எதிர்காலத்தில் தேசிய கல்வி நிறுவகத்தின் ஊடாக தரம் 06 தொடக்கம் தரம் 13 வரை இதனை பாடத்திட்டமாக கொண்டு வருவதற்கு தேசியக் கல்வி நிறுவகம் தீர்மானத்துள்ளமை பற்றியும் தெளிவுபடுத்தப்பட்டது. 

இதில் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி அலுவலகம் சார்பாக இதன் தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.றிஸ்வி மற்றும் வழிகாட்டல் ஆலோசனை ஆசிரியர்களான ஏ.பி.றஸீன், மற்றும் ஏ.எல்.எம்.றிபாஸ் ஆகியார் கலந்து கொண்டனர்.

தமது வலயம் சார்பாக ஏ.எல்.எம்.றிஸ்வி தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் அவர்கள் கருத்துக்களை முன்வைத்தமையோடு, சிறந்த சிந்தனைகளையும், ஆழமான கருத்துக்களினையும் முன்வைத்தமைக்காக தமது வலயத்திற்கு மதிப்பினையும், கௌரவத்தினையும் பெற்றுக்கொடுத்தார்.

இதன் வளவாளர்களாக முன்னால் கல்வி அமைச்சின் தொழில் வழிகாட்டல் ஆலோசனைப் பிரிவுக்குப் பொறுப்பான கல்விப் பணிப்பணிப்பாளரும் தற்போதைய மாகாண உதவிக்கல்விப் பணிப்பாளருமாகிய பிரமசிறி அவர்களும், தேசிய கல்வி நிறுவகத்தின் தொழில் வழிகாட்டல் ஆலோசனைப் பிரிவுக்குப் பொறுப்பான கீதானி அவர்களும், சனீர், சீ.கே.வின்சன்.எஸ்.பிரந்திரன் ஏனைய உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர். 

Wednesday, October 16, 2019

ஏறாவூர் கோட்ட மட் /மம / ஜிப்ரிய்யா   வித்தியாலயத்தின் தரம் 04 மாணவர்களுக்கான இரண்டாம் தேசிய மொழி சிங்கள பயிற்சிக் கருத்தரங்கு. 16.10.2019









மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் தரம் 04 மாணவர்களுக்கான சிங்கள மொழி அறிவு விருத்தி வேலைத்திட்டம் கடந்த 15.10.2019 தொடக்கம் 16.10.2019 வரை இரு நாட்கள் ஏறாவூக் கோட்ட மட் /மம / ஜிப்ரிய்யா வித்தியாலயத்தில் இடம் பெற்றது.

இதன் மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதல்களை மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.எஸ்.எம்.எம்.எஸ்.டொக்டர் உமர் மௌலான (SLEAS)  அவர்கள் வழங்கினார்கள். இணைப்பாளராக ஊசனார் (ADE) அவர்கள் செயற்பட்டார்கள்.

மேலும் இதன் வளவாளராக ஏ.எல்.எம்.றிஸ்வி (CGO)  அவர்கள் செயற்பட்டார். மேலே மாணவர்களுக்குரிய பயிற்சிகளையும், வழிகாட்டுதல்களினையும் றிஸ்வி அவர்கள் வழங்குவதோடு, மாணவர்கள் உற்சாகமாக செயற்படுவதனை நாம் காணலாம்.மேலே இச்செயலர்வின் சில காட்சிகளைக்காணலாம்.

சிறுவர் பாதுகாப்பு விழிப்பூட்டல் செயலமர்வு - 10.10.2019





மட்டக்களப்பு மத்தி வலயத்தின் ஏறாவூர் கோட்ட அல்அமான் வித்தியாலயத்தில் கடந்த 09.10.2019 தொடக்கம் 10.10.2019 வரை சிறுவர் பாதுகாப்பு தொடர்பான இரு நாள் செயலமர்வு நடைபெற்றது. இதில் வளவாளர்களாக வழிகாட்டல் ஆலோசனை ஆலோசகர் எம்.ஆர்.ஜவாத், தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர்களான எம்.பி.எம்.சித்தீக் மற்றும் ஏ.எல்.எம்.றிஸ்வி ஆகியோர் கலந்துகொண்டனர். இதன் போது மேற்படி பாடசாலையின் அதிபர் மற்றும் பயிற்சிகளை வழங்குகின்ற உத்தியோகத்தர்களின் செயற்பாடுகளை நாம் இங்கே காணலாம்.
ஆசிரியர் மத்திய நிலையத்தின் தரம் 2i ஆசிரியர்களுக்கான செயலமர்வு 30.09.2019





மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் தரம் 2i ஆசிரியர்களுக்கான செயலர்வு  கடந்த 30.09.2019அன்று இடம்பெற்றது. இதில் பல விடயங்கள் தொடர்பான வழிகாட்டுதல்கள் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. இதன் வளவாளராக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளர்திரு.எஸ்.எம்.எம்.எஸ்.டொக்டர் உமர் மௌலான (SLEAS),  கலந்து கொண்டார்கள். 

வலயக் கல்விப் பணிப்பாளர் அவர்களினால் கற்றல் பேறு தொடர்பான விளக்கம் வழங்கப்பட்டதோடு, பாடசாலைகளில் தற்போதைய நடைமுறைகள் தொடர்பான அறிவுரைகளும், ஆளுமை மிக்க மாணவர்களை கட்டியெழுப்புவதற்கு ஆசிரியர்களின் வகிபாகம் என்னவென்ற விடயங்கள் தொடர்பான விளக்கம் அளிக்கப்பட்டது.

தேர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்ட மாணவர்களை எவ்வாறு நாம் உருவாக்க முடியும் என்ற விடயங்கள் தொடர்பான வழிகாட்டுதல்களும் வலக்கல்விப் பணிப்பாளர் அவர்களினால் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது.
காத்தான்குடிக் கோட்ட மட் /மம / ஸூஹதா  வித்தியாலயத்தின் தரம் 04 மாணவர்களுக்கான இரண்டாம் தேசிய மொழி சிங்கள பயிற்சிக் கருத்தரங்கு. 12.09.2019








மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் தரம் 04 மாணவர்களுக்கான சிங்கள மொழி அறிவு விருத்தி வேலைத்திட்டம் கடந்த 11.09.2019 தொடக்கம் 12.09.2019 வரை இரு நாட்கள் காத்தான்குடிக் கோட்ட மட் /மம / ஸூஹதா வித்தியாலயத்தில் இடம் பெற்றது.

இதன் மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதல்களை மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.எஸ்.எம்.எம்.எஸ்.டொக்டர் உமர் மௌலான (SLEAS)  அவர்கள் வழங்கினார்கள். இணைப்பாளராக ஏ.இப்றாஹீம் (ADE) அவர்கள் செயற்பட்டார்கள். 

மேலும் இதன் வளவாளர்களாக ஏ.எல்.எம்.றிஸ்வி (CGO)  அவர்களும், எம்.பி.எம்.சித்தீக் (CGO) அகியோரும் காணப்பட்டனர். மேலே மாணவர்களுக்குரிய பயிற்சிகளையும், வழிகாட்டுதல்களினையும் றிஸ்வி அவர்கள் வழங்குவதோடு, மாணவர்கள் உற்சாகமாக செயற்படுவதனையும்  இவ்வித்தியாலயத்தின் அதிபர் முகம்மட் முனீர் அவர்கள் இங்கு உரையாற்றுவதனையும் நாம் காணலாம்.

பெற்றோர்களும் இந்த செயற்பாட்டினை பாராட்டியமையோடு வலயக்கல்விப் பணிப்பாளருக்கு தமது நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டனர். தொடர்ந்தும் இந்த வழிகாட்டலை வழங்குமாறும் வலயக் கல்வி அலுவலக அதிகாரிகளிடம் பெற்றோர்களும் வேண்டிக்கொண்டனர். நாம் மேலே இச்செயலர்வின் சில காட்சிகளைக்காணலாம்.

  தேசிய கல்வி நிறுவகத்தின் பாரம்பரிய மற்றும் வெளிநாட்டு மொழிகள் பிரிவின் ஊடாக அரபு மொழிப் பாடத்திற்கான மொடியூல் தயாரிக்கும் செயற்திட்டத்திட...