Friday, October 25, 2019

தொழில் வழிகாட்டற் சேவைப் பயிற்றுனர் பயிற்சிச் செயலமர்வு - 2019










தேசிய கல்வி நிறுவகத்தின் ஆசிரியர் கல்வி மற்றும் மாற்றுக் கல்விப் பீடத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் அவர்களின் வழிகாட்டலின் கீழ் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் உளவளத்துணை வழிகாட்டல் ஆலோசனை ஆசிரியர்கள், தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர்களுக்கான இரு நாள் வதிவிடச் செயலமர்வு கடந்த 23.10.2019 - 24.10.2019 வரை (02 நாட்கள்) கண்டியில் அமைந்துள்ள கல்வி அபிவிருத்தி மற்றும் பயிற்சி நிலையத்தின் குருதெனியவில் நடைபெற்றது.

இதில் ஒவ்வொரு வலயங்களிலிருந்து குறித்த ஆசிரியர்கள் மற்றும் தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இச்செயலமர்வின் பாடசாலையில் தொழில் வழிகாட்டல் பிரிவின் அவசியம் பற்றியும் எதிர்காலத்தில் தேசிய கல்வி நிறுவகத்தின் ஊடாக தரம் 06 தொடக்கம் தரம் 13 வரை இதனை பாடத்திட்டமாக கொண்டு வருவதற்கு தேசியக் கல்வி நிறுவகம் தீர்மானத்துள்ளமை பற்றியும் தெளிவுபடுத்தப்பட்டது. 

இதில் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி அலுவலகம் சார்பாக இதன் தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.றிஸ்வி மற்றும் வழிகாட்டல் ஆலோசனை ஆசிரியர்களான ஏ.பி.றஸீன், மற்றும் ஏ.எல்.எம்.றிபாஸ் ஆகியார் கலந்து கொண்டனர்.

தமது வலயம் சார்பாக ஏ.எல்.எம்.றிஸ்வி தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் அவர்கள் கருத்துக்களை முன்வைத்தமையோடு, சிறந்த சிந்தனைகளையும், ஆழமான கருத்துக்களினையும் முன்வைத்தமைக்காக தமது வலயத்திற்கு மதிப்பினையும், கௌரவத்தினையும் பெற்றுக்கொடுத்தார்.

இதன் வளவாளர்களாக முன்னால் கல்வி அமைச்சின் தொழில் வழிகாட்டல் ஆலோசனைப் பிரிவுக்குப் பொறுப்பான கல்விப் பணிப்பணிப்பாளரும் தற்போதைய மாகாண உதவிக்கல்விப் பணிப்பாளருமாகிய பிரமசிறி அவர்களும், தேசிய கல்வி நிறுவகத்தின் தொழில் வழிகாட்டல் ஆலோசனைப் பிரிவுக்குப் பொறுப்பான கீதானி அவர்களும், சனீர், சீ.கே.வின்சன்.எஸ்.பிரந்திரன் ஏனைய உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர். 

No comments:

Post a Comment

  தேசிய கல்வி நிறுவகத்தின் பாரம்பரிய மற்றும் வெளிநாட்டு மொழிகள் பிரிவின் ஊடாக அரபு மொழிப் பாடத்திற்கான மொடியூல் தயாரிக்கும் செயற்திட்டத்திட...