Monday, October 7, 2019


புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் கிழக்கு மாகாணத்தில் முதலிடம்
கடந்த ஞாயிறு 06.10.2019 அன்று வெளியிடப்பட்ட புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்ற மானவர்களின் அடிப்படையில் கிழக்கு மாகாண ரீதியில் முதலிடத்தை மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் பெற்றுக்கொண்டுள்ளது.
இதுதொடர்பில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் கல்விப்பணிப்பாளர் டாக்டர்.SMMS.உமர் மௌலானா கருத்து தெரிவிக்கையில்,இது ஒரு வரலாற்று சாதனை என்றும் கடந்த முறை(2018) 270 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்ததாகவும் இம்முறை 2019 ம் ஆண்டு 405 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்திருப்பதாகவும்,இதில் கோரளை மேற்கு கல்விக்கோட்டத்தில் 173 மாணவர்களும்,காத்தான்குடி கல்விக்கோட்டத்தில் 161 மானவர்களும், ஏறாவூர் கல்விக்கோட்டத்தில் 71 மாணவர்களும் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர்.
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயமானது முதலிடத்தை பெற்றுக்கொள்வதற்கு வலயக்கல்வி அலுவலகமூடாக பல்வேறு விசேட செயற்திட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்த விசேட செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்த ஒத்துழைத்து உதவிய வலயக்கல்வி அலுவலகத்தின் கல்வி சார் உத்தியோகத்தர்கள்,கல்வி சாரா உத்தியோகத்தர்கள்,விசேடமாக பாடசாலைகளின் அதிபர்கள்,ஆசிரியர்கள்,பெற்றோர்களுக்கு வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்வதாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் கல்விப்பணிப்பாளர் டாக்டர்.உமர் மௌலானா மேலும் தெரிவித்தார்.
தகவல் :- AGM.ஹகீம் (SLEAS) பிரதேச கல்விப் பணிப்பாளர். - காத்தான்குடி.


No comments:

Post a Comment

  தேசிய கல்வி நிறுவகத்தின் பாரம்பரிய மற்றும் வெளிநாட்டு மொழிகள் பிரிவின் ஊடாக அரபு மொழிப் பாடத்திற்கான மொடியூல் தயாரிக்கும் செயற்திட்டத்திட...