Tuesday, October 1, 2019

மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளரின் சர்வதேச சிறுவர் தின வாழ்த்துச் செய்தி - 2019


ஒக்டோபர் 1ம் திகதி 2019 இன்று சர்வதேச சிறுவர் தினம் உலகெங்கும் கொண்டாடப்படுகின்றது. இவ்வருடத்திற்கான சிறுவர் தின மகுட வாசகம் ''நட்பு சூழ சிறுவர்களுக்கு வெற்றியைப் பரிசளிப்போம்'' என்பதாகும்.

ஆனால் இன்று 13,00704 பேர் வரை குழந்தைத் தொழிலாளர்களாக காணப்படுகின்றனர்.

அவர்களில் 87,854 பேர் சிறுவர் தொழிலாளர்களாகவே வாழ்வதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தோட்டப்புறங்களைச் சேர்ந்த 2,321 சிறுவர்களும் சிறுவர் தொழிலாளர்களாக உள்ளனர்.

34,494 சிறுவர்கள் தொழிலில் அமர்த்தப்பட்டுள்ளதுடன் அவர்களில் 65,210 ஆண் சிறுவர்கள் ஆவர்.

சிறுவர் தினம் போன்றே இன்று முதியோர் தினமும் கொண்டாடப்படுகின்றது.


  • முதியோர்களுக்கு உரிய இடத்தை வழங்கும் நாள் எனும் தொனிப்பொருளில் முதியோர் தினம் இன்று கொண்டாடப்படுகின்றது.

தற்போது நாட்டில் 1,30,000 முதியோர் வாழ்வதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க 100 வயதைத் தாண்டிய 650 பேர் இலங்கையில் வாழ்கின்றனர்.

முதியோர் இல்லங்களில் அன்றி வீடுகளில் வசிக்கும் முதியோரின் எண்ணிக்கை 9000 இற்கும் அதிகம் என தேசிய முதியோர்களுக்கான செயலகம் தெரிவித்துள்ளது.

எனவே இத்தினத்தில் எமது  பாடசாலைகளில் கொண்டாடப்படும் இன்றைய சிறுவர் தின நிகழ்வுகள் சிறப்பான முறையில் நடைபெற வேண்டுமென மட்டக்களப்பு மத்தி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.எஸ்.எம்.எம்.எஸ்.டொக்டர் உமர் மௌலான (SLEAS) அவர்கள் தமது  பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக்கல்விப் பணிப்பாளர்கள், உதவிக்கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், பாட இணைப்பாளர்கள் , அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் சார்பாக தமது வாழ்த்துக்களைத் அன்பின் இனிய மாணவர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றார்கள்.

தகவல் ALM.றிஸ்வி - தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர். 

No comments:

Post a Comment

  தேசிய கல்வி நிறுவகத்தின் பாரம்பரிய மற்றும் வெளிநாட்டு மொழிகள் பிரிவின் ஊடாக அரபு மொழிப் பாடத்திற்கான மொடியூல் தயாரிக்கும் செயற்திட்டத்திட...