Friday, December 29, 2017

ஆரம்பக்கல்வி ஆசிரியர்களுக்கான திறன் விருத்திச் செயலமர்வு
Add caption


Add caption


 கடந்த 29.12.2017 அன்று கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் ஆரம்பப்பிரிவு ஆசிரியர்களுக்கு இரண்டாம் மொழி சிங்களத்தினை மாணவர்களுக்கு இலகுவான முறையில் எவ்வாறு கற்பிக்க முடியும் என்ற வழிகாட்டல் கருத்தரங்கு பிறந்துரைச்சேனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் மட்டக்களப்பு மத்தி வலயக்கல்வி அலுவலகத்தின் பிரதிக்க்கல்விப்பணிப்பாளர் திரு. இப்றாஹீம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இதில் ஆரம்பக்கல்வி ஆசிரிய ஆலோசகர் திரு நவாஸ் அவர்களும் ஆசிரியர்களுக்கான செயற்பாடுகளை மேற்கொள்கின்றார். 
  காத்தான்குடி ஆசிரிய மத்திய நிலையத்தின் உளவளத்துணை தொழில்வழிகாட்டல் உத்தியோகத்தரான திரு. ஏ.எல்.எம்.றிஸ்வி அவர்கள் ஆசிரியர்களுக்கு மாணவர்களின் சிங்கள மொழியினை இலகுவாக கற்பிப்பதற்கான உக்திகளை நாம் எவ்வாறு கையாளலாம் என்ற வழிகாட்டலினை வழங்கிக்கொண்டிருப்பதனைக் காணலாம்.

Tuesday, December 26, 2017


தாஜ்மஹால் உலக அதிசயம் ஆனது எப்படி ?

'உலகின் ஏழு புதிய அதிசயங்கள்’ என்ற அறக்கட்டளை அமைப்பு, உலகம் முழுக்க ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியது. அதன் முடிவுகளை,  2007 ஜூன் 7-ம் தேதி (07.07.07) அறிவித்தது. அதில் தாஜ்மஹாலும் இருந்தது. அதற்கு முன்பே தாஜ்மஹாலை உலகப் பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ அமைப்பு அறிவித்தது.
உலக அதிசயங்கள் பட்டியலில் ஒரு நினைவுச் சின்னம் பரிசீலனையில் இடம்பெற அவை மனிதர்களால் கட்டப்பட்டிருக்க வேண்டும்; 2,000 ஆண்டுகளுக்குள் அதன் வயது இருக்க வேண்டும்; பாதுகாக்கப்பட்டு பொலிவுடன் திகழ வேண்டும் என நிறைய நிபந்தனைகள் இருந்தன.
ஏழு அதிசயங்களும் ஒவ்வொரு கருப்பொருளை மையப்படுத்துவதாக அமைந்திருந்தன. விடாமுயற்சிக்கு எடுத்துக்காட்டாக சீனப் பெருஞ்சுவரும், காதலுக்கான எடுத்துக்காட்டாக தாஜ்மஹாலும் தேர்வு செய்யப்பட்டன.
ஏ.எல்.எம்.றிஸ்வி - உளவளத்துணை தொழிவழிகாட்டல் அதிகாரி

Wednesday, December 20, 2017


சர்வதேச ரீதியில் உலகின்முக்கியதினங்கள்
ஜனவரி 10  இரத்ததான தினம்
ஜனவரி 11  லால் பகதூர் சாஸ்திரி நினைவு தினம்
ஜனவரி 12  சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம்
ஜனவரி 15  இராணுவ தினம்
ஜனவரி 23  நேதாஜி பிறந்த தினம்
ஜனவரி 25  இந்திய யாத்திரைகள் தினம்
ஜனவரி 26  குடியரசு தினம்
ஜனவரி 26  சர்வ தேச கஷ்டம்ஸ் தினம்
ஜனவரி 28  லாலா லஜபதி ராய் பிறந்த தினம்
ஜனவரி 30  சர்வதேச தொழுநோய் தினம்
பிப்ரவரி 3   அண்ணா நினைவு நாள்
பிப்ரவரி 28  தேசிய அறிவியல் தனம்
மார்ச் 8        தேசிய மகளிர் தினம்
மார்ச் 15      உலக நுகர்வோர் தினம்
மார்ச் 21      உலக வன தினம்
மார்ச் 22      உலக தண்ணீர் தினம் 
மார்ச் 23      உலக வானியல் தினம்
ஏப்ரல் 5       தேசிய கடல் தினம்
ஏப்ரல் 7       உலக சுகாதார தினம்
ஏப்ரல் 14     தீயணைப்பு வீர்ர அஞ்சலி தினம்
ஏப்ரல் 14     அம்பேத்கார் பிறந்தநாள்
ஏப்ரல் 18     உலக மரபு உரிமை தினம்
ஏப்ரல் 22     உலக நாடு தினம், பூமி தினம்
மே 1           உழைப்பாளர்கள் தினம்(மே தினம்)
மே 2           உலக ஆஸ்துமா தினம்
மே 3           பத்திரிக்கை சுதந்திர தினம்
மே8            உலக செஞ்சிலுவை தினம்
மே 9           புத்த ஜெயந்தி
மே 12         உலக செவிலியர் தினம்
மே 13         தேசிய ஒற்றுமை தினம்
மே 15         சர்வதேச குடும்ப தினம்
மே             (இரண்டாவது ஞாயிறு) தாய் தினம்
மே 17         உலக தொலை தொடர்பு தினம்
மே 21         பயங்கரவாத எதிர்ப்பு தினம் 
மே 21         ராஜீவ்காந்தி நினைவு தினம்
மே 24         காமன்வெல்த் தினம்
மே 27         நேரு நினைவு தினம்
மே 31         உலக புகையிலை ஒழிப்பு தினம்
ஜூன் 5       உலக சுற்றுப்புற சூழல் தினம்
ஜூன் 26     உலக போதை ஒழிப்பு தினம்
ஜூலை11   உலக மக்கள் தொகை தினம்
ஆக             உலக நண்பர்கள் தினம்(முதல் ஞாயிறு)
ஆக 6         ஹிரோஷிமா தினம்
ஆக 9         வெள்ளையனே வெளியே தினம்
ஆக15        இந்திய சுதந்திர தினம்
ஆக 15       வொய்க்கேன் தினம்
ஆக 29       விளையாட்டுத் தினம்
செப் 5       டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணன் பிறந்த நாள்(ஆசிரியர்கள் தினம்)
செப் 8        உலக எழுத்தறிவு தினம்
செப் 18      உலக அறிஞர்கள் தினம்
செப் 22      ரோஜா தினம்
செப் 26      காது கேளாதோர் தினம்
செப் 27      உலக சுற்றுலா தினம்
அக் 1         உலக விலங்கு தினம்
அக் 2         காந்திஜி பிறந்த தினம்
அக் 3         உலக உயிரின தினம்
அக் 4         தேசிய மறுசீரமைப்பு தினம்
அக் 8         உலக முதியோர் தினம்
அக் 9         உலக அஞ்சல் தினம்
அக் 10      தேசிய அஞ்சல் தினம்
அக் 14       உலகத் தர தினம்
அக் 15       கண்பார்வையற்றோர் தினம்
அக் 16       உலக உணவு தினம்
அக் 21       ஆசான் ஹீந்த் நினைவு நாள்
அக் 24       ஐக்கிய நாடுகள் தினம்
நவ 13       குருநானக் பிறந்த தினம்
நவ 14       குழந்தைகள் தினம்
நவ 17       லாலா லஜபதிராய் நினைவு தினம்
நவ 19       இந்திராகாந்தி பிறந்த தினம்
நவ 19       இந்திய ஒருமைப்பாட்டு தினம்
நவ 19       இந்திய அரசியலமைப்பு தினம்
நவ 26       சட்ட தினம்
டிச 1          உலக எய்ட்ஸ் தினம்
டிச 5          கடற்படை தினம்
டிச 6         அம்பேத்கார் நினைவு நாள்.
டிச 7          தேசிய கொடி தினம்
டிச 8         மனநிலை பிறழ்ந்தோர் தினம்.
டிச 10       ஐக்கிய நாட்டு மனித உரிமை தினம்.
டிச 10       மனித உரிமை தினம்.
டிச 17       காமராஜர் பிறந்த தினம்.
டிச 23       விவசாயிகள் தினம்
டிச 24       எம்.ஜி.ஆர். நினைவு தினம்.
ஏ.எல்.எம்.றிஸ்வி, உளவளத்துணை தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர்
இடது, வலது பக்க மூளைகளின் செயற்பாட்டடினை தெரிந்துகொள்வோம்

நூறு புறா, நூறு மணி நேரத்தில், 100 மூட்டை அரிசி சேர்த்தால், 10 புறா, 10 மணி நேரத்தில் எத்தனை மூட்டை அரிசி சேர்க்கும்...' இந்தக் கேள்வியை உங்களிடம் நான் கேட்டால், உடனே என்ன செய்வீங்க?

கால்குலேட்டரை எடுத்து, விடையை கண்டுபிடிப்பீங்க தானே! இது போன்ற பல புதிர்களையும், பல விஷயங்களையும் நினைவில் வைத்துக் கொள்ள, நமது மூளை முழுமையாக செயல்பட வேண்டும். அப்போ, யாரோட மூளையும் முழுமையா செயல்படுவதில்லையா? என்று தானே கேட்குறீங்க...
நமக்கு வலது, இடது என இரு பக்க மூளை உள்ளன. இதற்கிடையில் நடுபக்க மூளை எனும் பகுதி, வலது, இடது மூளைக்கு இணைப்பு பாலமாக உள்ளது. ஆக்ஸிஜன் அதிகம் கிடைத்தால், மூளையின் செயல்கள் சுறுசுறுப்படையும் இருந்தாலும், இடது பக்க மூளையின் செயல்களே சுறுசுறுப்படையும். வலது பக்க மூளையின் பணிகளான, பேச்சுத் திறன், எழுத்துத் திறன், கற்பனைத்திறன் சற்றே தோய்வாகவே இருக்கும். யாரும் வலது பக்க மூளையை பயன்படுத்துவதில்லை. இவ்வாறு பயன்படுத்தினால் மூளையின் செல்களிலுள்ள சோர்வு மறைந்து, புத்துணர்ச்சியுடன் மூளை செயல்படத் துவங்கும்.
வலது, இடது என மூளை செயல்திறன் இருந்தால் பல மடங்கு திறமை அதிகரிக்கும். இதை எப்படி செயல் படுத்துவது? யார் உதவுவார்கள் என்றால், 'மிட் ப்ரைன் ட்ரெய்னர்ஸ்' தான் உங்களுக்கு, 'ஹெல்ப்' பண்ண முடியும். 
அதாவது, நடுபக்க மூளை. குறிப்பாக, தகவல் பரிமாற்றத்துக்கு உதவுவது. வலது, இடது மூளையை சரிசமமாக செயல்பட வைக்கும். இதற்கு நடுபக்க மூளையை தூண்டிவிட வேண்டும். நிறைய சாதனையாளர்கள், ஆல்பர்ட் ஐன்ஸ்டின், ஏ.பி. ஜெ. அப்துல்கலாம் போன்றவர்கள், புதுப் புதுப் விஷயங்களை கண்டறிய காரணமாக இருந்தது இரு பக்க மூளையையும் பயன்படுத்தியதுதான். 
இந்த நடுபக்க மூளைதான் பார்வை, கேட்பது, தூக்கம், எழுவது, உடல்சூடு, உடலின் இயக்கு விசை மற்றும் இயங்கு விசை போன்றவற்றிக்கு உதவுகிறது. எனவே, நடு பக்க மூளையை தூண்டிவிடுவதன் மூலம், சரியான தகவல் பரிமாற்றம் செய்ய மூளை மற்றும் இதர உறுப்புகளுக்கு உதவுகிறது. பிறகு புதிது புதிதாக மூளை யோசிக்க ஆரம்பிக்கும். இதற்கு சிறப்பான பயிற்சி தேவை. இதற்கான பயிற்சியை தான் ஜி.ஆ.அருண் சேஷாய் மற்றும் சி.எஸ்.ஈஷ்வர் பிரசாத் தருகின்றனர். குழந்தைகளின் உலகமே புதிரானது. இன்றைக்கு பிடிக்கும் விளையாட்டு பொம்மை, நாளை பிடிக்காமல் போகும். காரணம், யாருக்கும் தெரியாது. இதுபோல, அவர்கள் உலகத்தில் நிறைய நல்ல விஷயங்கள் இருந்தாலும், எதிர்மறையான விஷயங்களும் இருக்கின்றன. சில குழந்தைகளுக்கு சரியான கவனிப்பு திறன் இருக்காது. தன்னம்பிக்கை, கூர்மையான பார்வைத்திறன், ஆர்வம், இருக்காது. மூளை, சரியான தகவல்களை மற்ற உறுப்புகளுக்கு கட்டளையிடாது. 
இன்றைக்கு, நிறைய அம்மாக்களின் புலம்பல்களே இதுதான். 'என் குழந்தை மிஸ் சொல்லித் தருவதை அப்படியே சொல்றா; ஆனால், டெஸ்ட் பேப்பரில் எழுத மாட்றா...' என்பதுதான். இத்தோடு விட்டால் பரவாயில்லை. அந்தக் குழந்தையை அடித்து கொடுமைபடுத்துகின்றனர். 
'ஏன் எழுத மாட்ற... அவ பாரு எப்படி எழுதுறா... எனக்கு வந்து பொறந்திருக்கியே' என்று சொல்லி தன்னுடைய கோபத்தை எல்லாம் குழந்தையின் மீது கொட்டுகின்றனர். ஆனால், உண்மை என்ன தெரியுமா? குழந்தையின் மூளை, மனதில் எடுத்துக் கொள்ளும் விஷயங்களை எழுதும்படி கைக்கு மூளை கட்டளையிட வேண்டும். அப்போது தான் கை எழுதும். மூளைக்கும், கைக்கும்மான தொடர்பில் பிரச்னை இருந்தால், மூளை சொல்லாமல் கை எழுதாது. இதனால்தான் உங்கள் குழந்தைகள் மனப்பாடமாகச் சொல்வதை எழுத முடியவில்லை. இப்படிப்பட்ட குழந்தைகளுக்காகவே விசேஷித்த பயற்சி அளிக்கின்றனர், 'மிட் பிரைன் மென்டார்ஸ்' இரண்டு பக்க மூளையை செயல்பட வைப்பதின் நிமித்தம், உங்கள் குழந்தைகளை புத்திசாலிகளாக்குகின்றனர்.
இதற்கு, 'மிட் ப்ரைன்' நிறுவனம் பல பயிற்சி வகுப்புகளை எடுக்கின்றனர். உதாரணம், ஐஸ் பிரேக்கிங், நிறங்களை கண்டுபிடிப்பது, தகவல் பரிமாற்ற விளையாட்டு, பார்வைத்திறன் விளையாட்டு, புதிர் கேள்வி போன்றவை. எந்த விளையாட்டும் நிரந்தரமானது அல்ல; குழந்தைகளின் வயதைக் கொண்டு விளையாட்டு முறை மாற்றியமைக்கப்படுகிறது. 
இதில் யோகா, தியானம் கூட உண்டு. இதனால் குழந்தைகளுக்கு என்ன பயன் என்றால், சுயமாக ஒரு விஷயத்தை கற்றுக் கொள்கின்றனர்; தன்னம்பிக்கை கிடைக்கப் பெறுகின்றனர்; எதிர்மறையான எண்ணங்கள் மறக்க கடிக்கப்படுகின்றன; 'டி.வி', கைபேசி மீதிருக்கும் ஆர்வம் குறைகிறது; நடத்தையில் மாறுதல் ஏற்படுகிறது; எல்லா செயல்களிலும் ஈடுபாடு ஏற்படுகிறது; மன அழுத்தம் குறைகிறது; அதே நேரத்தில் பெற்றவர்களும் பயன் அடைகின்றனர். 
குழந்தைகளிடம் ஏற்படும் முன்னேற்றம் காரணமாக, அவர்கள் பற்றிய மன அழுத்தம் பெற்றோருக்கு குறைகிறது. 
இதற்கான பயிற்சி காலம் மூன்று மாதம் மட்டுமே. 6 முதல் 15 வயது குழந்தைகளுக்கு மட்டுமே ஆனது இப்பயிற்சி. பயன்படுத்திக் கொள்ளுங்கள்: 

Sunday, December 17, 2017


Hardware & Networking பாடநெறியினை நிறைவு செய்ய மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு



இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு காரியாலயத்தில் மூன்றாம் நிலைக்கல்வி அசைச்சினது பதவின் கீழ் Kavi Art நிறுவத்தினர் கடந்த ஒரு மாதகாலமாக Hardware & Networking பாடநெறியினை நடாத்தினர். இதற்கு மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் உளவளத்துணை மற்றும் தொழில் வழிகாட்டல் அதிகாரியான திரு.ஏ.எல்.எம்.றிஸ்வி அவர்களின் வழிகாட்டலில் இப்பாடநெறிக்கு இவர்கள் இணைத்து விடப்பட்டனர். 

பாடநெறியின் முடிவில் இப்பாடநெறியினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தில் மட்டக்களப்பு பிராந்தி காரியாலயத்தின் தலைவர் அவர்களையும்,  நிறுவனத்தின் பணிப்பாளர் திரு.சுலக்சன் அவர்களையும், ஏனையோரையும் காணலாம். இப்பாடநெறயினை பூரத்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பபடுவதோடு திரு.றிஸ்வி அவர்களால் சிறப்புரையாற்றப்டுகின்றது.

இலங்கை: உள்ளூராட்சி தேர்தல் - வேட்புமனு நிராகரிப்புகள் தொடர்பாக மஹிந்த அணி நீதிமன்றம் செல்கிறது?





இலங்கை சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகியவற்றினால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் சில நிராகரிக்கப்பட்டுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுனவினால் சமர்ப்பிக்கப்பட்ட 6 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
பதுளை¸மஹரகம¸ மஹியங்கனை¸ பானந்துரை¸ அகலவத்தை மற்றும் வெலிகம ஆகிய பகுதிகளுக்கான வேட்பு மனுக்களே நிராகரிக்கப்பட்டுள்ளன.
ஆண் பெண் பால் நிலை தொடர்பான ஆவண குறைப்பாடே மஹரகம உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனு நிராகரிக்க காரணம் என தெரிவத்தாட்சி அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
மாவட்டத்திற்காக கட்சியினால் நியமிக்கப்பட்ட பொறுப்பான அதிகாரியினால் வேட்பு மனு சமர்ப்பிக்கப்படாமையே வெலிகம உள்ளுராட்சி மன்றத்திற்கான வேட்பு மனு நிராகரிக்க காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில்¸ பதியத்தலாவை மற்றுமு; தெஹியத்தகண்டிய ஆகிய உள்ளுராட்சி மன்றங்களுக்கான இலங்கை சுதந்திர கட்சியின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
அதே போன்று, அம்பாறை மாவட்டத்திற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு வேட்பு மனுக்கள் நிராகரிக்ககப்பட்டுள்ளன.
ஆலையடிவேட்பு மற்றும் சம்மாந்துறை ஆகிய உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுவே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

Saturday, December 16, 2017

மாணவர்களின் கல்வி தடைபடுவதற்கான காரணங்கள்

கல்வி என்பதன் வரைவிலக்கணம்

கல்வி என்பதைக் குறிக்கும் ஆங்கிலப்பதமான “Education” என்ற சொல் “educare” என்ற இலத்தீன் மொழிச் சொல்லிலிருந்து தோன்றியதாகும். நம் பண்பாட்டில் கல்வியின் உண்மையான நோக்கம் மாணவர்களின் அறிவைப் பெருக்குவதும் அனுபவத்தைப் பெறுவதற்கும் அவர்களின் நல்ல பழக்கவழக்கங்களை வளர்த்து எதிர்காலத்தைச் சிறப்புடன் அணுகச் செய்வதுமேயாகும். பொதுவாகக் கல்வியானது ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு சமூக நடத்தைகளின் அறிவைக்கடத்துகின்ற ஒரு செயற்பாங்கு எனலாம் என்று அறிஞர்கள் கருத்துத் தெரிவிக்கின்றார்கள்1.
கல்வி என்றால் என்ன? எனும் வினாவுக்கு விடை தேடும் நோக்கில் பல்வேறு அறிஞர்கள் பல்வேறு கருத்துக்களைக் கூறியுள்ளனர். அந்தவகையில்,
Ø ஜோன்டிய+வி:- பிள்ளைக்குரிய ஆளுமையையும் வாழ்வதற்குரிய ஒழுக்கங்களையும் அனுபவங்களையும் பெற்றுக்கொடுத்தலே கல்வி என்றார்.
Ø பிளேட்டோ:- ஆரம்ப வயதுகளில் பிள்ளைகளிடம் ஏற்படும் இயல்பான ஆர்வம், உயரிய நற்செயல் ஆகியவற்றிற்கு உரியமுறையில் அளிக்கப்படும் பயிற்சியே கல்வி என்றார்.
Ø ரூசோ:- இயற்கைக்கேற்ப விருத்தியடையும் செயற்பாடுதான் கல்வி என்றார்.
Ø விவேகானந்தர்;:- மனிதனிடம் ஏற்கனவே பொதிந்திருக்கும் முழுமை பெற்ற நிறைவினை மலரச் செய்வது கல்வியாகும்.
Ø பிரான்ஸிஸ்பேகன்:- மகிழ்ச்சிகரமான அதிஷ்டமுள்ள வாழ்க்கையை நடாத்தும் பொறுப்பும் புத்தியை விருத்தி செய்வதும் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதுமே கல்வி என்றார்.
Ø சோக்கிரட்டீஸ்:- உறுதியான உடலில் உறுதியான மனதைத் தோற்றுவிப்பதே கல்வி என்றார்.
Ø மகாத்மாகாந்தி:- பிள்ளையினுள்ளே அடங்கியுள்ள அனைத்து ஆற்றலையும் வெளிக்கொணருவதே கல்வி என்றார்.
Ø அரிஸ்டோட்டில்:- மனிதனின் திறமையை குறிப்பாக அவனுடைய மனதை வளாக்;கின்ற ஒரு செயற்பாங்கு கல்வி என்றார்.
எனவே கல்வி என்பதற்கு வரைவிலக்கணம் கொடுப்பது மிகவும் சிக்கலான விடயமாகும்;. எனினும் அறிவைக் கொடுத்தல், தனியாள் விருத்தி, நடத்தை விருத்தி, ஆளுமை வளர்ச்சி, அனுபவங்களைப் பெற்றுக் கொடுத்தல், ஒழுக்கம் போன்றவற்றை ஏற்படுத்துவது கல்வியின் சிறப்பம்சங்களாகும்.2
கல்வியின் முக்கியத்துவம்
கல்வி சமூகத்தில் அதிகளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஓர் சமூக நிறுவனமாகும். கல்வியின் முக்கியத்துவத்தை பலமேதைகள் வலியுறுத்தியுள்ளார்கள்.
சமூகவியலின் தந்தை என அழைக்கப்படும் ஆகஸ்ட்கொம்ற், கிரேக்க மாமேதை அரிஸ்டோட்டில், கல்வி விஞ்ஞானம் மற்றும் பண்பாட்டின் ஐக்கிய தேசிய தாபனம் ஆகியன சமூக ஒற்றுமை மற்றும் மனித ஆளுமையின் வளர்ச்சிக்கு கல்வி அவசியம் என கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுன.
கல்வி மனதிற்கும் உடலிற்கும் பயிற்சி அளிப்பதோடு அல்லாமல் சில முக்கிய நோக்கங்களையும் மனித சமூகத்திற்கு எடுத்துரைக்கின்றது. மேலும் கல்வி மனித சமுதாயங்களில் உலகம் முழுவதும் பரவியுள்ள ஒரு நிறுவனமாகக் காணப்படுகின்றது.
கல்வியானது, சமூகமயமாதலை வெற்றிகரமாகச் சமுதாயத்தில் செய்துமுடிக்க உதவுகின்றது. அதாவது நவீன சமூகத்தில் குடும்பம் சமூகமயமாதலின் அனைத்து அம்சங்களையும் செயற்படுத்தத் தவறவிட்ட சூழ்நிலையில் இதர அமைப்புக்கள் அப்பணியைச் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கின்றன. இதனால் நவீன சமூகத்தில் கல்வி இப்பணியைச் செய்து வருகின்றது.
கல்வியானது ஓரு சமூகத்தின் பண்பாட்டை ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறையினருக்குப் பரப்புகின்ற சிறந்தவொரு சாதனமாகத் திகழ்கின்றது. இதன் மூலம் ஒரு தனிமனிதன் தன்னுடைய கலாசாரத்தைத் தெரிந்துகொண்டு சமூகத்தில் சிக்கல் இல்லாமல் வாழக் கற்றுக் கொள்கின்றான். மேலும் தன்னுடைய முன்னோர்களின் பண்பாட்டையும் தெரிந்து கொள்கின்றான்.
கல்வியானது சமூகத்தில் உள்ள பல்வேறு அமைப்புக்களையும் இணைக்கின்றது. உதாரணமாகப் பல்வேறு பிரிவுகள் மற்றும் பண்பாட்டுக் குழுக்கள் இவற்றிடையே சரியான தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள கல்வி ஒரு பாலமாக அமைகின்றது. மற்றும் பண்பாட்டைப் பரப்புவதற்கும் அதைப் பாதுகாப்பதற்கும் கல்வி அவசியமாகின்றது.
கல்வி நவீன சமூகத்தில் மதம் அரசாங்கம் பொருளாதாரம் மற்றும் குடும்பம் போன்றவற்றில் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தின் அமைப்பு, திருமணம் போன்றவற்றிலும் நவீன கல்வியினால் நிறைய மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. அதாவது குடும்பத்தில் கணவன், மனைவி மற்றும் குழந்தைகளிடையே உறவுகளையும் புதிய செயற்பாடுகளையும் கல்வி உருவாக்குகின்றது. நவீன சமூகத்தில் கல்வி பல்வேறு வர்க்கங்களில், செயல்கள் மற்றும் தேவைகளைப் பூர்த்தி செய்கின்ற ஓரு சிறப்பான அமைப்பாகத் திகழ்கின்றது. கல்வி நாட்டுப்பற்றின் தத்துவத்தை உணர்த்துகிறது.
கல்வி சமூகத்திற்கும் தனிமனிதர்களுக்கும் உள்ள உறவை வலுப்படுத்துகிறது. மேலும் ஒரு மிகச் சிறந்த சமூகக்கட்டுப்பாட்டுச் செயலியாக இருந்து நல்லொழுக்கத்தைக் கற்றுத் தருகின்ற மிகப்பெரிய சக்தியாக இருக்கிறது.
கல்வியைப் பொதுவாக இரண்டாக வகைப்;படுத்துகிறார்கள். அவை முறைசார் கல்வி மற்றும் முறைசாராக் கல்வி என்பனவாகும். எளிய மற்றும் கல்வியறிவு இல்லாத சமூகங்களில், கல்வி முறையானதாக இல்லை. அங்கே குடும்பம் மற்றும் சமுதாயம் தான் அவர்களுடைய பண்பாடு மற்றும் நெறிமுறைகளைப் போதித்து வந்தது. அவ்வளவிற்கு கல்வி முறையானது சமுதாயத்தோடு ஒட்டியிருந்தது என்றே கூறலாம்.
நமது நாடு வளர்ந்து வரும் நாடு. இதில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் போன்றவற்றில் வளர்ச்சி ஏற்பட்டால் தான்; நாடு முன்னேறும். ஓரு நாட்டின் பொருளாதார மேம்பாடு அந்நாட்டின் மனித சக்தியைச் சார்ந்துள்ளது. அந்நாட்டின் செல்வம் அம்மக்களிடம் இருக்கின்றது. எனவே அம் மக்களின் திறமைகளையும் ஆற்றல்களையும் வளர்த்து நாட்டில் ஒரு மறுமலர்ச்சி ஏற்படவேண்டுமெனில் அது தொழிற்கல்வியால் மட்டுமே சாத்தியமாகும். இத்தகைய தொழிற்கல்வி என்பதும் கல்வி மூலமே கிடைக்கின்றது எனலாம்;(கிருஸ்ணமூர்த்தி.ஜெ,2000).
மாணவர்கள் கல்வி தடைபடுவதற்கான காரணங்கள்
மாணவர்கள் கல்வி கற்பதற்கு பல காரணிகள் தடையாக அமைகின்றன. இது தொடர்பாக கு.யசிதரன் அவர்களால் எழுதப்பட்ட “கிராமக் கல்வி மூலம் சமூக மேம்பாடு சாத்தியமா?” எனும் கட்டுரையில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை எடுத்துக் கொண்டால், அதில் கிராமத்தொழிலாளியின் வாழ்வில் பல தரப்பட்ட நலச்சிக்கல்கள் காணப்படும், இது கற்கமுடியாத நிலையைத் தோற்றுவிக்கும், கிராமங்களில் நிலவும் நிச்சயமற்ற தன்மை, சூழல், அச்சமூட்டும் மனவெழுச்சி, நோய்கள் என்பனவற்றால் மாணவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு, கல்வி பெறமுடியாத நிலை உருவாகிறது. மேலும் கிராமப்பாடசாலைகளில் மலசலகூட வசதியின்மை, குடிநீர் வசதியின்மை போன்றவை இலங்கையில் நிலவும் முக்கியமான பிரச்சினையாகும், கிராமங்களில் உள்ள மக்கள் பிள்ளைகளுக்கு ஏற்ற சத்துள்ள உணவுகள் எவை எனத் தெரிந்தும், சத்துள்ள உணவுகளான பழங்கள், பால், முட்டை என்பனவற்றைப் பணம் பெறும் நோக்கத்திற்காக விற்று தம்முடைய வசதிக்கேற்றவாறு பாண், பணிஸ், உரொட்டி, போன்ற சாதாரண உணவுகளை வாங்கி உண்கின்றனர் போன்ற அம்சங்கள் குறிப்பிடப்பட்டு, இவை பிள்ளைகள் கல்விபெறுவதற்கு தடையாக அமைகின்ற காரணிகள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
வீட்டில் சிறுவர்களுக்கு எழும் பிரச்சினைகள் தொடர்பில் டீடழஉம என்ற அறிஞர் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். ஆவரின் ஆய்வு முடிவானது அதிகசிக்கல்கள், பழக்கவழக்கங்கள், நடத்தைகள், ஒழுக்கங்கள் ஆகியவற்றில் எழும் பிரச்சினைகள் இளையோரின் பழக்கவழக்கங்களை பாதிக்கின்றன என்ற வகையில் அமைந்திருந்தது. பெற்றோர் பிள்ளைகளைக் கடுமையாக நடாத்துதல், குற்றம் கூறுதல், அவசரப்படுத்தல் என்பன பிள்ளைகளின் மனநிலையில் பாதிப்பை ஏற்படுத்துவதால் அவர்கள் கல்வியிலும் வெறுப்பை அடைகிறனர். அத்துடன் திரைப்படம் பார்த்தல், போட்டிகளில் பங்குபெறல், அரட்டை அடித்தல், ஒலிநாடா கேட்டல், கோயில் நிகழ்ச்சிகளில் பங்குபெறல், விளையாட்டுகளில் பங்குபெறல் என்பவற்றில் அதிக ஆர்வம் காட்டுதலும் பிள்ளைகளின் கல்வி தடைப்படக் காரணங்களாகும்.
பெற்றோரின் தவறான வாக்குறுதிகள், அதாவது ‘குறிப்பிட்ட வயதை அடைந்ததும் நீ பாடசலைக்கு செல்லவேண்டியதில்லை’ போன்றவாறான வாக்குறுதிகள், பள்ளிக்குச் செல்லாமல் ஊர் சுற்றுதல், வீட்டை விட்டு ஒடுதல், சிறு சிறு திருட்டுகளில் கல்வி தடைப்படுவதற்கு காரணங்களாக அமைகின்றன4.
ஞா.தில்லைநாதன் அவர்களால் எழுதப்பட “கல்வியும் மேம்பாட்டிற்கான சமூக மயப்படுத்தல்” எனும் தலைப்பிலமைந்த கட்டுரையில் மாணவர்கள் கல்வியில் சமூகமயப்பட முடியாமைக்கு உடல், உள, குடும்ப, சமூக பாதிப்புகளே காரணம் என்றும்; கூறப்பட்டிருந்தது5.
மனமுறிவு, முரண்பாடு, அச்சுறுத்தல், தகைப்பு, பதகளிப்பு என்பன கல்வி தடைப்படுவதற்குப் பிரதானமானவை என்று கூறப்பட்டுள்ளது. மாற்றங்களை அடிக்கடி உள்வாங்கவேண்டிய சமூக கலாசார அசைவியக்கங்களைக் கொண்ட சூழலில் வாழும் பிள்ளைகளால் அம்மாற்றங்களுக்கு சமூகப் பொருளாதார அரசியல் மாற்றத்தாலும் யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தம் போன்றவற்றாலும் பிள்ளைகள் பெற்றோரைப் பிரிந்து இருத்தல், ஆண்களும் பெண்களும் தமது வேலைப்பளு அதிகரிப்பால் வீடுகளில் முரண்படும் போது பிள்ளைகளுக்கு அடக்குமுறை அதிகமாகி நிம்மதிக் குறைவு ஏற்படல், தனிப்பட்ட குடும்ப பிரச்சினைகள் மற்றும் பாடசாலைசார் பிரச்சினைகள் காரணமாக இடைவிலகல், வகுப்புமட்டச் செயற்பாடுகளில் பொருத்தப்பாடின்மை, மதரீதியான பிற்போக்கான தன்மையும் வாழ்க்கை முறைகளும் காணப்படல், மது பாவனை மற்றும் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாதல், சிறுவர் துஸ்பிரயோகங்கள், குடும்பங்கள் வறியனவாக இருத்தல், சமூகத்தில் ஒதுக்கப்பட்ட குடும்பங்களில் பிள்ளைகள் வாழுதல், கல்விக்குத்தேவையான உதவிகள் போதுமானதாக இல்லாமை, எதிர்பாராமல் நிகழும் பெற்றோர் மற்றும் உடன் பிறந்தோரின் இழப்பு, உடல்ரீதியான நோய்கள், ஊடகங்கள் ரீதியான பொருத்தமற்ற 6.
நகர்புற பாடசாலைகளுடன் ஒப்பிடும் போது கிராமியப் பாடசாலைகளில் மனித பௌதிக வளங்கள் குறைவாகவும் சரிவர பகிரப்படாமலும் உள்ளமை, குறைந்த வருமானமட்டத்தை உடைய பெற்றோர் தமது பிள்ளைகளை வேலைக்கு அனுப்புதல், விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப ஒவ்வொரு கட்சியும் ஆட்சிக்கு வரும்போது புதிய புதிய கலைத்திட்டங்களை முன்வைப்பதால் மாணவர்கள் கற்றல் தொடர்பாக தெளிவற்ற நிலையை அடைதல், இது வரை காலமும் இடம்பெற்று வந்த இனக்கலவரங்கள்; போன்றன கல்வி தடைப்படுவதற்கான காரணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன.7.
இந்நூல்களில் உள்ள கருத்துக்களை தொகுத்து நோக்கினால், இவை மாணவர்களுடைய கல்வி கற்கும் வேகம் குறைவடைவதற்கான காரணங்களையும் மாணவர்கள் கல்விபெறுகின்ற சந்தர்ப்பம் தடைப்படுவதற்கான காரணங்களையும் கற்கின்ற மாணவர்களின் அடைவுமட்டம் குறைவாக இருப்பதற்கான விளக்கங்களையும் பூரணமாகத் தருவதாக உள்ளன.
மாணவர்கள் கல்வியில் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள்
பல்வேறு காரணங்களால் மாணவர்கள் தொடர்ந்து கற்கமுடியாத சூழ்நிலைக்குள் தள்ளப்படுகின்றனர். இதனைத் தடுக்கும் வகையில் அல்லது மானவர்கள் கல்வியில் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில் நூல்களில் சில தீர்வு நடவடிக்கைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.
மாணவர்களின் கல்வி தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில் ஆசிரியர் தமது பாடவேளையில் குறைந்தது பத்து நிமிடமாவது ஒதுக்கி மாணவர்களின் தன்னம்பிக்கை, முயற்சி, இலட்சியம் என்பனவற்றை வளர்க்க உதவிசெய்ய வேண்டும்(மானுடம்,2002).
மேலும் மாணவர்கள் கல்வியில் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளாக வளப்பாய்ச்சல் சமனற்ற தன்மையில் காணப்படும் பாடசாலைகளை இனங்கண்டு அவற்றைக் கல்வித் திணைக்களங்களின் கவனத்திற்கு கொண்டு சென்று அங்குள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்தல், பாடசாலைக்கு வருகின்ற மிகவறுமையான மாணவர்களை இனங்கண்டு அவர்களுடைய பெற்றோருடன் கலந்துரையடி கிராமசேவகர் ஊடாக பிரதேச செயலகத்துக்கு தெரியப்படுத்தி அல்லது பாரளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக சுயதொழில் வாய்ப்பை உருவாக்கி குடும்பத்தவர்கள் உழைக்கும் வழிகளை இனங்காட்டுவதன் ஊடகப் பொருளாதார சிக்கலை தவிர்த்தல், ஒவ்வொரு பாடசாலைக்கும் அங்குள்ள பாடத்திட்டதிற்கும் பொருத்தமான ஆசிரியர்களை நியமித்தல், கல்வித்திட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்தாவண்ணம் சட்டங்ளைக் கொண்டுவர வேண்டும்(சிவநடேஸ்,2004).
எனவே தொகுத்துக்கூறின், கல்வி என்பதற்கு முடிவான ஒரு வரைவிலக்கணத்தைக் கூற முடியாது. கல்வியானது மனிதனின் உயிரோட்டமுள்ள வாழ்க்கையோடு தொடர்புபடுத்தப்படுகின்றது. கல்வியைப் பெறுவதற்கு மாணவர்கள் அல்லது பிள்ளைகள் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றனர். இதனை தீர்ப்பதற்குப் பல நடவடிக்கைகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும் உலகளாவிய ரீதியில் இது பாரியவொரு சவாலாகவே உள்ளது. எனவே கல்வியின் முக்கியத்துவத்தினை ஒவ்வொரு கற்றறிந்த சமுகமும் மற்றவருக்குப் போதிக்க முன்வரவேண்டும். அப்போதுதான் மேல்நோக்கிய சமூக மாற்றத்தை ஒவ்வொரு பிராந்தியத்திலும் ஏற்படுத்தலாம். இத்தகைய செயற்பாடு ஒவ்வொரு நாடும் அபிவிருத்திப் பாதையில் விரைவாகப் பயனிக்க வழிவகுக்கும் என்பதில் எதுவித ஐயமுமில்லை.
திரு.ஏ.எல்.எம்.றிஸ்வி
உளவளத்துணை தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர்.
சிறுவர்  துஷ்பிரயோகம் தொடர்பான மாணவர்களுக்கான விழிப்புணர்வுச் செயலமர்வு


மட்டக்களப்பு கல்வி வலயத்தின் காத்தான்குடி கோட்ட பாலமுனை அலிகார் வித்தியாலயத்தில் மாணவர்களுக்கான சிறுவர்  துஷ்பிரயோகத்திலிருந்து  தம்மைப்பாதுகாத்துக்கொள்வது எவ்வாறு  ?என்ற விழிப்புணர்வுக் கருந்தரங்கொன்றினை காத்தான்குடி ஆசிரிய மத்திய நிலையத்தின் வழிகாட்டல் மற்றும் தொழில் வழிகாட்டலுக்குப் பொறுப்பான ஏ.எல்.எம்.றிஸ்வி அவர்களால் நடாத்தப்பட்டது. இதில் தற்போதைய சூழலில் மாணவர்கள் தம்மை பாதுகாப்பாக எவ்வாறு வைத்துக்கொள்ள வேண்டுமென்ற தெளிவுரைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

Thursday, December 14, 2017

சுகாதார ரீதியில் பிள்ளைகளை எவ்வாறு வளர்ப்பது?


மட்டக்களப்பு மத்தி வலயத்தின் காத்தான்குடி மஞ்சந்தொடுவாய் இக்ரஃ வித்தியாலயத்தில் ஆரோக்கியமான பிள்ளை வளரப்பினை நாம் எவ்வாறு மேற்கொள்ள முடியும் என்ற கருத்தரங்கு மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு நடைபெற்றது. இதில் சிறப்புரையாற்ற காதத்தான்குடி ஆசிரிய மத்திய நிலையத்தின்  உளவளத்துணை மற்றும் தொழில் வழிகாட்டல் அதிகாரியான திரு.ஏ.எல்.எம.றிஸ்வி அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார். பெற்றோர், ஆசிரியர்,மாணவர்களுக்கு அவர் உரையாற்றுவதனையும், இதில் பிள்ளைகளுக்கு பரிசுப்பொருள்களை வழங்கி வைப்பதனையும், காணலாம்.அவர் அருகே வித்தியாலய அதிபர் திரு.ஹனீபா அவர்களும், ஆசிரிய ஆலோசகர் திரு.நவாஸ் (Primary), முன்னால் நகர சபை உறுப்பினர் திரு .அலிசப்ரி அவர்களும் காணப்படுகின்றனர்.  

காத்தான்குடி ஆசிரிய மத்திய நிலையத்தினால் ஆசிரியர்களுக்கான பயிற்சி நெறி


அண்மையில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஓட்டமாவடி, ஏறாவூர், காத்தான்குடி ஆசிரியர்களுக்கான புதிய பிரமாணக்குறிப்பு செயலமர்வினை காத்தான்குடி ஆசிரிய மத்திய நிலையமானது நடாத்தியது. இதில் மூன்று கோட்டங்களினதும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். இவர்களுக்கான பயிற்சி நெறியினை காத்தான்குடி ஆசிரிய மத்திய நிலையத்தின் உளவளத்துணை தொழில்வழிகாட்டல் அதிகாரியான திரு.ஏ.எல்.எம்.றிஸ்வி அவர்கள் கலந்துகொண்டு நடாத்தி வைத்தார். 

  தேசிய கல்வி நிறுவகத்தின் பாரம்பரிய மற்றும் வெளிநாட்டு மொழிகள் பிரிவின் ஊடாக அரபு மொழிப் பாடத்திற்கான மொடியூல் தயாரிக்கும் செயற்திட்டத்திட...