Saturday, January 20, 2018


வலய மட்ட வெளிவாரி மதிப்பீட்டு நடவடிக்கை




18.01.2018அன்று மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி பாடசாலைகளுக்கிடையிலான கோட்டமட்ட மதிப்பீட்டு நடவடிக்கை மட்/மம/நூறாணியா வித்தியாலயத்திற்கும், காத்தான்குடி மட்/மம/ஹிழுரிய்யா வித்தியாலயத்திற்கும் நடை பெற்றது. இதனை வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.ஏ.எஸ்.இஸ்ஸதீன் அவர்கள்  வழிநடாத்தியதோடு, ஏனைய உதவிக்கல்விப்பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள்,  ஆகியோர் இம்மேற்பார்வை நடவடிக்கையில் இணைந்துகொண்டனர்.

  இதில் வலயக்கல்விப் பணிபாளர், மற்றும் பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஆகியோரால் பாடசாலையின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கையினை சிறப்பான முறையில் மேற்கொள்வதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை தமது பாடசாலையில் வழங்க வேண்டும் என்ற கருத்துக்கள் ஆசிரியர்களுக்கு முன்வைக்கப்பட்டன.

மேலும் கடந்த கால அதிபர் அவர்களின் கால எல்லையில் நடைபெற்ற வலயமட்ட வெளிவாரி மதிப்பீட்டின் போது 48 புள்ளிகளையே ஹிழுரிய்யா வித்தியாலயம் பெற்றிருந்தமையோடு, இம்முறை அதிலிருந்து முன்னேற்றம் கண்டு 68 புள்ளிகளைப் பெற்று சிறப்படைந்துள்ளது.

வலயக்கல்விப் பணிப்பாளர், பிரிதிக்கல்விப்பணிப்பாளர்கள், கோட்டக்கல்விப்பணிப்பாளர் , உதவிக்கல்விப்பணிப்பாளர், ஏனயே ஆசிரிய ஆலோசகர்களின் பாராட்டினை  இது அதிபர் அவர்களுக்கு பெற்றுக்கொடுத்துள்ளது. அதிபர் எஸ்.ஐ.யாஸிர் அறபாத்தின் குறுகிய காலத்தினுள் பெற்றுள்ள இந்த வளர்ச்சியானது அனைவரினாலும் பாராட்டுக்குரியதொரு விடயமாகும்

இதனால் இப்பாடசாலையின் பெற்றார்கள், மாணவர்கள், நிருவாக உறுப்பினர்கள் அனைவரும் பெருமையடைகின்றனர்.



  

No comments:

Post a Comment

  தேசிய கல்வி நிறுவகத்தின் பாரம்பரிய மற்றும் வெளிநாட்டு மொழிகள் பிரிவின் ஊடாக அரபு மொழிப் பாடத்திற்கான மொடியூல் தயாரிக்கும் செயற்திட்டத்திட...