Thursday, January 25, 2018

பிள்ளைகளின் எதிர்காலம் அவர்களின் பெற்றோரின் கைகளிலேயே தங்கியுள்ளது.

அன்­றாட உலக வாழ்­வில் பெற்­றோர் பெறும் தலை­சி­றந்த பேறு ‘‘அறி­வு­டைய நன்­மக்­கட் பேறா­கும்.’’ அறி­வைக் கற்­ப­தால்தான் நாம் அத­னைப் பெற­லாம். பெற்­றோ­ரி­ட­மும், குழந்­தை­யி­ட­மும் இயல்­பா­கவே அன்பு இருக்­கின்­றது. பிள்­ளை­யைப் பாது­காக்க வேண்­டும் என்ற பாது­காப்பு உணர்வை இயற்கை பெற்­றோ­ரின் முனை­யில் இயல்­பா­கவே கிர­கித்து வைத்­துள்­ளது. ஆனால் பெற்­றோர்­க­ளைப் பாது­காக்க வேண்­டும் என்ற உணர்வு சில பிள்­ளை­க­ளி­டம் இல்லை. எனவேதான் ‘‘பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு’’ என பழ­மொழி பழைய காலத்­தில் தோன்­றியது என­லாம்.

இளமையில் கல்வி

கல்வி கற்­ப­தற்கு உரிய பரு­வம் இள­மைப் பரு­வ­மா­கும். இத­னால்தான் ‘‘இள­மை­யில் கல்வி சிலை­யில் எழுத்து’’ என்­பர். இள­மைப் பரு­வம் வாழ்க்­கை­யின் ஆரம்பப் பரு­வ­மா­கும். குடும்ப வளம் பெற்று சிறப்­பு­டன் திக­ழ­வும், முது­மைப் பரு­வத்தை அஞ்­சாது எதிர்­கொள்­ள­வும் உறு­து­ணை­யா­வது இள­மைப் பரு­வத்­தில் நாம் பெறும் கல்­வி­யா­கும். கற்­பதை குறை­க­ளின்­றித் தௌிவா­கக் கற்க வேண்­டும் என்றார் வள்­ளு­வர்
‘‘கற்க கச­ட­றக் கற்­பவை கற்­ற­பின்  நிற்க அதற்­குத் தக’’ (குறள் – 391)

கற்க வேண்­டிய நூல்­களை ஒரு­வன் குற்­றம் அறக் கற்க வேண்­டும். கற்ற பின்பு அந்­தக் கல்­விக்­குத் தகுந்து ஒழுக வேண்­டும் என திருக்­கு­ற­ளில் கல்வி அதி­கா­ரத்­தில் தன் ஈர­டி­க­ளால் மிகத் தௌிவா­க வள்ளுவர் கூறியுள் ளார். ஒரு­வன் கல்வி அறி­வு­டை­ய­வன் என்­ப­தன் சாட்­சி­யாக அமை­வது அவ­னது அடக்­க­மான பண்­பா­கும். இத­னால்­தான் அடக்­கம் ஒரு மனி­த­னுக்­குத் தரும் பரிசு தேவ­லோ­கத்­தில் வாழும் பேற்­றைத் தரும் என்­றும் அடங்­காமை  வாழ்­வில் ஔிம­ய­மற்ற, சிறப்­பற்ற, துன்­ப­மான வாழ்­வையே தரும் என்­றும் பொய்­யா­மொ­ழிப் புல­வர் கூறி உள்­ளார். எனவே இளம் தலை­மு­றை­யி­ன­ரான மாண­வர்­கள் கற்­றுக் கொள்ள வேண்­டிய நற்­பண்­பு­க­ளில் அடக்­கம் பணிவு, கீழ்­ப­டி­தல் மிக முக்­கி­ய­மானவை.

  மானிட வாழ்­வில் பெற்­றோர் பெறும் மிகப்­பெ­ரிய செல்­வம் ‘‘அறி­வ­றிந்த மக்­கட் பேறே’’ என வள்­ளு­வர் திருக்­கு­ற­ளில் மக்­கட் பேறு அதி­கா­ரத்­தில் (குறள் – 61இல்) குறிப்­பிட்­டுள்­ளார். பிள்ளை பெற்று விட்­டால் மட்­டும் போதாது. அவர்­க­ளைப் பேணி வளர்க்க வேண்­டும். சொற் கேளாப் பிள்­ளை­யால் குலத்­துக்கு ஈனம்.

காலை எழுந்தவுடன் படிப்பு
‘‘எல்­லாக் குழந்­தை­யும் நல்ல குழந்­தை­தான் மண்­ணில் பிறக்­கை­யிலே அவர் நல்­ல­வ­ரா­வ­தும் தீய­வ­ரா­வ­தும் அன்னை வளர்ப்­பி­னிலே’’ என்­கி­றது பாடல். தொட்­டி­லில் பழ­கிய பழக்­கம் தான் சுடு­காடு மட்­டும், ஐந்­தில் வளை­யா­தது ஐம்­ப­தில் வளை­யாது. எனவே பெற்­றோர்­கள் பிள்­ளை­க­ளுக்கு காலை எழுந்­த­வு­டன் படிப்பு பின்பு கனிவு கொடுக்­கும் நல்ல பாட்டு, மாலை முழு­தும் விளை­யாட்டு என்ற பழக்­கத்தை வழக்­கப்­ப­டுத்­திக் கொண்­டு­வர வேண்­டும்.

 பிள்­ளை­களை தண்­டனை மூலம் திருத்த பெற்­றோரோ, ஆசி­ரி­யர்­களோ முற்­ப­டக்­கூ­டாது. அன்­பி­னால் அறிவு கூறி, கனி­வாகத் திருத்த முற்­பட வேண்­டும். மிரட்டுப­வர்­கள் மற்­றும் தண்­டனை கொடுப்­போர் மீது பிள்­ளை­கள் அன்பு செலுத்­தாது. கடந்த 30 வரு­டங்­க­ளுக்கு மேலாக நடைபெற்ற போரால் எமது நாட்­டில் கல்­வி­யின் முன்­னேற்­றம் 50 வரு­டங்­கள் பின்­நோக்­கிச் சென்று விட்­டது என்று கூற­லாம். இன்­றைய பெற்­றோ­ரின் கடமை முந்­தைய கால எம் கல்­வி­யின் தரத்தை மீண்­டும் கட்டி, எழுப்­பு­வ­தென சப­தம் செய்ய வேண்­டும்.

கல்­விக்­கா­கவே எமது பெற்­றோர்­கள்­ அன்­றி­லி­ருந்து இன்று வரை முத­லீடு செய்து வரு­கின்­ற­னர். இத­னால் பெறும் வரு­மா­னங்­க­ளைக் கொண்டே தமது வாழ்க்­கையை சீராக நடத்­து­கின்­ற­னர். எனவே எமது வீழ்ச்­சி­கள் எழுச்­சி­யின் முதற்­படி. எனவே எமது எதிர்­கால சந்­த­தி­யி­னரை, எதிர்­கா­லத் தலை­வர்­களை உரிய முறை­யில் வழிப்­ப­டுத்தி நல்­வ­ழிக்கு கொண்டு செல்ல வேண்­டி­யது பெற்­றோர்­க­ளி­ன­தும், பாது­கா­வ­லர்­க­ளி­ன­தும் காலத்­தின் கட்­டா­ய­மான கட­மை­யா­கும்.

இன்று வீடு­க­ளில் உள்ள இணைய த் தளங்­க­ளும், தொலைக்­காட்­சி­க­ளும், அலை பே­சி­யும், கம­ராக்­க­ளும் மற்றும் வௌ்ளித் திரை­க­ளும் அதில் காண்­பிக்­கப்­ப­டும் நிகழ்ச்­சி­க­ளும் சில பெற்­றோர்­க­ளும் பிள்­ளை­க­ளும் வௌியில் சென்று கெடும் வாய்ப்பை நிறுத்தி வீட்­டில் இருந்தே கெடும்­படி செய்­துள்­ளன. எனவே சமூக சீர்­கே­டான நிகழ்ச்­சி­களை பெற்­றோரோ, பிள்­ளை­களோ பார்க்­கக் கூடாது. மாண­வர்­களுக்கு அலைபே­சிப் பாவ­னையை முக்­கி­ய­மான தேவைக்­கன்றி மற்­றைய தேவை­க­ளுக்கு பாவிக்க பெற்­றோர் அனு­ம­திக்­கக்­கூ­டாது. தன் பிள்ளை அறி­வில் விற்­பன்­ன­ராகி, பெரி­யோ­ரி­டம் சான்­றோன் என்ற பெயர் பெற வேண்­டும் என்­ப­தையே எந்­தப் பெற்­றோ­ரும் விரும்­பு­வர்.
‘‘ஈன்ற பொழு­திற் பெரி(து)உவக்­கும் தன் மக­னைச் சான்­றோன் எனக் கேட்ட தாய் (குறள் – 69)
இத­னையே வள்­ளு­வ­ரும் மக்­கட் பேறு என்ற அதி­கா­ரத்­தில் மிக அழ­கா­கக் குறிப்­பி­டு­கின்­றார். பிள்­ளை­க­ளுக்கு தண்­டனை வழங்­காது, பிள்­ளை­யைத் தாழ்த்­திப் பேசாது நல்ல அறி­வா­ளி­யாக வர பெற்­றோர் வளர்க்க வேண்­டும். பிழை கண்டு பிடிப்­ப­தும், குற்­றம் சொல்­வ­தும் தமது சொந்த வழக்­க­மாகி விட்­டார்­கள் பெற்­றோர். இந்த நிலை மாற­வேண்­டும்.

பிள்ளைகளின் திறமைகள்
நல்­ல­வற்­றையே பெற்­றோர் செய்து நல்­ல­வற்­றையே பிள்­ளை­க­ளி­டம்  எதிர்­பார்த்து நல்ல பழக்­கத்­தையே கற்­றுக் கொடுக்க வேண்­டும்.
பொது­வா­கப் பார்க்­கு­மி­டத்து பிள்­ளை­க­ளின் திற­மை­கள் எல்­லாம் முழு­மை­யான மலர்ச்சி பெற்று வளர்­வ­தற்கு பெற்­றோ­ரி­னது அன்­பும் ஆத­ர­வும் வழி­காட்­ட­லும் மிக­மிக அவ­சி­யம். அன்­பும், ஆத­ர­வும்  எல்லை கடக்­கு­மா­னால் அமிர்­தம் நஞ்­சா­வது போன்று பிள்­ளை­யின் தன்­னம்­பிக்­கை­யைக் குறைத்து பாத­க­மான விளை­க­ளைப் பிள்­ளை­யின் வாழ்­வில் ஏற்­ப­டுத்தி விடும்.
அப்­ப­டிப் போக­வி­டா­மல் தம்­பிள்­ளை­களை விருப்­பம்­போல நட­மா­ட­வும் எண்­ணங்­களை வௌியி­ட­வும் சுதந்­திரம் கொடுக்க வேண்­டும். பெற்­றோர்­கள் முத­ லில் வாழ்க்­கையை முன்­மா­தி­ரி­யாக்கி இலக்­கி­யப் பற்­று­டன்  அமை­தி­யாக, மகிழ்ச்­சி­யாக நல்ல முறை­யில் அமைத்­துக் கொண்­டால் அதுவே குழந்­தைக்கு எடுத்­துக் காட்­டா­கக் கல்­வியை சிறந்த முறை­யில் கற்க அமை­யும்.

பிள்ளைகளுக்கு மதிப்பு
பிள்­ளை­கள் அவர்­க­ளது வய­துக்­கேற்ப சிந்­தனை செய்­யும் ஆற்­றல் உண்டு. ஆனால் அதற்கு வேண்­டிய வாய்ப்­பை­யும் சுதந்­தி­ரத் தையும் பெற்­றோர் ஏற்­ப­டுத்­திக் கொடுக்க வேண்­டும். பிள்­ளை­க­ளு­டைய கருத்­து­க­ளுக்கு மதிப்­புக் கொடுக்க வேண்­டும். பிள்­ளை­யின் மனப்­போக்கு அதன் வளர்ச்­சிக்கு ஏற்­ற­ப­டியே மலர்ச்சி அடைய அனு­ம­தித்­தாலே பெரி­ய­வ­னா­கின்­ற­போ­தும் எண்­ணங்­கள் சரி­யாக மலர்ச்சி அடை­யும்.

புதிய கல்­வித் திட்­டத்­தால் பழைய பாடக் கல்­வித் திட்­டத்­தில் படித்த பெற்­றோ­ரில் பலர் தங்­கள் பிள்­ளை­க­ளுக்கு வீட்­டில் பாடல் சொல்­லிக் கொடுக்க முடி­யா­மல் இருக்­கின்­றார்­கள். இருந்­தும் பிரத்­தி­யேக வகுப்­புக்­க­ளுக்கு இய­லு­மா­ன­வரை அனுப்பி தங்­க­ளு­டைய உடம்பை உருக்கி படிக்க வைக்­கின்­றார்­கள்.

நாட்­டில் உயர்ந்­த­வ­ராக வர­வேண்­டும் என்­பதே எந்­தப் பெற்­றோ­ரி­ன­தும் விருப்­பம். எனவே நாட்­டின் எதிர்­கா­லத்­தின் தலை­வர்­க­ளாக வர­வேண்­டிய மாண­வர்­கள் ஆசி­யர்­க­ளுக்­கும் பெற்­றோர்­க­ளுக்­கும் பெரி­யோர்­க­ளுக்­கும் மதிப்­ப­ளித்து கல்வி என்­னும் பயி­ரில்  முழு­மை­யான இலக்கினை அடைய வேண்டுமென இறைவனை பிராத்திக்கின்றேன்.

No comments:

Post a Comment

  தேசிய கல்வி நிறுவகத்தின் பாரம்பரிய மற்றும் வெளிநாட்டு மொழிகள் பிரிவின் ஊடாக அரபு மொழிப் பாடத்திற்கான மொடியூல் தயாரிக்கும் செயற்திட்டத்திட...