Thursday, July 11, 2019

ஆசிரிய பிரமாணக் குறிப்பு தடைதாண்டல் பரீட்சை மேற்பார்வை




   கடந்த 06.07.2019 - 08.07.2019 காலப்பகுதியில் தரம் 2 ii ஆசிரியர்களுக்கான தடைதாண்டல் செயலமர்வு மட்டக்கப்பு மத்தி கல்வி வலயத்தின் தொழில் வாண்மை விருத்தி ஆசிரிய மத்திய நிலையத்தினால் நடாத்தப்பட்டு வந்தது.
   இதில் 2ம் கட்ட குழுவுக்கு இணைப்பாட விதான செயற்பாடு மற்றும் முகாமைத்துவம் தொடர்பான மொடியூல் நடைபெற்றது. ஆசிரிய வாண்மை விருத்தியினை நோக்காகக் கொண்டு நடாத்தப்படுகின்ற இப்பயிற்சியானது ஆசிரியர்களின் அறிவு, திறன் ,மனப்பாங்கு, நடத்தை ஆகியவற்றில் பாரிய பங்களிப்பினைச் செய்வதோடு, மாணவர்களையும் இது சென்றடைகின்றது. 
   ஆசிரியர்களுக்கான தொழில் வாண்மை விருத்திச் செயற்பாட்டினை காத்தான்குடி ஆசிரிய மத்திய நிலையம் தொடர்ச்சியாக கட்டம் கட்டமாக நடாத்தி வருவதோடு, அதன் மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதல்களை மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.எஸ்.எம்.எம்.எஸ்.டொக்டர் உமர் மௌலான (SLEAS)  அவர்கள் வழங்கிவருவதோடு, அதன் விரிவுரைகளையும், நெறிப்படுத்தல்களையும் சிறப்பான முறையில் மேற்கொள்கின்றார்கள்.
    இங்கு நாம் மேலே இந்நடவடிக்கையில் ஈடுபட்ட வலயக்கல்விப் பணிப்பாளர் அவர்களையும், ஆசிரிய மத்திய நிலையத்தின் விரிவரையாளராகவும், முகாமைத்துவ நடவடிக்கைகளையும்  மேற்கொண்டு வருகின்ற  ஏ.றியாஸ்  (SLTES) அவர்களையும் பங்குபற்றுனர்களாக கலந்துகொண்டுள்ள ஆசிரியர்களையும் இங்கு காணலாம்.

No comments:

Post a Comment

  தேசிய கல்வி நிறுவகத்தின் பாரம்பரிய மற்றும் வெளிநாட்டு மொழிகள் பிரிவின் ஊடாக அரபு மொழிப் பாடத்திற்கான மொடியூல் தயாரிக்கும் செயற்திட்டத்திட...