Wednesday, July 17, 2019

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் வலய மட்ட மீளாய்வுக் கூட்டம் - 2019







மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் புதன் கிழமை தோறும் வலயக் கல்விப் பணிப்பாளர் அவர்களின் தலைமையில் வலய மட்ட பாடசாலைகளின் பெறுபேற்றினை அதிகரித்தல், வலய மட்ட நடவடிக்கைகளை முன்னேற்றமடையச் செய்தல் தொடர்பாக மீளாய்வுக் கூட்டம் நடைபெறுவது வழமையாகும். இதன் தொடரில் 17.07.2019 அன்று பாடசாலை மட்ட தரிசிப்பு நடவடிக்கையினை மேற்கொள்கின்ற பிரதிக் கல்விப்பணிப்பாளர்கள்,  பிரதேசக் கல்விப் பணிப்பாளர்கள் ,உதவிக்கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், பாட இணைப்பாளர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கான வழிகாட்டுதல்களினை இம்முறையும் வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.எஸ்.எம்.எம்.எஸ்.டொக்டர் உமர் மௌலான (SLEAS)  அவர்களினால் வழங்கப்பட்டது

இக்கலந்துரையாடலின் போது வலயக் கல்விப் பணிப்பாளர் அவர்களால் பல விடயங்கள் தொடர்பாக அவதானம் செலுத்தப்பட்டது. வலயத்தினை முன்னேற்றம் அடையச் செய்வதில் பங்களிப்புச் செய்கின்ற மாணவர்களின் பாட ரீதியிலான அடைவுகளை அதிகரிப்புச் செய்வதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டது. மேலும் தமது பாடத்தில் புள்ளி அதிகரிப்பினை மேற்கொள்வதற்கான திட்டமிடல்களை கொண்டுவருமாறும் கூறப்பட்டு அது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

தற்பொழுது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பரீட்சை ஆணையாளரினால் பரீட்சைகள் எதிர்காலத்தில் டிஜிடல் யுகத்தில் இணைய இருப்பது தொடர்பாக கலந்துரையாடினார்கள் இதற்கான ஆயத்த நிலையினை இன்றிலிருந்தே நாம் ஒவ்வொரும் மேற்கொள்ள வேண்டும் என்ற விடயத்தினையும் வலியுறுத்தினார்கள். இவ்வலயத்தின் முன்னேற்ற நடவடிக்கையில் தான் எப்போதும் தங்களுடன் கைகோர்ப்பேன். அதில் தாங்கள் ஒரு போதும் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனக் கூறி வலயக்கல்விப் பணிப்பாளர் தொடர்பில் தமது உத்தியோகத்தர்களின் நம்பிக்கையினை கட்டியெழுப்பினார்கள். பாடசாலை தரிசிப்பு வேளையில் சக உத்தியோகத்தர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. இதற்கான தீர்வுகளையும், வழிகாட்டுதல்களினையும் சிறப்பான முறையில் வலயக்கல்விப் பணிப்பாளர் அவர்கள் முன்வைத்தார்கள். 

ஆசிரிய மத்திய நிலையத்தினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இணையதள முகவரியினை அறிமுகம் செய்தமையோடு சக உத்தியோகத்தர்கள் மேற்கொள்கின்ற நடவடிக்கையினை இம்முகவரிக்கு அனுப்பி அவைகளை பதிவிடுமாறும் வேண்டிக்கொண்டார்கள். மேலும் இந்த முயற்சியினை மேற்கொண்ட ஆசிரிய மத்திய நிலைய உத்தியோகத்தர்களையும் பாராட்டினார்கள்.

No comments:

Post a Comment

  தேசிய கல்வி நிறுவகத்தின் பாரம்பரிய மற்றும் வெளிநாட்டு மொழிகள் பிரிவின் ஊடாக அரபு மொழிப் பாடத்திற்கான மொடியூல் தயாரிக்கும் செயற்திட்டத்திட...