Thursday, July 25, 2019

பிராந்திய ரீதியில் தொழில் வழிகாட்டல் நிலையங்களை நிறுவதல் - 2019

ஜனாதிபதி செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் ஸ்மார்ட் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட வாழ்ககைத் தொழில் வழிகாட்டல் மத்திய நிலையத்தின் செயற்பாடுகளை இணைப்பாக்கம் மற்றும் மேற்பார்வை செய்வதற்காக பிரதேச செயலாளர் U.உதயசிறிதர் (SLAS) அவர்களின் தலைமையில் கடந்த 25.07.2019 அன்று பிரதேச குழு ஒன்று நிறுவப்பட்டது.

இது பிரதேச ரீதியில் தொழில் வாய்ப்பினை எதிர்பார்திருக்கின்ற தொழில் முயற்சியாளர்களை முன்னேற்றமடையச் செய்தல், தொழில் வழிகாட்டல் வேலைத்திட்டங்களை அறிமுகப்படுத்துதல், பாடசாலை மட்டத்தில் மாணவர்களின் தொழில் வழிகாட்டலுக்கான வேலைத்திட்டங்களை வழங்குதல் போன்ற பல்வேறு விடயங்கள் பற்றி ஆராயப்பட்டது.

இதன் போது மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தரான ஏ.எல்.எம்.றிஸ்வி அவர்கள் இதில் பங்கேற்றார். தமது கல்வி வலயத்தின் இளைஞர்களுக்கான தொழில் வழிகாட்டல் வேலைத்திட்டத்தின் அவசியப்பாடு, பிரதேச செயலக உத்தியோகத்தர்களுடன் இணைந்து இச்செயற்பாட்டினை மாவட்ட செயலாளர் அவர்களின் அறிவுருத்தலின் பிரகாரம் முன்னெடுக்கப்பட வேண்டுதல் விடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாகவும் இவர் தனது கருத்துக்களை முன்வைத்தார்.

பிரதேச செயலாளர் அவர்களினால் இத்திட்டத்தினை முன்னெடுத்துச் செல்வதற்கு ஜனாதிபதி செயலகம் எதிர்பார்த்திருப்பது தொடர்பாகவும், அனைவரது ஒத்துழைப்புக்களும் வழங்கப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பாகவும் கருத்துரைக்கப்பட்டது.

இனிவரும் காலங்களில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் தங்களின்  பாடசாலை மட்ட செயற்பாடுகளின் போது மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் தொழில் வழிகாட்டல் அலகுடன் இணைந்து செயற்படுவார்கள் என்ற உறுதியும் வழங்கப்பட்டது.


No comments:

Post a Comment

  தேசிய கல்வி நிறுவகத்தின் பாரம்பரிய மற்றும் வெளிநாட்டு மொழிகள் பிரிவின் ஊடாக அரபு மொழிப் பாடத்திற்கான மொடியூல் தயாரிக்கும் செயற்திட்டத்திட...