Monday, July 22, 2019

கணிதப்பாட ஆசிரியர்களுக்கான செயலமர்வு - 2019





மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் கணிதப்பாடத்தினை கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கான தொடர்ச்சியான செயலமர்வுகள் கடந்த 3 வாரங்களாக ஏறாவூர் கோட்டத்தின் மட்/மம/முனீறா பாலிகா மகாவித்தியாலயத்தில்  நடைபெற்றது.

இன்று 22.07.2019 ல் இதன் இறுதி நாள் ஆகும். கடந்த வாரங்களில் நடைபெற்ற இச்செயலமர்வானது. பிரதி சனி , ஞாயிறு, திங்கள் தொடக்கம் 03 நாட்களாக 03 வாரங்களுக்கு  வெற்றிகரமாக நடைபெற்றது. இதில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில்  தரம் 06 தொடக்கம் 11 வரையான அனைத்து வகுப்புகளுக்கும்  கணிதம் கற்பிக்கின்ற ஆசிரியர்கள் பங்கேற்றனர். 

இச்செயலமர்வானது பிரதிக்கல்விப் பணிப்பாளரும் தற்போதைய ஏறாவூரின் கோட்டக் கல்விப் பணிப்பாளருமான  திரு. டி.எம்.எம்.அஹமட்  (SLEAS)  அவர்களினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததோடு, இதில்  கணிதப்பாட ஆசிரிய ஆலோசகரான பதியுத்தீன் அவர்களும், காத்தான்குடி ஆசிரிய மத்திய நிலையத்தின் விரிவுரையாளர் திரு.ஏ.றியாஸ் (SLTES) அவர்களும் வளவாளர்களாக பங்கேற்றனர்.

கணிதப்பாட அடைவுகளை மேலோங்கச் செய்தல், பாடரீதியில் மாணவர்களின் மனோநிலைகளில் கணிதம் கற்றல் இலகு என்ற எண்ணத்தினை ஏற்படுத்துதல், பாடசாலையின் வளங்களைப் பாவித்து பாட அடைவுகளை அதிகரிக்கச் செய்வதோடு எதிர்வரும் க.பொ.சா.தர பரீட்சைக்கான வழிகாட்டுதல்கள் என்ற பயிற்சி இவர்களுக்கு இங்கு அளிக்கப்பட்டது.மேலும் ஆசிரிய வளநிலையத்தின் விரிவுரையாளர் அவர்களினால் நவீன முறையில் பாடக்குறிப்புக்களை எவ்வாறு எழுதுதல் வேண்டும் என்ற பயிற்சியும் இங்கு வழங்கப்பட்டது. 

வலயக் கல்விப்பணிப்பாளர் திரு.எஸ்.எம்.எம்.எஸ்.டொக்டர் உமர் மௌலான (SLEAS),அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் தற்பொழுது மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

நாம் மேலே இச்செயலமர்வில் கலந்துகொண்ட விரிவுரையாளர்களையும், இதில் பங்கேற்ற ஆசிரியர்களினையும் காணலாம்.

6 comments:

  1. தற்போதைய வலயக் கல்விப் பணிப்பாளர் அவர்களின் வழிகாட்டுதலில் இன்று மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் பல முன்னேற்றகரமான வேலைத்திட்டங்களை செய்கின்றது. உண்மையில் இது பாராட்டப்பட வேண்டியதொரு விடயமாகும். மேலும் தங்களின் வேலைத்திட்டங்களை இந்த இணைய தள முகவரியில் எமக்கு பார்வையிடக்கிடைப்பதும். சிறப்பானதொரு விடயமாகும்.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் பல சாதனைகளைப் புரிந்து வருகின்றது. ஆனால் அதனை வெளியுலகிற்கு கொண்டு செல்வதில்லை என்றதொரு குறைபாடு காணப்பட்டது. அக்குறைபாடு இந்த இணைய தளத்தின் உதவியினால் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. இம்முகவரியில் தங்களது முன்னேற்றகரமாக வேலைத்திட்டங்களை பதிவிடுவதற்கு எமது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம். நன்றி - வாழ்த்துக்கள் (காத்தான்குயிலிருந்து நதஸ்)

    ReplyDelete
  3. மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் பல அரிய சாதனைகளை இன்று புரிந்து வருகின்றது. இவற்றினை தெரியப்படுத்துகின்ற தங்களது இணைய தளத்திற்கு எனது நன்றிகளும், வாழ்த்துக்களும்.அதேபோன்று இன்று வலயக் கல்வி அலுவலகத்தினை முன்னேற்றப் பாதையில் இட்டுச்செல்கின்ற வலயக் கல்விப் பணிப்பாளர் அவர்களுக்கும் எனது நன்றிகள்.

    ReplyDelete
  4. மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் பல அரிய சாதனைகளை இன்று புரிந்து வருகின்றது. இவற்றினை தெரியப்படுத்துகின்ற தங்களது இணைய தளத்திற்கு எனது நன்றிகளும், வாழ்த்துக்களும்.அதேபோன்று இன்று வலயக் கல்வி அலுவலகத்தினை முன்னேற்றப் பாதையில் இட்டுச்செல்கின்ற வலயக் கல்விப் பணிப்பாளர் அவர்களுக்கும் எனது நன்றிகள்.

    ReplyDelete
  5. மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் பல அரிய சாதனைகளை இன்று புரிந்து வருகின்றது. இவற்றினை தெரியப்படுத்துகின்ற தங்களது இணைய தளத்திற்கு எனது நன்றிகளும், வாழ்த்துக்களும்.அதேபோன்று இன்று வலயக் கல்வி அலுவலகத்தினை முன்னேற்றப் பாதையில் இட்டுச்செல்கின்ற வலயக் கல்விப் பணிப்பாளர் அவர்களுக்கும் எனது நன்றிகள்.

    ReplyDelete
  6. உண்மையில் சாதனைகள் புரியப்படும் போது அவர்களை உற்காச மூட்ட வேண்டும். கடந்த காலங்களில் இது மந்த கதியில் மட்டக்களப்பு மத்தி வலயத்தில் காணப்பட்டது. இன்று இது இல்லாமலாக்கப்பட்டு புதிய வலயக் கல்விப் பணிப்பாளரின் வழிகாட்டுதலில் பல முன்னேற்றங்கள் நாளாந்தம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இதற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் அவர்கள் நாங்கள் இவ்வலயம் சார்பாக வாழ்த்துகின்றோம். இந்த சாதனைகளை உலகிற்கு வெளிக்காட்டுகின்ற இந்த இணைய தளத்திற்கும் எமது நன்றிகள்.

    ReplyDelete

  தேசிய கல்வி நிறுவகத்தின் பாரம்பரிய மற்றும் வெளிநாட்டு மொழிகள் பிரிவின் ஊடாக அரபு மொழிப் பாடத்திற்கான மொடியூல் தயாரிக்கும் செயற்திட்டத்திட...