Sunday, July 28, 2019

காத்தான்குடி கோட்ட பாடசாலை ஆசிரியர்களுக்கான கணக்காய்வு செயலமர்வு - 2019




மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி கோட்ட அதிபர்களுக்கு பாடசாலை மட்ட கணக்காய்வு பற்றி தெளிவுபடுத்தும் நோக்குடனான செயலமர்வு கடந்த 27.07.2019 அன்று காத்தான்குடி ஆசிரிய மத்திய நிலைத்தில் வலயக் கல்விப்பணிப்பாளர் திரு.எஸ்.எம்.எம்.எஸ்.டொக்டர் உமர் மௌலான (SLEAS), அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இடம்பெற்றது. இதில் வளவாராக  திரு.அ.லெ.மாஹிர் கணக்காய்வாளர் (Audit) அவர்கள்  கலந்துகொண்டார்கள்.

பாடசாலை மட்ட தரிசிப்புக்களின் போது அவதானிக்கப்பட்ட விடயங்களினை அடிப்படையாகக் கொண்டு அதிபர்களுக்கான கணக்காய்வு பற்றிய விளக்கம் வழங்கப்பட வேண்டியதன் அவசியப்பாடு வலயக்கல்விப்பணிப்பாளர் அவர்களினால் கண்டறியப்பட்டது.

எனவே இதன் முதல் கட்டமாக காத்தான்குடி கோட்ட அதிபர்களுக்கு இச்செயலமர்வு நடாத்தப்பட்டதோடு, ஏனைய ஏறாவூர் மற்றும் கோறளைப்பற்று மேற்கு அதிபர்களுக்கான செயலமர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை 28.07.2019 நடைபெற்றது.

தற்போதைய வலயக்கல்விப்பணிப்பாளர் அவர்களின் வருகையின் பின்னர் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயமானது அதிபர், ஆசிரியர்கள்,மாணவர்கள் மற்றும் பெற்றார்களுக்கான பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களினை சிறப்பான முறையில் முன்னெடுப்பதோடு, பலரது பாராட்டுக்களினையும்  வரவேற்பினையும் பெற்றுவருது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

நாம் இச்செயலர்வின் சில காட்சிகளை மேலே காணலாம்.

No comments:

Post a Comment

  தேசிய கல்வி நிறுவகத்தின் பாரம்பரிய மற்றும் வெளிநாட்டு மொழிகள் பிரிவின் ஊடாக அரபு மொழிப் பாடத்திற்கான மொடியூல் தயாரிக்கும் செயற்திட்டத்திட...