Monday, July 1, 2019

இணைப்பாட விதானச் செயற்பாடுகளும் மற்றும் பாடசாலை மட்ட முகாமைத்துவமும்





காத்தான்குடி ஆசிரிய வாண்மை விருத்தி மத்திய நிலையத்தினால் கடந்த 29.06.2019 தொடக்கம் 01.07.2019 வரை தரம் 2 ii ஆசிரியர்களுக்கான இணைப்பாட விதானச் செயற்பாடுகள் மற்றும் பாடசாலை மட்ட முகாமைத்துவமும் எனும் கருப்பொருளில் தடைதாண்டலுக்கான செயலமர்வு நடைபெற்றது.

இதில் பாடசாலை மட்டத்தில் இணைப்பாட விதானச் செயற்பாடுகளை சிறப்பான முறையில் எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்றும், வினைத்திறன் மற்றும் விளைதிறன் கொண்ட பாடசாலையின் உருவாக்கத்தில் ஆசிரியர்களின் பங்களிப்பு எவ்வளவு தூரம் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் பயிற்சியளிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளர் திரு எஸ்.எம்.எம்.எஸ்.டொக்டர் உமர் மௌலான அவர்கள் பாடசாலை முகாமைத்துவத்தில் பாடசாலை மட்ட கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள், பெற்றோர் ஆசிரியர் உறவுகள், மேலதிக பாடசாலை அபிவிருத்தி வேலைத்திட்டம், ஆசிரியர் வாண்மை விருத்தி  இணைப்பாட விதானச் செயற்பாடுகளின் ஊடாக பாடசாலையினை வினைத்திறன், விளைத்திறன் கொண்டதாக எப்படி கையாளலாம். பாடசாலை மட்டத்தில் ஆசிரியர்களின் பங்களிப்பு என்னவென்ற பல்வேறு விடயங்களினை மிகவும் தெளிவாகவும், நேர்த்தியாகவும் வலயக் கல்வி பணிப்பாளர் அவர்களினால் முன்வைக்கப்பட்டது. இதில்  ஆசிரிய வாண்மை விருத்தி மத்திய நிலையத்தின் முகாமையாளர் திரு.எஸ்.ஷரீப்தீன் மற்றும் உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.எம்.எல்.எம்.முதர்ரிஸ் அவர்களும் காணப்படுகின்றனர்.












































































No comments:

Post a Comment

  தேசிய கல்வி நிறுவகத்தின் பாரம்பரிய மற்றும் வெளிநாட்டு மொழிகள் பிரிவின் ஊடாக அரபு மொழிப் பாடத்திற்கான மொடியூல் தயாரிக்கும் செயற்திட்டத்திட...